விமர்சனம்: மனிதன் தெய்வமாகலாம் - செல்வ ராகவன் நடிப்பு ஆஹா... திரைக்கதை?

Manithan Deivamagalam
Manithan Deivamagalam
Updated on
ரேட்டிங்(2.5 / 5)

டேனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன், கௌசல்யா, குஷி ரவி நடிப்பில் வெளிவந்துள்ள படம் மனிதன் தெய்வமாகலாம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் வசித்து வருகிறார் செல்வராகவன். இந்த கிராமத்தில் மருத்துவ வசதி, சாலை வசதி என்ற எந்த வசதிகளும் இல்லை. இதற்காக ஊர் பெரியவர் ஒருவர் லோக்கல் அரசியல் பிரமுகரிடம் மனு கொடுக்கிறார். இருந்தாலும் எந்த வசதியும் வரவில்லை. ஒரு நாள் அந்த பெரியவருடன் இணைந்து செல்வராகவனும் மனு தர செல்கிறார். செல்லும் இடத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு அந்த அரசியல் பிரமுகருக்கும், செல்வராகவனுக்கும் இடையே மோதலாக உருவெடுகிறது. ஒரு நாள் மர்மமான முறையில் செல்வராகவனின் மனைவி இறந்து போகிறார். மனைவி மரணத்திற்கும் அரசியல் பிரமுகருக்கும் என்ன தொடர்பு என்று சொல்கிறது கதை.

இந்த படத்தின் ஒரு சில பாசிட்டிவான விஷயங்களை பார்க்கலாம். இந்த படத்தின் மிகப்பெரிய பலம், சில பலவீனங்களை சமன் செய்யும் ஒரே அம்சம் ரவி வர்மாவின் ஒளிப்பதிவுதான். இருட்டான சாலை வசதி இல்லாத மலை கிராமம், அருகருகே இரண்டு வீடுகள், லைட்டிங் என ரவி வர்மாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு காட்சி விருந்தாக அமைகிறது.

செல்வராகவனின் சோகம் கலந்த உருக்கமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக மனைவி இறந்த பின்பு அழுது புரண்டு அழும் இடத்தில் செல்வராகவன் நம்மை லேசாக அழ வைத்துவிடுகிறார். ஹீரோயின் குஷி ரவி மிக சரியான தேர்வு. கணவனுக்காக பரிந்து பேசும் இடத்திலும், வில்லனை எதிர்த்து பேசும் இடத்திலும் நடிப்பில் பக்குவம் தெரிகிறது. கௌசல்யா நீண்ட இடைவெளிக்கு பின் கம் பேக் தந்துள்ளார். ஓரளவு நல்ல நடிப்பை தந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: LIK - இளசுகளுக்கு மட்டும்!
Manithan Deivamagalam

இனி சில மைனஸ் பாயிண்ட்ஸ்... ஒளிப்பதிவும், நடிகர் நடிகைகள் தேர்வு, நடிப்பு இரண்டும் சிறப்பாக இருந்தும் கதை சொல்லப்பட்ட விதத்தில் எந்த சுவையான, ரசிக்கும் படியான விஷயங்களும் இல்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளில் என்ன நடக்கும் என்பதை முன்பே தெரிந்து கொள்ளும் அளவில்தான் திரைக்கதை இருக்கிறது. மைம் கோபி இது போன்ற கேரக்டரில் பல படங்களில் நடித்து விட்டார். இவரின் கேரக்டரை சற்று மாற்றி யோசித்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும்.

நடிப்பிற்கும், ஒளிப்பதிவிற்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, கதை சொன்ன விதத்தில் தந்திருந்தால் மனிதன் தெய்வமாகலாம் ஒரு நல்ல படமாக வந்திருக்கும்.

மனிதன் தெய்வமாகலாம் - நடிப்பு, ஒளிப்பதிவு மட்டும் சூப்பர்.

logo
Kalki Online
kalkionline.com