மீசைய முறுக்கு 2 விமர்சனம்: ஆதியின் இசை ஜெயித்ததா? சமத்துவப் பேச்சு பலித்ததா?

1979 கானா முதல் 2026 டெலிவரி பாய் வரை... ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு 2 திரைவிமர்சனம்!
மீசைய முறுக்கு 2
மீசைய முறுக்கு 2
Updated on: 
ரேட்டிங்(2.5 / 5)

ஹிப் பாப் தமிழா ஆதி எழுதி இயக்கி, நடித்து இசையமைத்து வந்திருக்கும் படம் மீசைய முறுக்கு 2. இப்படத்தை குஷ்பூ சுந்தர் மற்றும் ACS அருண்குமார் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.

1979 ஆம் காலகட்டம். பிரபல மியூசிக் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வரும் கருணா ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஒரு கானா பாடலை கேட்கிறார். இந்த கானா பாடலை பாடியவர் யார்? என்று விசாரிக்கிறார். சென்னையில் மெரினா பகுதியில் வாழும் ஆதி என்று தெரிந்து கொள்கிறார்.

ஆதியையும் மற்ற பாடகர்களையும் அழைத்து தனது ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்ய செல்கிறார். ஆனால் கருணாவின் தந்தை, "இது சாஸ்திரிய சங்கீதம் பாடும் இடம் இங்கே இது போன்ற கானா பாடலை பாட முடியாது" என்று சொல்லி ஆதியையும் அவரது குழுவினரையும் அவமானப்படுத்துகிறார்.

ஆதி "இன்று காலம் இப்படி இருக்கிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மாறும்போது எங்கள் கானா மிகப் பெரிய இடத்தை அடையும் திறமையை மட்டும் பாருங்கள் வந்த இடத்தை பார்க்க கூடாது" என்று கோபத்துடன் சொல்லிவிட்டு செல்கிறார். 

தற்பொழுது 2026. இப்போது ஆதி இளைஞராக இருக்கிறார். இவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சினிமாவின் கதவுகள் இவருக்கு திறக்கவில்லை. நண்பருடன் சேர்ந்து பார்ட்டி, காதல் என்று சுட்டிக் கொண்டிருக்கிறார். தந்தை பஸ் டிரைவராக இருக்கிறார்.

மீசைய முறுக்கு 2
மீசைய முறுக்கு 2

இவரது தாத்தா கருணாஸ் இவரது பொறுப்பின்மையை பார்த்து உனது அப்பா கடந்த காலத்தில் என்ன செய்தார் தெரியுமா? நீ எப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன் தெரியுமா? என்று ஒரு பிளாஷ் பேக்கை சொல்கிறார் அந்த பிளாஷ்பேக்கை கேட்டது பிறகு மனம் மாறும் ஆதி தனது சினிமா ஆசைகளை கைவிட்டு உணவு டெலிவரி செய்யும் பணிக்கு செல்கிறார். இதை பார்த்த தந்தை உனது முயற்சியை கைவிட்டு விடாதே என்று ஊக்கப்படுத்துகிறார்.

பிளஸ்..

படத்தின் பிளஸ் என்பது ஆதியின் இசை தான். ஆதியில் இசையில் வந்திருக்கும் மூன்று பாடலுமே நன்றாக ரசிக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் தன்னம்பிக்கை தரும் பாடல் நன்றாக உள்ளது. 1979, 1999 மற்றும் 2026 இந்த மூன்று காலகட்டங்களில் வரும் ஆதியில் 1979 இல் வரும் ஆதி மட்டுமே நிற்கிறார். தனது கானா கலை கேவலப்படுத்தப்படும் போது அதற்காக பேசும் இடம் மிகவும் நன்றாக இருக்கிறது.

கிளைமாக்ஸ் முன்பு இருக்கக்கூடிய 20 நிமிடங்கள் படத்தில் சிறப்பு ஆதி ஒரு சில இடங்களில் நன்றாகவும் ஒரு சில இடங்களில் மிக சாதாரணமாகவும் நடத்தியிருக்கிறார். 2026 சமகாலத்தில் வரும் மாதிரி இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். ரம்யா ரங்கநாதன் அழகும் ஓரளவு நடித்தும் கலந்து இருக்கிறார். நாசர், கருணாஸ் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் மிகவும் நன்றாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
மண்டாடி விமர்சனம்: சூரிக்கு இந்த கதை வொர்த்தா? இல்லையா?
மீசைய முறுக்கு 2

மைனஸ்..

சமகாலத்தில் 2026 இல் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாபாத்திரம் சரியாக உருவாக்கப்படவில்லை. இந்தப் பகுதியின் காட்சிகள் பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை. மேலும் 1980 மற்றும் 90 கால கட்டங்களில் வெளிவந்த சில படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தவறானவர்களாக சித்தரிக்கும் போக்கு இருந்தது. அதேபோல இந்த படத்திலும் கடைபிடித்து இருக்கிறார் ஆதி. இன்றைய காலகட்டத்தில் பல விஷயங்கள் மாறிவிட்ட பிறகு இன்றும் பலகை வைத்து தொங்கிக் கொண்டிருப்பது நியாயமா ஆதி.?

சைவ உணவு பழக்கத்தின் பின்னணியில் வந்திருக்கும் ஒரு பெண் திருமணமான பிறகு மீன் வாங்க செல்லும் காட்சிகள் எல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பே பல டைரக்டர் படத்தில் வைத்திருக்கிறார் வைத்து விட்டார்கள். இதை ஆதி அப்படியே ரிப்பீட் ஆக தன் படத்தில் வைத்திருக்கார். சமத்துவத்தைப் பற்றி பேச வேண்டிய படத்தில் தேவையில்லாத இது போன்ற பாரபட்சமான காட்சிகள் இருப்பது ஏன் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுகிறது.

இதையும் படியுங்கள்:
ரியோ ராஜின் ராம் அண்ட் லீலா விமர்சனம்: ஏலியன் காதலியும் 6 மணி சஸ்பென்சும் – படம் எப்படி இருக்கு?
மீசைய முறுக்கு 2

சுமார் இரண்டு மணி 30 நிமிடங்கள் நீளமுள்ள இந்த படத்தில் முதலில் வரும் 20 நிமிட காட்சிகளும் கடைசியில் வரும் 15 நிமிட காட்சிகளுமே நன்றாக எழுதப்பட்டு மனதில் நிற்கின்றன. இடையில் வரும் காட்சிகள் பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை. மேலும் நகைச்சுவை என்ற பெயரில் வரும் காட்சிகள் எல்லாம் நமக்கு எரிச்சலை தான் தருகின்றன. (குறிப்பு- யோகிபாபுவும் இருக்கிறார்.)மூன்று ஹீரோயின்கள் இருந்தும் ரம்யா ரங்கநாதன் மட்டும் தான் நடிப்பில் மனதில் நிற்கிறார்.

முடிவாக எடுத்துக் கொண்ட கருத்து சரிதான். ஆனால் இதை இந்த கருத்தை கொண்ட படங்கள் இதற்கு முன்பே வந்து விட்டன. திரைக்கதையும் சுமாரான அளவிலே உள்ளது. இதற்கு சமத்துவத்தை பேச வேண்டிய படத்தில் சிறிது ஜாதி பூச்சு பூசி விட்டதால் மீசைய முறுக்கு 2 மீசையை முறுக்கு 1 போல மனதில் நிற்கவில்லை.

படத்தின் பின்னணி, ஆதியின் இசை பலம் மற்றும் திரைக்கதையில் உள்ள சாதிய/சமூக முரண்பாடுகளைப் பற்றிய நேர்மையான விமர்சனப் பார்வை வாசகருக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com