

ஒரு சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற கதாநாயகியாக இருந்தவர் நமீதா, இன்றும் கூட ரசிகர்களிடம் அவருக்கு உள்ள மவுசு குறையவில்லை. விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நமீதா அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தில் விஜய்யுடனும், 'பில்லா' திரைப்படத்தில் அஜித்துடனும் சேர்ந்து நடித்திருந்தார். அந்த திரைப்படங்களில் இவர் வரும் காட்சிகளுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. "எங்கள் அண்ணா , ஏய் மற்றும் இங்கிலீஷ்காரன்" திரைப்படத்தில் இவரது நகைச்சுவையான நடிப்பு பலராலும் பேசப்பட்டது. இவரது உயரம் காரணமாக சத்யராஜ் மற்றும் சரத்குமார் போன்ற உயரமான நடிகர்களுடன் அதிக திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார்.
நமீதாவின் அணியும் உடைக்கும் பேச்சுக்கும் தனி ரசிகர் வட்டாரமே தமிழ்நாட்டில் இருந்தது. தொடக்கத்தில் எடை குறைவாக இருந்த நமீதா பின்னர் சிறிது எடை கூடிய தோற்றத்தில் இருந்ததால், அன்றைய சீனியர் தமிழ் கதாநாயகர்களுடன் அதிக திரைப்படங்களில் நடித்தார். நகைச்சுவை மற்றும் ஸ்டைலான பேச்சினால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை அவர் பிடித்திருந்தார். பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த அவர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் குறைத்துக் கொண்டார். நடிக்கும் காலத்திலேயே எடை அதிகமாக இருந்த நமீதா திருமணத்திற்கு பின்னர் இன்னும் அதிக எடை கொண்டவராக மாறினார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் , தனது உடல் எடையை குறைத்து , தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்த தோற்றத்தை மீண்டும் வெளிக்கொணந்துள்ளார். நமீதாவின் அசாத்திய இந்த எடை குறைப்பு , எடை கூடிய பல பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகவும் தன்னம்பிக்கை கொடுப்பதாகவும் இருக்கிறது.
திருமணத்திற்கு பின்னர் இரட்டை குழந்தைகளுக்கு தாயான நமீதா , கர்ப்ப காலத்திற்குப் பிந்தைய இயல்பான எடை கூடல் காரணமாக மேலும் அதிக எடை பெற்றிருந்தார். ஆயினும் கடந்த 3 ஆண்டுகளாக உடற்பயிற்சி கூடத்தில் சராசரியாக உடற்பயிற்சி செய்து தனது எடையை குறைத்துள்ளார். நடிகைகள் பெரும்பாலும் ஒரு சில மாதங்களிலேயே அதிவேகமாக எடை குறைப்பு செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக அவர்கள் நாள் முழுவதும் ஜிம்மில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இது அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உடல் பலவீனத்தையும் எலும்பு தேய்மானங்களையும் ஏற்படுகிறது. மேலும் ஒரு சில நடிகைகள் குறுக்கு வழிகளில் எடை குறைக்கும் வழிகளை தேடி அலைகின்றனர். இதன் காரணமாக கொழுப்பு நீக்கும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
இது போன்ற சிகிச்சைகள் ஒரு சிலருக்கு உயிருக்கு அபயமாகவும் போய் உள்ளது. ஆனால், நமீதா இது போன்ற குறுக்கு வழிகளில் தன் எடை குறைப்பை தேடாமல் , இயல்பாகவும் ஆபத்தற்ற வழிகளை தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாகவும் இருக்கிறார். "மனம் நம்பினால் உடலும் மாறும்" என்று தனது எடைக் குறைப்பு பயணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். நமீதாவின் இந்த தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.