திரைவிமர்சனம்: நானியின் 'ஹிட் மேக்கர்' படம் 'The Paradise' ஒர்த்தா?

பிரம்மாண்ட மேக்கிங், ஓவர் வயலன்ஸ் மற்றும் செயற்கையான செண்டிமெண்ட்... 'நான் ஈ' நானி ஏமாற்றினாரா?
The paradise
The paradise
Updated on
ரேட்டிங்(1.5 / 5)

150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான நான் ஈ புகழ் நானியின் தெலுங்குப்படம் The paradise இப்போது தமிழ் டப்பிங்கிலும் தமிழகத்திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இவர்கள் கொடுத்த பில்டப்புக்கு இது ஒர்த்தா? அல்லது இன்னொரு கங்குவா, டாக்சிக் வகையறாவா?என்பதைப் பார்ப்போம்.

ஸ்பாய்லர் அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 1980

கதைக்களம் செகந்தராபாத்.

வில்லன் மாலிக் ஒரு கொடூரமானவன். அவனது கட்டுப்பாட்டில் அந்த ஏரியா மக்களை வசப்படுத்தி வைத்திருக்கிறான். அவர்களுக்கு ரேஷன் கார்டோ, வோட்டர்ஸ் ஐ டி யோ எதுவும் கிடையாது. வில்லனின் சாராயக் கம்பெனியில் சாராயம் காய்ச்சும் வேலையை செய்கிறார்கள்.

நாயகனின் அம்மா சமக்கா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கணவர் இறந்து விட்டார். அவரும் இந்த அடிமைக்கூட்டத்தில் ஒருவர். வில்லனிடம் இருந்து விடுதலை வேண்டும் என தாசில்தார் அலுவலகம் முன் போராடுகிறார். ஆனால் பலன் இல்லை.

சமக்காவிற்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.முதல் குழந்தை இறந்தே பிறக்கிறது. இரண்டாம் குழந்தை தான் நாயகன். அதே சமயம் வில்லனுக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.

சில வருடங்கள் கழித்து....

வில்லனின் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரியாணிக்கு ஆசைப்பட்டு நாயகன் விழாவுக்குப்போக வில்லன் நாயகனின் கையில் விலைமகள் மகன் என பச்சை குத்தி விடுகிறான். இதனால் கோபமான நாயகன் வில்லனின் அடியாளைக்கொலை செய்து ஜெயிலுக்குப்போகிறான்.

14 வருடங்களுக்குப்பின் நாயகன் ரிலீஸ் ஆகிறான். இன்னமும் ஊர் மக்கள் வில்லனிடம் கொத்தடிமையாகத்தான் இருக்கிறார்கள். நாயகன் சிலரைத்தன்னுடன் சேர்த்துக்கொண்டு வில்லனுக்கு எதிராகக்களம் இறங்குகிறான்.

The paradise
The paradise

வில்லனின் மகன் அரசியலில் களம் இறங்கக் காத்திருக்கிறான். நாயகிக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். ஏகப்பட்ட கடன் இருப்பதால் அப்பாவின் கடனை அடைக்க நாயகி நீலப்பட நடிகை ஆகிறாள். கடனை அடைத்து விட்டு நாயகி தற்கொலை செய்ய முயலும்போது நாயகன் நாயகியைக் காப்பாற்றுகிறான்.

நாயகி ஒரு நீலப்பட நடிகை என்பது நாயகனுக்குத் தெரியாது. வில்லனின் மகன் எம் எல் ஏ ஆக முயற்சிப்பதால் நாயகன் அதைத்தடுக்க முயற்சிக்கிறான். வில்லனின் மகன் நாயகனின் அம்மாவைக் கொலை செய்ய முயற்சிக்கும்போது நாயகன் வில்லனின் மகனைக்கொலை செய்து விடுகிறான்.

இதற்குப்பழி வாங்க வில்லன் நாயகன் வாழ்க்கையை என்ன செய்தான்? என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக நான் ஈ கெட்டப்பே சரி இல்லை. இரட்டை ஜடை போட்டுப்பெண் போன்ற கெட்டப்பில் படம் முழுக்க வருவதை ஜீரணிக்க முடிவதில்லை. நாயகனின் அக்கா பிறக்குன்போதே இறந்து விட்டதால் அவள் நினைவாக நாயகனுக்கு ஜடை போட்டு வளர்ப்பதாக ஒரு சப்பைக்கட்டு வேற. நேச்சுரல் ஸ்டார் என்று டைட்டில் பட்டம் போடப்படும் நானி இதில் படம் முழுக்க செயற்கையாக நடித்திருக்கிறார்.

The paradise
The paradise

மெயின் வில்லனாக மோகன் பாபு கொடூரமான வில்லனாக மிரட்டி இருக்கிறார். வில்லனின் மகனாக ராகவ் ஜூயல் நடித்திருக்கிறார். அதிக வாய்ப்பில்லை.

நாயகியாக கயாடு லோகர் ஓவர் கிளாமராக நடித்திருக்கிறார். நீலப்பட நடிகை என்ற கேரக்டர் டிசைனால் கிளாமர் காட்ட மிக வசதியாகி விட்டது போல. ஆனால் கதையுடன் ஒட்டவில்லை.

நாயகனின் அம்மாவாக சோனாலி குல்கர்ணி உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார். மேம்பாலம் படத்தில் நாயகியாக நடித்தவர்தான்.

நாயகனின் நண்பனாக சம்பூமேஷ் பாபு நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவின் தோழியாக ஈஸ்வரி ராவ் நடித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

அனிரூத்தின் இசையில் நான்கு பாடல்களுமே சுமார் ரகம் தான். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

நவீன் நூலியின் எடிட்டிங்கில் படம். 173 நிமிடங்கள் ஓடுகிறது.

ஒளிப்பதிவு சாய். பிரம்மாண்டமான காட்சிகளை நேர்த்தியாய்ப்படம் பிடித்திருக்கிறார். ஏழு பேர் கொண்ட குழு வசனம் எழுதி இருக்கிறது.

ஸ்ரீகாந்த் ஒடேலா கதை எழுதி, வினய் சாகர் ஜோன்னாலாவுடன் இணைந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் . 2023 ம் ஆண்டு தசரா என்ற ஹிட் படத்தைக் கொடுத்தவர்.

சபாஷ் டைரக்டர்

1. நாயகன், வில்லன், நாயகனின் அம்மா மூவரின் நடிப்பும் பாராட்ட வைக்கிறது.

2. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் நாயகியை கிளாமர் ஆர்ட்டிஸ்ட் ஆக்கியது.

3.1980 கால கட்டத்தை நினைவு படுத்தும் ஆர்ட் டைரக்சன். அருமை.

ரசித்த வசனங்கள்

1. சரித்திரத்தில் எல்லோரும் கிளி, புறாவைப்பற்றி நிறைய எழுதி இருக்காங்களே தவிர அதே குடும்பத்தைச் சேர்ந்த காக்காவைப்பற்றி யோசிக்கக்கூட இல்லை.

2. சர்கார் என்பது உங்க துரைங்களுக்காகவா?மக்களுக்காகவா?

3. காக்கா கால கத்தி எடுத்தா என்ன ஆகும்? என்பது தான் கதை.

4. இறப்பு கூட இவங்களைப்பிரிக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
ஸ்ட்ரைக் வாபஸுக்குப் பின் சினிமா ரேஸ்: இந்த வாரம் வெளியாகும் 5 புதுப் படங்கள் என்னென்ன?
The paradise

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. நாயகன் சிறுவனாக இருக்கும்போது அவனது கையில் குத்தப்படும் பச்சை பெரியவன் ஆனதும் பச்சை கூட மெகா சைசில் பெரிதாவது எப்படி?

2. நிறைமாத கர்ப்பிணியான நாயகனின் அம்மாவை வில்லன் கரண்ட் ஷாக் கொடுத்துத் துன்புறுத்துவது கொடூரமாகப் படமாக்கப்பட்டுள்ளது. வலிந்து திணிக்கப்பட்ட வன்முறை.

3. அம்மா,மகன் செண்ட்டிமெண்ட் காட்சிகள் எல்லாமே படு செயற்கை. ஒட்டவே இல்லை.

4. படத்தில் நாயகன் ஒரு ஆயிரம் பேரையாவது குத்திக் கொன்றிருப்பார். ரத்தம் ஒரு 5000 லிட்டர் தெறித்திருக்கும்.

5. நாயகன் 30 நிமிடம் தூக்கில் தொங்கியும் சாகாமல் அசால்ட்டாக நடந்து செல்கிறார். நாயகி 5 நிமிடம் தூக்கில் தொங்கி விட்டு சர்வசாதாரணமாக உயிர் பிழைக்கிறார். மெடிக்கல் மிராக்கிள்.

6. படம் மிகவும் நீளம். முதல் பாதி சுமார் எனில் இரண்டாம் பாதி படு மோசம்.

இதையும் படியுங்கள்:
கார்த்தி, அருள்நிதி, சூரி மோதும் சினிமா திருவிழா: ஒரே வாரத்தில் 9 திரைப்படங்கள் வெளியீடு!
The paradise

7. கேரக்டர் டிசைன் பெண்களுக்கு மிகவும் மலிவாக எழுதப்பட்டிருக்கிறது. நாயகி நீலப்பட நடிகை, நாயகனின் அம்மா விலைமகள். நாயகியின் அம்மா அதற்கும் மேலே. முடியலைடா சாமி.

8. எம் ஜி ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், விஜய் நடித்த குருவி, யஷ் நடித்த கே ஜி எப் ஆகிய படங்களைத் தொகுத்து கதை எழுதி இருக்கிறார்கள்.

9. நாயகியின் காஸ்ட்யூம் டிசைன் ஹாலிவுட் படமான மெலீனா படத்தின் அப்பட்டமான தழுவல்.

10. நாயகனின் நாயை வில்லன் சுட்டு விடுவதாகக்காட்டி அடுத்த காட்சியில். எப்படி உயிருடன் வருகிறது?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+. ஓவர் வயலன்ஸ்க்காக

கல்கி கமெண்ட் - திரைக்கதையை நம்பாமல் பிரம்மாண்டத்தையும், வன்முறையையும், ஓவர் ஹீரோயிசத்தையும் நம்பினால் கரை சேர முடியாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம். நானியின் திரை வாழ்க்கையில் ஒரு படு தோல்விப்படம். 

பிரம்மாண்டத்தையும் வன்முறையையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்தப் படம், பல பலவீனமான லாஜிக் மீறல்களால் நானியின் திரை வாழ்க்கையில் ஒரு சுமாரான அனுபவமாக அமைந்திருப்பதை வாசகர் அறிந்து கொள்வார்.

logo
Kalki Online
kalkionline.com