ஹாலிவுட்டில் நடித்த நெப்போலியன்… அதுவும் இத்தனை படங்களிலா?

Nepoleon
Nepoleon
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் நெப்போலியன். தற்போது அவர் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். அந்தவகையில் அவர் ஹாலிவுட் படங்கள் வரை நடித்திருக்கிறார் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது.

சமீபத்தில் நெப்போலியன் மகன் தனுஷிற்கு திருமணம் நடைபெற்றது. அப்போதிலிருந்து நெப்போலியன் மற்றும் தனுஷ் குறித்தான செய்திகள் வைரலாகி வருகின்றன. பாரதிராஜா படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான நெப்போலியன், அரசியல் சினிமா என மிகவும் பிஸியாக இருந்தார். பின்னர் திடீரென்று அனைத்தையும் விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.

அங்கு சென்று பிஸினஸில் முழு மூச்சாக இறங்கி வெற்றிபெற்றார். தனது மகன் உடல் நிலையை கருத்தில்கொண்டுதான் அமெரிக்காவில் செட்டில் ஆகியதாக அவர் பலமுறை கூறியிருக்கிறார். சமீபத்தில் ஜப்பானில் அவரது மகனுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

 பாரதிராஜாதான் நெப்போலியன் என்ற பெயரை அவருக்கு வழங்கியதாக அவர் பலமுறை கூறியிருக்கிறார். முதல் படத்தில் 1000 சம்பளம் வாங்கிய இவர், தற்போது கோடிக்கணக்கில் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தருகிறார். அந்தவகையில் நெப்போலியன் பகிர்ந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றிப் பார்ப்போம்.

அதாவது, நெப்போலியன் என்ற பெயர் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றது. ஆனால், அனைவரும் மதுவின் பிராண்ட் என தன்னை கேலி பேசியுள்ளார்களாம். ஆனால் அதை எதையும் இவர் பொருட்படுத்தவில்லை. தான் ஹாலிவுட்டிலும் நடிக்க வேண்டும் என்பதற்காகவே பாரதிராஜா இந்தப் பெயரை தனக்கு வைத்துள்ளதாக பேசியுள்ளார். ஆனால் அவர் விளையாட்டாக பேசிய அந்த வார்த்தைகள் தற்போது பலித்துள்ளதாகவும் நெப்போலியன் பேசியுள்ளார்.

மேலும், 2018ம் ஆண்டிலிருந்து தான் சுமார் 4 ஹாலிவுட் படங்களில் நடித்ததாகவும், ஆனால் அப்போதுகூட நெப்போலியன் என்ற பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
இராணுவத்தில் சேர ஆசைப்பட்ட நகுல் - 'தி டார்க் ஹெவன்' படத்தின் மூலம் ஆசை நிறைவேறுமா?
Nepoleon

நெப்போலியன் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தது மக்களுக்கு தெரியும். ஆனால், இப்போதுதான் இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார் என்ற செய்திகள் வந்து ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்படியென்றால், தனுஷுக்கு முன்னரே ஒரு தமிழ் நடிகர் ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறாரா?

logo
Kalki Online
kalkionline.com