ரஜினியின் அடுத்தடுத்த 5 படங்கள்.. விஜய் அஜித்தை மீண்டும் பின்னுக்குத் தள்ளுவாரா?

Next five films of Rajini
Next five films of Rajini
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ரஜினியின் ஜெய்லர் படத்தின் ஹிட் மற்றும் லால் சலாம் படத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு தொடர்ந்து ஐந்துப் படங்களில் ரஜினி நடிக்கவுள்ளார். விஜய், அஜித் சொந்தக் காரணங்களால் ஃபார்ம் அவுட் ஆகும் நிலையில் தற்போது ரஜினி இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க ஓப்பந்தம் செய்துள்ளார் என்று பேசப்படுகிறது. அந்தவகையில் ரஜினி நடிக்கவுள்ள படங்களைப் பற்றி பார்ப்போம்.

தற்போது ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சில அப்டேட்கள் சமீபத்தில் வெளியாகின. இதன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாகப் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிடும்.

இந்த வேட்டையன் படத்திற்குப் பிறகு லோகேஷுடன் ரஜினி இணையவுள்ளார். இது ரஜினியின் 171 வது படமாகும். லியோ படம் வெளியான உடனே லோகேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். இருப்பினும் வேட்டையன் படத்திற்குப் பிறகு இதன் வேலைகள் ஆரம்பமாகிவிடும். இவர்கள் கூட்டணியை எதிர்பார்த்துதான் தமிழக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது நெல்சனின் ஜெய்லர் படத்தை விட அதிக வசூலை ஈட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

லோகேஷ் கனகராஜ் படத்தை முழுவதுமாக முடித்துவிட்டு மாரி செல்வராஜுடன் ரஜினி இணையுள்ளார். மாரி செல்வராஜ் படம் என்றாலே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தான் இருக்கும். ஆகையால் இவர்கள் கூட்டணியும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படங்களில் நடித்து முடித்துவிட்டு ரஜினி மீண்டும் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது ஜெய்லர் படத்தின் பாகம் 2 ஆகும். இதற்குத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் ஒப்புக்கொண்டு விட்டார். இதற்காக நெல்சனும் கதையில் இறங்கி வேலைச் செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
இளையராஜாவின் பயோபிக்கில் நடிகர் தனுஷ்!
Next five films of Rajini

அதன்பின்னர் ரஜினி இளம் இயக்குனருடன் கைக்கோர்க்கும் விதமாக அட்லியுடன் கைக்கோர்க்க உள்ளார். அட்லீ பாலிவுட் லெவலுக்குச் சென்று தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். ஆகையால் ரஜினி வைத்து எடுக்கும் படமும் மாஸ் ஹிட் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுக்கும் இயக்குனர்களுடன் ரஜினி கைக்கோர்க்க உள்ளதால், அவர் மீண்டும் சினிமாவில் பச்சை சிக்னல் கொடுத்து வலம் வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  

logo
Kalki Online
kalkionline.com