இராமாயணத்தில் ராவணன் ஏன் சீதையை தொடவில்லை? அவனைத் தடுத்த சாபம் என்ன?

ராவணன் ஏன் சீதையைத் தொடவில்லை? நளகூபரன் சாபம், சீதையின் மன உறுதி மற்றும் இராமாயணத்தின் தர்ம உண்மைகளை விரிவாக அறியுங்கள்.
இராமாயணம் | Ravana and Sita
இராமாயணம் | Ravana and SitaAI Image
Updated on

இராமாயணம் கதையில் ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்தினாலும், நளகூபரன் அளித்த சாபத்தால் அவளைத் தொட அஞ்சியதாக கூறப்படுகிறது. ரம்பாவை வலுக்கட்டாயமாக அணுக முயன்றதற்காக, சம்மதமின்றி பெண்ணைத் தொட்டால் தலை சிதறும் என சாபம் கிடைத்தது. இதனால் ராவணன் சீதையை அசோகவனத்தில் வைக்க, செல்வம், பட்டம், ஆடம்பரம் ஆகியவற்றால் மனதை மாற்ற முயன்றும் தோல்வியடைந்தான்.

இராமாயணம் கதையில் ராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு சென்ற போதும் அவளைத் தொடாததற்கு காரணம் ஒரு சாபம் என கூறப்படுகிறது .

ஒரு முறை அவன் ரம்பாவை வலுக்கட்டாயமாக அணுக முயன்றதால், அவளின் நிச்சயதார்த்தரான நளகூபரன் கோபமடைந்து, எந்த பெண்ணையும் அவள் சம்மதம் இன்றி தொட்டால் தலை சிதறும் என சாபமிட்டார். இதனால் ராவணன் பெண்களை வலுக்கட்டாயமாக அணுக அஞ்சினான். அதனால் சீதையை அசோகவனத்தில் வைத்திருந்தாலும் அவளைத் தொடாமல் சம்மதம் பெற முயன்றான்.

சில கதைகளில் அவளை தரையோடு சேர்த்து தூக்கிய தாகவும் கூறப்படுகிறது. இறுதியில் சீதை மறுத்ததால் ராவணன் தோல்வி அடைந்து ராமரால் அழிக்கப் பட்டான். இது தர்மத்தின் வெற்றியை உணர்த்துகிறது.

இருப்பினும் இந்த சாபம் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். வால்மீகி இராமாயணத்தில் இந்த சம்பவம் சுருக்கமாக குறிப்பிடப்பட்டாலும், நளகூபரன் அளித்த சாபம் பற்றிய விரிவான விளக்கம் உத்தர காண்டம் மற்றும் பிற இராமாயண மரபு நூல்களில் இடம் பெறுகிறது.

இதனால் இந்தியாவின் பல கதைகளில் சொல்லப்படும் இராமாயணம் கதைகளில் இந்தச் சம்பவம் மிகவும் பிரபலமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கருப்பட்டியில் அசல் எது? போலி எது? கண்டுபிடிப்பது எப்படி?
இராமாயணம் | Ravana and Sita

ராவணன் சீதையை அசோக வனத்தில் வைத்திருந்த போது அவளைக் காவல் காக்க அரக்கிப் பெண்களை நியமித்தான். சீதை மனம் மாற வேண்டும் என்பதற்காக ஆடம்பரமான வாழ்க்கை, இலங்கையின் செல்வச் செழிப்பு, பட்டத்து ராணி பதவி போன்றவற்றை தருவதாக கூறி வாக்குறுதி அளித்தான்.

"ஸ்ரீராமர் என்னைக் காப்பாற்ற வருவார்" என்ற மன உறுதியுடனும் கணவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் இருந்தார்‌‌ சீதை.

ராவணன் பல முறை மிரட்டியும் கெஞ்சியும் கால அவகாசம் கொடுத்தும் சீதையின் மனதை மாற்ற முடியவில்லை. இதுவே அவனது தோல்விக்கான தொடக்கமாக அமைந்தது.

ஒரு பெண்ணின் மன உறுதியையும் கற்பு நெறியையும் எந்த அதிகாரத்தாலும் செல்வத்தாலும் வெல்ல முடியாது என்பதை சீதை உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

அதே போல ராவணன் மிகப் பெரிய சிவபக்தன். சிறந்த அறிஞர். இசை மற்றும் வேதங்களில் தேர்ச்சி பெற்றவன் என்றாலும் அகந்தையும் ஆசையும் அவனை அழிவின் பாதைக்கு இட்டுச் சென்றன.

இராமாயணம்  | Ravana and Sita
இராமாயணம் | Ravana and SitaAI Image

ஒருவரிடம் எவ்வளவு அறிவும் வலிமையும் இருந்தாலும் தர்மத்தை மீறினால் அதன் விளைவுகளை தவிர்க்க முடியாது என்பதை இராமாயணம் தெளிவாக உணர்த்துகிறது.

எனவே ராவணன் சீதையை தொடாததற்கு நளகூபரன் அளித்த சாபம் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சீதையின் அசைக்க முடியாத மன உறுதி, பதிவிரதையின் மகத்துவம் மற்றும் தர்மத்தின் வெற்றி ஆகியவற்றையும் இந்த நிகழ்வு வலியுறுத்திகிறது. அதனால் தான் இந்த சம்பவம் ராமாயணத்தில் இன்றளவும் அதிகம் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த நிகழ்வுகளில் இருந்து மற்றொரு முக்கியமான பாடத்தையும் நாம் கற்றுக் கொள்ளலாம். பெண்களின் விருப்பம் மரியாதை மற்றும் தனித்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை இந்திய இதிகாசங்கள் பல இடங்களில் வலியுறுத்துகின்றன.

அதிகாரம் செல்வம் பலம் அறிவு இப்படி எல்லாம் இருந்தாலும் பிறரின் விருப்பத்திற்கு எதிராக நடப்பது அழிவையே தரும் என்பதை ராவணன் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது. அதே போல சீதையின் பொறுமை, மன உறுதி மற்றும் கணவர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை இன்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
Warning! இந்த துணிகளை மட்டும் வாஷிங் மெஷினில் போடாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க!
இராமாயணம் | Ravana and Sita

ராவணன் சீதையை தொடாத சம்பவம் வெறும் புராணக் கதையாக மட்டும் அல்லாமல் தர்மம் ஒழுக்கம் மற்றும் பெண்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை உணர்த்தும் ஒரு ஆழமான வாழ்க்கைப் பாடமாகவும் பார்க்கப்படுகிறது.

இதனால் தான் இராமாயணத்தில் ராவணனின் வீழ்ச்சி ஒரு போரில் ஏற்பட்ட தோல்வியாக மட்டும் கருதப் படவில்லை. தர்மத்திற்கு எதிராக வாழ்ந்தவரின் அகந்தை இறுதியில் அழிவையே சந்திக்கும் என்பதற்கான நிலையான எடுத்துக் காட்டாகவும் இந்த நிகழ்வு இன்றளவும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் பிறரின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும், மன உறுதியோடு வாழ்வதற்கான உத்வேகத்தையும் பெற்று, வாழ்க்கையில் தர்மத்தின் வழி நின்று வெற்றியடைய தேவையான தெளிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com