ரசிகர்கள் ஷாக்..! அடையாளம் தெரியாமல் 80 வயது முதியவர் போன்று மாறிய சல்மான் கான்..!

லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டலுக்கு நடுவே சல்மான் கானின் மாறிய தோற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Salman khan
salman Shocking Old imagesinstagram
Updated on

1989 ஆம் ஆண்டு பாலிவுட்டில் 'மேனே பியார் கியா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சல்மான் கான். அவரது முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி, இந்தியா முழுக்க வெளியிடப்பட்டு பெரிய வசூலை குவித்தது. பாலிவுட்டில் இவருக்கு என்று மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

சல்மான் கான் அறிமுகமாகிய அன்றிலிருந்து இன்று வரை அழகான கதாநாயகன் என்பதற்கு உதாரணமாக சொல்லப்படுபவர். அது மட்டுமல்லாமல் பாலிவுட்டின் முதல் கட்டுமஸ்தான் உடலைக் கொண்ட நடிகர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அதை வெளிப்படுத்த தனது திரைப்படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் சட்டை இன்றி நடிப்பதை சல்மான் கான் வழக்கமாக வைத்துள்ளார். இதனால் , அவர் பலமுறை கிண்டல் செய்யப்படுவதும் உண்டு.

சல்மான் கான் நடிப்பில் வெளியான சாஜன், ஹம் ஆப்கே ஹைன் கோன், ஹம் தில் தே சுக்கே சனம் , ஹம் சாத் சாத் ஹை , தபாங் , பாடிகார்ட் , டைகர் , தபாங் 2 , பஜ்ரங்கி பைஜான், சுல்தான் போன்ற திரைப்படங்கள் பாலிவுட்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவும், சில திரைப்படங்கள் வருட கணக்கில் ஓடியும் சாதனை செய்துள்ளன.

பாலிவுட்டின் வசூல் மன்னனாக சல்மான் ஒருபுறம் இருந்தாலும், அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவர் செய்யும் விஷயங்கள் எப்போதும் அவருக்கு கெட்ட பெயரை அதிகம் சம்பாதித்து கொடுத்துள்ளது. ஒருபுறம் தொண்டு நிறுவனம் வைத்து சல்மான் கான் நிறைய உதவிகளை செய்து வந்திருந்தாலும், அவரது செய்த தவறுகள் நிறைய அவப்பெயரைக் கொண்டு வந்துள்ளது.

Maine Pyar kiya
salman in Maine pyar kiyax

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் காலத்தில், அவர் அங்கு கருப்பு மானை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானில் உள்ள பிஷ்னோய் என்னும் பழங்குடி இன மக்கள், கருப்பு மான்களை தங்களது தெய்வமாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் அந்த மானிற்கு யாரேனும் தீங்கு செய்தால், எளிதில் விட்டு விட மாட்டார்கள். இந்த சம்பவத்தில் சல்மான் கைது செய்யப்பட்டாலும் , பிஷ்னோய் மக்களிடம் மன்னிப்பு கேட்காததால் பல வருடங்களாக அவருக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

பிஷ்னோய் இனத்தில் பிறந்து சர்வதேச கேங்ஸ்டராக மாறிய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானை குறிவைத்து துப்பாக்கி சூடு நடந்தியதில் நூலிழையில் அவர் தப்பினார். ஆனாலும் , சல்மானின் நெருங்கிய நண்பரான பாபா சித்திக்கை லாரன்ஸ் கும்பல் கொலை செய்தது. இதனால், அச்சமடைந்த சல்மான் வெளியில் அதிகம் செல்வதை பெரும்பாலும் தவிர்க்கிறார். அவருக்கு அரசு துப்பாக்கி இந்திய Y + பாதுகாப்பை அளித்தாலும், அவர் சமீப காலமாக பெரிதும் முடங்கியுள்ளார்.

அமெரிக்கா , கனடா , பிரிட்டன் , ஆஸ்திரேலியா வரை லாரன்ஸ் பிஷ்னோய் செல்வாக்குடன் இருப்பதால் , வெளிநாடுகளுக்கும் சல்மான் செல்ல முடிவதில்லை. இந்நிலையில் சல்மான் கான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளிவந்த போது அவரது தோற்றத்தினை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

60 வயதை சல்மான் கான் தொட்டாலும் அவரது தோற்றம் எப்போதும் இளமையாகவும் 30 வயது இளைஞனை போலவே இருக்கும். ஆனால், அவரது சமீபத்திய தோற்றம் 80 வயதை கடந்த முதியவர் போன்று இருப்பதால், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்த ரசிகர்கள் , சல்மான் பாய்க்கு என்ன ஆயிற்று ? பைஜான் ஏன் இப்படி ஆகிவிட்டார்? அவரது உடல்நிலை சரியில்லையா? அவர் மீண்டும் நலமுடன் திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறோம். இது போன்ற ஏராளமான பதிவுகளை பார்க்க முடிந்தது. ஒரு சில ரசிகர்கள் இது சல்மான் நடிக்கும் ஒரு படத்திற்கான தோற்றம் இது. அதற்காக தனது தோற்றத்தினை மாற்றியுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
'ஜன நாயகன்' விமர்சனம்: தளபதியின் கடைசிப் படம் உண்மையிலேயே வென்றதா? முழு அலசல்!
Salman khan
இதையும் படியுங்கள்:
ஜனநாயகனை திரையில் பார்த்த அமைச்சர்கள்! கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் பர்வேஸ்!
Salman khan
logo
Kalki Online
kalkionline.com