ஜனநாயகன் படம் பார்த்த நான் ஜோக்கரா?; மைக்கை பறித்து துரத்திட்டாங்க..! - சனம் ஷெட்டி

சென்னையில் நீட் தேர்வு ரத்து கோரிய போராட்டத்தில் சனம் ஷெட்டி மைக்கைப் பிடுங்கி வெளியேற்றப்பட்ட பரபரப்பு பின்னணி மற்றும் இயக்குநர்களின் மீதான விமர்சனம்.
Sanam shetty speaks neet agnda
bigboss sanam shetty
Updated on

பிக் பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி, சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்ய கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் மைக்கை பிடுங்கி அவரை வெளியேற்றினார்கள். விஜயின் ரசிகையான அவருக்கு ஒரு பக்கம் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர், மறுபுறம் இயக்குனர் வெற்றிமாறனின் ஆதரவாளர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதான் சவுதான் பதவி விலக வேண்டும் என்று கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பல அடிப்படைவாத அமைப்புகளும் ஆதரவு கொடுத்து கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கடும் வன்முறை ஏற்பட்டது.

இதன் காரணமாக போராட்டக்காரர்களும் காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். ஏராளமான அரசு வாகனங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி போராட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முதலில் கலந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து மலையாள நடிகை பிரியா வாரியர், தமிழ் நடிகை கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தமிழ் நடிகர்கள் கென் கருணாஸ், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் நடந்த வரும் வேளையில், சென்னையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய கூறி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லி போராட்ட களத்தில் பல நடிகைகளும் இன்ஸ்டா பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டு போராட்டத்திலும் ஒரு சில பிரபலங்களும் தமிழ் சினிமாவின் இயக்குனர்களான வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு சனம் ஷெட்டியும் வந்திருந்தார்.

sanam shetty neet Controversy
sanam shetty Facebook

அங்கு வந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மேடையில் பேசியே சனம் " நான் மாணவர்களை ஆதரிப்பதை எனது கடமையாக நினைத்து இங்கு வந்துள்ளேன். இந்த மேடையை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் கோமாளிகள் நான் கிடையாது. நான் தளபதியின் தீவிரமான ரசிகை .நேற்றுதான் 'ஜனநாயகன் ' முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வந்தேன்". அவர் பேசும்போது அங்குள்ள போராட்டக்காரர்கள் கடுமையான கூச்சலை எழுப்பினர்.

அப்போது சனம் "இது ஜனநாயகம் இல்லை, நான் எந்த அஜண்டா பற்றி பேசுகிறேன் என்பதை பற்றி எனக்கு கவலையும் இல்லை. எவன் சொல்லியும் நான் இங்கு வரவில்லை, நான் நானாகத்தான் இங்கு வந்துள்ளேன்" என்று சத்தமாக அவர் பேசத் தொடங்கினார். அவர் பேசும்போதே அவரிடம் இருந்து மைக்கினை பிடுங்கி அவரை வெளியேற்றினார்கள்.

​இதனால் கோபமடைந்த சனம் ஷெட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பாலன் இல்லத்தில் நடைபெற்ற சம்பவங்களை பற்றி குறிப்பிட்டார். போராட்ட களத்தில் இயக்குனர் அமீர் ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிராக பேசியிருந்தார். தான் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து விட்டு தான் போராட்டத்திற்கு வந்தேன் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் "ஜனநாயகன் படத்தை பார்ப்பவர்களை எல்லாம் எப்படி ஜோக்கர் என்று சொல்லலாம்? நானும் அந்த படத்தை பார்த்துவிட்டு தான் போராட்டத்திற்கு வந்தேன். நான் ஜோக்கரா? அல்லது இங்கு வந்து பேசிய ஏராளமான திரைப்படங்களை இயக்கிய வெற்றிமாறன் ஜோக்கரா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். "டெல்லியில் போராடிய சோனம் வாங்சுக்கின் காலில் விழுந்து கூட நன்றி தெரிவிப்பேன். இங்கு நடைபெறுவது ஒரு அஜெண்டா உடன் கூடிய போலி போராட்டம்" என்று சனம் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
Interview: அருள்நிதிக்கு ஏன் கருணாநிதி பெயர்? - அருள்வான் இயக்குனர் கணேஷ் விநாயகன் Open Talk!
Sanam shetty speaks neet agnda
இதையும் படியுங்கள்:
பராசக்தி: சொல்ல வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மொழிப் போராட்டம்!
Sanam shetty speaks neet agnda
logo
Kalki Online
kalkionline.com