

புராணத்தில் சத்தியவான் சாவித்திரி எமனிடம் சென்ற தனது கணவனை தனது தவத்தின் வலிமையால் மீண்டும் உயிருடன் மீட்ட கதை உண்டு. அதேபோல் அதே தலைப்பில் சத்தியவான் சாவித்திரி என்று ஒரு படம் வந்துள்ளது. இது நவீன கால சாவித்திரி ஒருவரைப் பற்றிய கதை.
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்துள்ள இந்த படத்தை பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ளார்.கீர்த்தி சுரேஷிற்கு சென்னைக்கு வந்து வக்கீல் ஆக வேண்டும் என்று ஆசை. இவரை பெண் பார்க்க வரும் சாருகேசிடம் ஒரு ஆறு மாதம் திருமணம் வேண்டாம் என்று என் அப்பாவிடம் சொல்லுங்கள். அதன் பிறகு அவர்களே மறந்து விடுவார்கள் என்று சொல்கிறார்.
கீர்த்தியுடன் சரி என்று சொல்லிவிட்டு கீர்த்தியின் பெற்றோரிடம் நான் உடனே திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறார் சாருகேஷ். இதனால் கோபமடைந்த கீர்த்தி சாருகேசுடன் திருமணம் முடிந்து பெயரளவுக்கு வாழ்கிறார். அதே சமயத்தில் முன்னணி வழக்கறிஞராக இருக்கும் மிஷ்கினிடம் உதவியாளராக சேர்கிறார்.
மிஷ்கின் ஜெயிக்க வேண்டிய ஒரு வழக்கில் நேர்மையாக தான் இருப்பேன் என்று மிஷ்கினுக்கு எதிராகவே ஆஜராகி மிஷிகினை அந்த வழக்கில் தோற்கடித்து விடுகிறார். இதனால் மிஷ்கின் கோபமடைகிறார். இந்த சூழ்நிலையில் கீர்த்தி சுரேஷின் கணவர் சாருகேஷ் ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார். கீர்த்தியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிஷ்கின் கடுமையாக வாதாடுகிறார். தன் கணவருக்காக கீர்த்தி சுரேஷ் வாதாடுகிறார் இறுதியில் என்ன ஆனது என்று சொல்கிறது இந்த படம்.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு இவர்தான் கொலைகாரன் என்று ஒருவர் நாம் நினைக்கும் நேரத்தில் திடீரென்று கதை மாறி வேறு ஒருவர் கொலைகாரன் என்று சந்தேகத்தை வைக்க வேண்டும். அதன் பிறகு நாம் யோசிக்காத ஒரு ட்விஸ்ட் கிளைமாக்ஸில் இருக்க வேண்டும். இதை தனது திரைக்கதையில் கொண்டுள்ளது இப்படம். மிக சாதாரணமாக செல்லும் இந்த படம் சாருகேஷ் மீது கொலைப்பழி விழும் இடத்தில இருந்து மிக வேகமாக சூடு பிடிக்கிறது. நாம் யோசிக்கும் ட்விஸ்ட் இல்லாமல் வேற ஒரு ட்விஸ்ட் வந்து கிளைமாக்ஸ் நம்மை அசத்துகிறது.
மிஷ்கின் vs கீர்த்தி...
மிஸ்கினா அல்லது கீர்த்தி சுரேஷ்? யார் நடிப்பில் முன்னணியில் இருக்கிறார்கள் என்று நம்மால் உறுதிப்பட சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு இருவரும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள். படத்தின் முதல் பாதையில் மிஷ்கின் ஒரு டெரர் வழக்கறிஞராக பிரமாதப் படுத்துகிறார். ஒரு அமைதியாக பெண்ணாக, பயந்த பெண்ணாக கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் ஒரு உயர் நீதிமன்றத்தில் ஒரு ஜூனியர் வக்கீலாக இருக்கும் பெண் என்ன உணர்வுகளை தருவாரோ அதை சிறப்பாக தந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
போகப் போக இவர் கேரக்டர் மிக நன்றாக இருக்கிறது. ஹீரோ சாருகேஷிற்கு இது முதல் படம். இவர் ஏற்கனவே ஜியோ ஹாட்ஸ்டாரில் வந்து கொண்டிருக்கும் ஹார்ட் பீட் தொடர் மூலமாக நமது இல்லங்களில் நுழைந்து விட்டவர். அதனால் இவரை ஈஸியாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நன்றாக நடித்து உள்ளார். சில காமெடிகள் செய்து நம்மை சிரிக்க வைக்கிறார் பால சரவணன்.
படத்தில் மிகவும் ரசிக்கும் படியாக இருப்பது படத்தில் வரும் நீதிமன்ற காட்சிகள். ஒரு இடத்தில் கீர்த்தி சுரேஷ் தோற்பதும், இன்னொரு இடத்தில் மிஷ்கின் தோற்பதும், மாறி மாறி இருவரும் வாதிடும் இடமும் சபாஷ் போட வைக்கிறது. சாம் சி. எஸ் இசையில் பாடல்களை விட பின்னணி இசை கேட்கும் படி இருக்கிறது. அருண் வின்சென்ட் ஒளிப்பதிவும், பிரசன்னாவின் படத்தொகுப்பும் இரண்டு கண்கள் போல இருந்து இந்த கதையை வேகமாக நடத்துகின்றது.
சரி இந்த படத்தில் என்ன குறை...
இன்டெர்வல் வரை படம் மெதுவாக நகர்கிறது. இதை சற்று வேகமாக நகர்ந்து போக செய்திருந்தால் இந்த படம் இன்னும் சற்று சிறந்த திரில்லர் படமாக வந்திருக்கும். இந்த படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்கும்போது பரபரப்பான நாடக பாணியிலான ஒரு சஸ்பென்ஸ் சிலர் பார்த்த உணர்வு கிடைக்கும். மேலும் நவீன கால சாவித்திரி எப்படி தனது கணவரை சட்டத்தில் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம்.
நவீன காலச் சூழலில் சத்தியவான் சாவித்திரி கதை எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது, மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் இடையிலான நீதிமன்ற வாதங்கள் எந்த இடத்தில் சூடுபிடிக்கின்றன, மேலும் எதிர்பாராத கிளைமாக்ஸ் திருப்பம் எதை நோக்கி நகர்கிறது என்ற தெளிவான சித்திரத்தை வாசகர் பெறுவார்.