சினிமாவில் சொந்தமாக கப்பல் வைத்துக்கொண்ட நடிகை இவர்தான்… வேறு என்னென்ன வைத்திருந்தார் தெரியுமா?

Ship and Airplane
Ship and Airplane
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஒரு பழம்பெரும் நடிகை தனது 72 வருட சினிமா பயணத்தில் சொந்தமாக விமானம், கப்பல் போன்ற அனைத்தையும் வைத்திருக்கிறார். அவர் யார் என்று பார்ப்போம்.

சினிமாவில் தற்போது முன்னணி நடிகை நடிகர்களாக வலம் வருபவர்கள் பலர் சொந்தமாக விமானம் வைத்திருந்தாலும், கப்பல் வைத்திருப்பார்களா என்று கேட்டால் சந்தேகம்தான். நடிப்பிலிருந்து ஃபார்ம் அவுட் ஆகும் நடிகர்களுக்கும் வயதான காலத்தில் ஒரு பாதுகாப்பிற்கும் நடிகர்கள் சொந்தமாக எதேனும் பிஸினஸ் வைத்துக்கொள்வது வழக்கம். சிலர் பியூட்டி ப்ராடக்ட்ஸ் விற்பது, சிலர் நேப்கின்ஸ் விற்பது, சிலர் ஹோட்டல் என அவரவர்களுக்கு விருப்பமான ஒரு பிஸினஸை ஆரம்பித்துக் கொள்கிறார்கள்.

K.R.Vijaya
K.R.Vijaya

அதைத்தாண்டி விமானம் போன்ற சொந்தமாக வைத்துக்கொள்ளும் சில விஷயங்கள் அவர்களின் ஆடம்பரமாக கூட இருக்கலாம்.

ஆனால், இந்த நடிகை வெரும் விமானம், கப்பல் இன்னும் நிறைய விஷயங்கள் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர்கள் வேறு யாரும் இல்லை. பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா.

1963ம் ஆண்டு தனது நடிப்பை தொடங்கிய கே.ஆர்.விஜயா இப்போது கிடைக்கும் படங்களில் நடிக்கிறார். படங்களை தாண்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் 6 மணிக்கு மேல் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.

இதையும் படியுங்கள்:
ஷோலே படத்தையும், தர்மேந்திரா - அமிதாப்பையும் மறந்திடவே இயலாது! ஏன்?
Ship and Airplane

இவரைப் போல இவரின் கணவரும் பெரிய பணக்காரர் ஆவார். இவரின் கணவரான வேலாயுதம் நாயருக்கு சொந்தமாக சுதர்சன் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் பல நட்சத்திர ஓட்டல்களும் இருந்துள்ளன. ஏராளமான தொழில் நிறுவனங்களையும் திறம்பட நடத்திருக்கிறார். 

அந்தவகையில் கே.ஆர்.விஜயா சொந்தமாக விமானம், கப்பல், ஹோட்டல், புல்லட் ஆகியவை வைத்திருந்தார். இதுபோல் தனக்கென சொந்தமாக வைத்துக்கொண்ட முதல் நடிகை மற்றும் கடைசி நடிகை இவர்தான். 72 வருடக் கால சினிமா பயணத்தில் வாங்கி வைத்துக்கொண்டவை இவையே.

 

logo
Kalki Online
kalkionline.com