பிராங்க் வீடியோ எடுத்த பவ்யாவுக்கு நடந்தது என்ன? 'சிக்னல் அட் 11.30' விமர்சனம்!

கொலையை செய்தது சந்தோஷ் பிரதாப்பா அல்லது தூண்டியது யார்? திரைக்கதை சொல்லும் மர்மம் என்ன?
சிக்னல் அட் 11.30
சிக்னல் அட் 11.30
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 
ரேட்டிங் (3 / 5)

மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் பவ்யா ட்ரிகா, பூஜிதா பொன்னாட, ஜெயபிரகாஷ் நடித்துள்ள படம் சிக்னல் அட் 11.30.

சந்தோஷ் பிரதாப் ஒரு தனியார் நிறுவனத்தின் முதலாளியாக இருக்கிறார். அவருக்கு அவ்வப்போது மறைந்த தனது மனைவியின் ஞாபகம் வருகிறது. இந்த சூழ்நிலையில் பவ்யா தனது சேனலுக்காக ஒரு பிராங்க் நிகழ்ச்சி செய்கிறார். அந்த நிகழ்ச்சியை செய்யும் சமயத்தில் எதிர்பாராத விதமாக சந்தோஷ் பிரதாப்பை சந்திக்கிறார். சந்தோஷ் பிரதாப்பிற்கும் பவ்யா நண்பர்களுக்கும் இடையே ஒரு மோதல் நடக்கிறது.

இந்த மோதலில் பவ்யா டிரிகாவும், அவரது நண்பர்களும் கொல்லப்படுகிறார்கள். இந்த கொலையை சந்தோஷ் பிரதாப் செய்தாரா அல்லது சந்தோஷ் பிரதாபை கொள்ள தூண்டியது யார்? என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த படம்.

இதையும் படியுங்கள்:
கங்கை அமரனின் நடிப்பு மிரட்டலா? 'லெனின் பாண்டியன்' திரை விமர்சனம்!
சிக்னல் அட் 11.30

முதலில் இந்த படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் படத்தின் எடிட்டிங். வெவ்வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்களை ஒரு அழகாக ஓவியம் போல கண் முன் கொண்டு வந்திருக்கிறது படத்தொகுப்பு. படத்தின் டி இமானின் பின்னணி இசை அளவாகவும் மெல்லிதாகவும் இருப்பது ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட். படத்தின் கிளைமாக்ஸில் இமான் இசைத் உள்ள பின்னணி இசை மிகவும் கிளாசிக்காக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவில் லைட்டிங் என்ற விஷயம் சரியான அளவிலும் ஒரு வித்தியாசமான அளவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பார்த்திபன் மூலமாக பத்தாண்டுகளுக்கு முன்னால் அறிமுகமானவர் படத்தின் ஹீரோ சந்தோஷ் பிரதாப். தனக்கு ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்க போராடி வருகிறார். இவரின் போராட்டம் இவரது நடிப்பில் தெரிகிறது. ஒரு ஆதங்கம், சற்று கோபம், ரொமான்ஸ் இதை அனைத்தையும் தனது ஆறடி உயரத்தில் அழகான முகத்தில் சரியாக தந்திருக்கிறார். சரியான கதாபாத்திரங்கள் அமைந்தால் சந்தோஷ் பிரதாப் ஒரு முன்னணி ஹீரோவாக வளர வாய்ப்பிருக்கிறது.

சிக்னல் அட் 11.30
சிக்னல் அட் 11.30

பன் பட்டர் ஜான், ஜோ போன்ற பல படங்களில் நடித்த பவ்யா ட்ரிகா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பூஜிதா பெண்ணாடா என்ற இன்னொரு ஹீரோயின் இருந்தாலும் பவ்யாவின் நடிப்பு தான் நன்றாக பேசும்படியாக அழகான முகத்தில் சிறு சிறு உணர்வுகளுடன் சரியாக புரிந்து நடிக்கிறார் பவ்யா. 

இதையும் படியுங்கள்:
பிடிக்காத உடைக்கு மறுப்பு: ஸ்ருதி ஹாசன் எடுத்த அந்தத் துணிச்சலான முடிவு என்ன?
சிக்னல் அட் 11.30

படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, டி இமான் இசை இப்படி பல பிளஸ் பாயிண்ட் இந்த படத்தில் இருந்தாலும் ஒரு சில மைனஸ் பாயிண்டுகள் உள்ளன. படத்தின் நீளம் 2 மணி நேரம் மட்டுமே. ஆனால் இந்த படத்திற்கு கதைக்கு இன்னும் ஒரு 30 நிமிடங்கள் அதிகமாக இருந்திருக்கலாம் என்று சொல்ல தோன்றுகிறது. காரணம் திரைக்கதையில் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய டீடைல் என்ற விஷயம் சற்று குறைவாக உள்ளது.

சரியாக இருந்தால் இது ஒரு சைக்கோ திரில்லர் படமாக வந்திருக்கும். இருந்தாலும் ஒரு மாறுபட்ட படத்தை பார்க்க விரும்புவர்களுக்கு இந்த சிக்னல் அட் 11.30 ஒரு சரியான தேர்வாக இருக்கலாம். இந்த படத்தை நீங்கள் பார்க்கும் போது மனரீதியாக வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் ஒரு தனி மனிதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு சரியான கதையாக இருக்கும்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் நகரும் இந்தப் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும், கதாபாத்திரங்களின் மனப்போராட்டமும் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு, படம் தங்களுக்கு ஏற்றதா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும்.