சுந்தர் சி அடுத்த படத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அந்த சிக்கலுக்கு முக்கிய காரணமானவர்கள் விஷாலும் நயன்தாராவும்தான்.
சுந்தர் சி என்றால் அரண்மனை படம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால், அன்பே சிவம் முதல் கலகலப்பு வரை ரசிகர்களின் பேராதரவை பெற்ற படங்களை கொடுத்தவரும் சுந்தர் சிதான். ஆனால், ஏனோ விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற இந்தப் படங்கள் வசூல் ரீதியாக தோல்வியே அடைந்தது. இது ரசிகர்களுக்கே ஒரு குழப்பமாக இருக்கும் பட்சத்தில் சமீபத்தில் வெளியான மத கஜ ராஜா படம் பெரிய ஹிட் கொடுத்து தமிழக மக்கள் மனதில் மீண்டும் சுந்தர் சியை ஞாபகப்படுத்தியிருக்கிறது.
2012ம் ஆண்டே மத கஜ ராஜா படத்தை வெளியிடுவதற்காக சுந்தர் சி வேக வேகமாக படத்தை எடுத்து முடித்தார். ஆனால், சில பல காரணங்களால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விஷால் பாடிய ஒரு பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த படம் திடீரென்று பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் விஷால் வைத்தே சுந்தர் சி தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக முடிவெடுத்தார். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சுந்தர் சியின் முக்குத்தி அம்மன் 2 படமும் இருக்கிறது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்போது இந்த இரண்டு படங்களில் சுந்தர் சி எந்த படத்தை எடுக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஷாலை வைத்து ஆம்பள இரண்டாம் பாகம் எடுக்கலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் சுந்தர் சி. ஆனால் விஷால் அடுத்து நடிக்கும் படங்களுக்கு சம்பளம் கேட்காமல் லாபத்தில் பங்கு கேட்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் சற்று யோசிக்கிறார்கள். அதனால் அடுத்த ப்ராஜெக்ட் நகராமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது.
மறுபக்கம் முக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கலாம் என்று நினைத்தால், அதற்கு நயன்தாரா கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார். ஏனெனில், அவர் பிஸி ஷெட்யூலில் இருக்கிறார்.
இப்படி இருவருக்கும் இடையே சுந்தர் சி மாட்டிக்கொண்டிருக்கிறார்.