

தற்போது நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் தனது உச்சத்தினை அனுபவித்து வருகிறார். சிங்கம் 2 திரைப்படத்திற்கு பின்னர், சூர்யா நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு திரைப்படமும் சொல்லிக் கொள்ளும் படி பெரிய வெற்றியை பெற வில்லை. இடையில் ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற திரைப்படங்களுக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு இருந்தாலும் , அவை ஓடிடியில் நேரடியாக வெளியானவை. சூர்யா நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிங்கம் 3 , அஞ்சான் , கங்குவா போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீசில் பெரிய பின்னடவைக் கொடுத்தன.
சூர்யா நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைய , அவரது மனைவி ஜோதிகா தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தான், முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. இவர்களின் அரசியல் நிலைப்பாடும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியது. தொடர்ச்சியாக சூர்யா திரைப்படங்களில் குறிப்பிட்ட அரசியல் சார்பு இருந்ததாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
ஜெய் பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்திரித்தாக கடும் எதிர்ப்பினையும் சூர்யா சந்தித்தார். கங்குவா திரைப்படத்தின் தோல்வியினால் ஜோதிகா ,சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு வேண்டுமென்றே பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பின்னர் பெரிய இடைவேளைக்குப் பின் , கருப்பு திரைப்படம் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்காக சூர்யாவும் ஜோதியாகவும் ஒவ்வொரு கோயிலாக ஏறி இறங்கினார்கள். நடிகர் சூர்யா தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடும் செய்து வந்தார். அதற்கு ஏற்றார் போல் கருப்பு திரைப்படமும் யாரும் எதிர்பாராத வகையில் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸையும் கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சூர்யாவின் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு பெரிய வசூலை அவர் பார்த்தது இல்லை.
நேற்று கருப்பு திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக தனது 100-வது நாளை சிறப்பாக கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை சூர்யா கொண்டாடுவதற்கு முன்னர் , அவருக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தியும் கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான அவரது இன்னொரு திரைப்படமான விஸ்வநாத் & சன்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்த திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் இதுவரை 200 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் சாதனை செய்துள்ளது. முன்பு சூர்யா திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை குவிக்க கடுமையாக திணறும். ஆனால் , தற்போது ஒரே நேரத்தில் 2 திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருப்பது சூர்யா & பேமிலியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா திரைப்படங்களின் வெற்றிக்கு வேறொரு காரணமும் தற்போது சொல்லப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் உச்சத்திலிருந்து நடிகர் விஜய் , சினிமாவில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கான இடம் காலியாக உள்ளது. மேலும் அவருக்கு போட்டியான அஜீத்தும் தற்போது உடனடியாக எந்த திரைப்படத்திலும் நடிக்க வில்லை.
இந்த காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. சூர்யாவிற்கு மட்டுமல்ல லோகேஷ் கனகராஜின் அறிமுகத் திரைப்படமான டிசியும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெற்றியை குவித்து வருவது குறிப்பிடத் தக்கது.