தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் தரும் தெலுங்கு நடிகர் சுனில்!

தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் தரும் தெலுங்கு நடிகர் சுனில்!
Updated on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சுனில். இவர் தெலுங்கு திரையுலகின் மிக முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் பல குணச்சித்திர வேடங்களில் நடித்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

நடிகர் சுனில் தற்போது தன்னுடைய கவனத்தை தமிழ் திரைப்படங்களின் பக்கம் திருப்பி உள்ளார். மேலும், சமீப காலமாக மாற்று மொழிப் படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான, ‘மாவீரன்’ திரைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார் சுனில். அதன் பிறகு கடந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அடுத்து, நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக உள்ள, ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாது, இயக்குநர் சங்கரின், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்திலும் நடிகர் சுனில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நடிப்பில் உருவாகி வரும், ‘புல்லட்’ திரைப்படத்திலும் முக்கிய  கதாபாத்திரத்தில் நடிகர் சுனில் ஒப்பந்தமாகி உள்ளார். இவை தவிர, இன்னும் சில திரைப்படங்களில் நடிப்பதற்காகவும் கதைகளைக் கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இப்படி, நடிகர் சுனில் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அதேசமயம் சில தெலுங்கு  படங்களிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com