மறைந்த புகழ்பெற்ற பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு குறித்து ஒரு நடிகை மற்றும் அவரின் கணவர் பேசியிருக்கிறார்கள். அப்போது அவர் பாடிய இந்த ஒரு பாட்டுதான் என் மனைவியின் அடையாளமாக மாறியது என்று அந்த நடிகையின் கணவர் பேசியிருக்கிறார்.
பாடகர் ஜெயச்சந்திரன் சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார்.
80ம் காலகட்டம் நடிகர் தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களுடன் வரை ஜெயச்சந்திரன் பயணித்திருக்கிறார். அதேபோல எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான் என பல இசையிலும் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இறந்த நிலையில், அவர் குறித்து பல நடிகை நடிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்தின் முறைப்பெண்ணாக நடித்த பிரமிளா பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டார். அவரும் அவர் கணவரும் கலந்துக்கொண்ட அந்த பேட்டியில் இருவரும் ஜெயச்சந்திரன் குறித்து பேசியிருக்கிறார்கள்.
அப்போது பிரமிளா மற்றும் அவரது கணவர் பேசுகையில், “கிராமத்து அத்தியாயம் படம் 85 ல் வெளியானது. அந்த பட வாய்ப்பு எனக்கு கமலஹாசன் சிபாரிசால் தான் கிடைத்தது. ஊதக்காத்து வீசயிலே என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருந்தார். அந்தப் பாட்டு இப்ப கேட்டாலுமே எல்லோருக்கும் பிடிக்கும் .
அந்த சமயத்தில் ஜெயச்சந்திரன் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால், அவருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்."
"நாலு வருடம் கழித்து என்னுடைய மனைவி பிரமிளா நடித்த வைதேகி காத்திருந்தாள் படம் வெளியானது. அதில் ‘ராசாத்தி உன்னை’ பாட்டை பாடி இருந்தார். இந்த பாட்டு பிரமிளாவுக்கு நல்ல வாய்ப்பை கொடுத்தது. இந்தப் படத்திற்கு பீன்னர் பிரமிளா அதிகம் நடிக்கவில்லை என்றாலும், இந்த பாட்டே இன்று வரை மக்களிடையே பிரமிளாவை ஞானபகப்படுத்துகிறது.
எங்க வீட்டில் இந்த இரண்டு படங்களின் பாடல்கள் ஒலிக்காத நாளில்லை. இந்த பாட்டு வெளிவந்த பிறகு கன்னடத்தில் அவர் பாடிய பாடல்களையும் தேடி இருந்தோம். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கார் என்று கேள்விப்பட்டோம். அவர் குணமாகி விடுவார் என்றெல்லாம் வேண்டிக் கொண்டோம். ஆனால், காலம் அவரை அழைத்துக்கொண்டது. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று பேசியிருக்கிறார்.