'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் 'ஹே பாப்பா' இரண்டாவது லிரிக்கல் வீடியோ வெளியாகியது!

'பாயும் ஒளி நீ எனக்கு'  படத்தில் 'ஹே பாப்பா'  இரண்டாவது லிரிக்கல் வீடியோ வெளியாகியது!

வித்தியாசமான கதாபாத்திரங்களையும், படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விக்ரம் பிரபு. இவர் 'பாயும் ஒளி நீ எனக்கு' என்கிற படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் அத்வைத் என்பவர் எழுதி, இயக்கி தயாரித்து உள்ளார். இப்படத்தின் படப் பிடிப்பு, உட்பட அனைத்து பணிகளும் முடிவடைந் துள்ள நிலையில், இப்படம் திரையரங்குகளில் ஜூன் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடித்துள்ளார். விக்ரம் பிரபு, வாணிபோஜன் இவர்களுடன் தனஞ்சயா, ஆனந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். ஆக்சன் த்ரில்லர் ஜானரில் பாயும்" ஒளி நீ எனக்கு " படம் உருவாக்கப் பட்டுள்ளது.

விக்ரம் பிரபு நடித்துள்ள "பாயும் ஒளி நீ எனக்கு "என்ற படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹே பாப்பா' என்கிற இரண்டாவது லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு சாகர் இசையமைத்துள்ளார்.

விக்ரம் பிரபு ஏற்கபனவே நடித்த 'டாணாக்காரன்' மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கும் அதீத எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com