
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை வந்தாலே படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இன்று (மே 9-ம்தேதி) சுமார் 10 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. இதற்கு முன்பும் பிப்ரவரி மாதத்திலும், மார்ச் மாதத்திலும் 9 படங்கள் ஒரே நாளில் வெளியாகின. அந்த வகையில் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் குறித்து நாம் எந்த பதிவில் பார்க்கலாம். நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் இந்த படங்களை கண்டுகளித்து இந்த வார விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க.
‘கஜானா’
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் கற்பனையும் சாகசங்களும் (அட்வென்சர்) நிறைந்த படம் ‘கஜானா’. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருக்கிறார். யோகி பாபு, சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். கோபி துரைசாமி, வினோத் ஜே.பி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நிழற்குடை
இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் திரில்லராக சொல்கிறது ‘நிழற்குடை’. தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவான இந்த படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா, குழந்தை நட்சத்திரங்கள் நிஹாரிகா, அஹானா, புதுமுகம் தர்ஷன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கலியுகம்
பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் ஆகியோர் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகியுள்ளது கலியுகம். இந்த படத்தில் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் ஆகியோர் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் உள்ளிட்டோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டான் வின்சண்ட் இசை அமைத்துள்ளார். முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான கதை அம்சம் கொண்ட படம் கலியுகம்.
என் காதலே
ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த லிங்கேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். லண்டனைச் சேர்ந்த லியா மற்றும் திவ்யா தாமஸ் நாயகிகளாக நடித்துள்ளனர்.
அருமையான காதல் கதையாக உருவாகியுள்ள `என் காதலே' திரைப்படத்தில் மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டோனி ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாண்டி சாண்டெல்லோ இசை அமைத்துள்ளார்.
அம்பி
போஸர் ஜே எல்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரோபோ சங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏபி முரளிதரன் இசையமைத்துள்ளார். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்க இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, மோகன் வைத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி2 மீடியா சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை, பாஸர் ஜே எல்வின் தயாரித்துள்ளார்.
எமன் கட்டளை
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் எஸ்.ஏ. கார்த்திகேயன் தயாரித்துள்ள படம் எமன் கட்டளை. எஸ்.ராஜசேகர் இயக்கத்தில் மயில்சாமி மகன் அன்பு கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சந்திரிகா நடித்திருக்க இவர்களுடன் அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா போன்ற நடிகர்கள் நடித்திருக்கின்றனர். என்.எஸ்.கே இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ஏ.கார்த்திக் ராஜா செய்துள்ளார். பாடல்களை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.
சவுடு
லாக்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் ஸ்ரீ கண்ணன் லட்சுமணன் தயாரிக்க, கதை, வசனம் எழுதி ஜெயந்தன் அருணாசலம் இயக்கியுள்ள இந்த படத்தில் போண்டாமணி, சாப்ளின் பாலு, வைகாசிரவி, கிளிமூக்கு ராமச்சந்திரன் , மீசை ராதாகிருஷ்ணன், பொன்ராம், உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஏசி. ஜான் பீட்டர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராம்நாத் படத்தொகுப்பையும், மகிபாலன் - பால்பாண்டி இருவரும் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர். லாக்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் ஸ்ரீ கண்ணன் லட்சுமணன் தயாரிக்க, கதை, வசனம் எழுதி ஜெயந்தன் அருணாசலம் இயக்கி உள்ளார்.
யாமன்
கே.எஸ். மணிகண்டன் கதை எழுதி இயக்கி, தயாரித்துள்ள இந்த படத்தில் சக்தி சிவன், காயத்ரீ ரீமா, திவ்ய பாரதி, சம்பத்ரம், எல் ராஜா, அருள் டி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சக்தி ஷியாம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வாத்தியார் குப்பம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாத்தியார் குப்பம் என்ற கிராமமான வட இந்திய சங்கமான வாத்தியார் குப்பத்தில் ஒரு நிறுவனத்தைத் திறப்பதை ஆதரிக்கும் எம்.பி. மற்றும் அவரது தம்பி எம்.எல்.ஏ., கதாநாயகன் காலித் மற்றும் அந்தோணி தாசனுடன் சேர்ந்து களத்தில் இறங்கி வாத்தியார் குப்பத்தை மீட்டெடுத்தார்களா என்பதுதான் கதை. ரஹ்மத் ஷாகிஃப் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஷ்மிதா ஹிவாரி, சாம்ஸ், அந்தோணி தாஸ், கஞ்சா கருப்பு, பாவா, 'மீசை' ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கீனோ
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்துள்ள இந்த படத்தை எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார் ஆர்.கே.திவாகர். இத்திரைப்படத்தில் மகாதாரா பகவத் மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன் ராஜேஷ்கோபிஷெட்டி இவர்களோடு பலர் நடித்திருக்கிறார்கள். ஆலிவர் டென்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.