
சமீபத்திய ஆண்டுகளாக பாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் புயலாக தாக்கி பல பிளாக்பஸ்டர்களை உருவாக்கியுள்ளது. தென்னிந்திய திரைப்படங்களின் சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றி, பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி, தென்னிந்தியாவை சேர்ந்த பல நடிகர்களை இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் சேர்க்க உதவியுள்ளது. இந்தக் கட்டுரையில், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் தரவுகளின் அடிப்படையில், அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்களை தரவரிசைப்படுத்தி, இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களின் வருவாயைப் பற்றி ஆராய்வோம்.
1. ரூ.350 கோடி நிகர மதிப்புடன், அல்லு அர்ஜுன் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் வெளியான புஷ்பா 2 (2024) பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது. புஷ்பா தொடரின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உச்சத்திற்கு உயர்ந்துள்ளார். அல்லு அர்ஜுன் இந்த படத்திற்காக ரூ.300 கோடி வசூலித்ததாகவும், தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய்யை கூட விஞ்சியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. தளபதி விஜய் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். ஒரு படத்திற்கு ரூ.130 கோடி முதல் ரூ.275 கோடி வரை சம்பளம் வாங்கும் இவர் 2-வது இடத்தில் உள்ளார். ரூ.474 கோடி நிகர மதிப்புடன், விஜய் இரண்டு தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் ஒரு ஆதிக்க சக்தியாக மாறியுள்ளார். இவரது 2023-ம் ஆண்டு பிளாக்பஸ்டர் லியோ திரைப்படம் உலகளவில் ரூ.612 கோடிக்கு மேல் வசூலித்து, அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படமாக அமைந்தது.
3. ரசிகர்களால் செல்லமாக "கிங் கான்" என்று அடிக்கடி அழைக்கப்படும் ஷாருக்கான், இந்தியாவின் பணக்கார நடிகர் என்ற பட்டத்தை வைத்திருக்கிறார். அவரது நிகர மதிப்பு ரூ.6,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். 2023-ம் ஆண்டில், இவரின் ஜவான் மற்றும் பதான் ஆகிய இரண்டு சாதனைப் படங்கள், ஒவ்வொன்றும் உலகளவில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூலித்தது.
4. தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் ரஜினிகாந்த், உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் 4-வது இடத்தில் இருக்கும் இவர், அவர் ஒரு படத்திற்கு ரூ.125 கோடி முதல் ரூ.270 கோடி வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு வெளியான வேட்டையன் என்ற அதிரடி படத்தில் நடித்ததற்காக அவர் ரூ.125 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
5. தனது ரசிகர்கள் மத்தியில் 'மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்' என்றும் அழைக்கப்படும் அமீர்கான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். ரூ.1,862 கோடி நிகர மதிப்புடன், அவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.275 கோடி வரை அதிக சம்பளம் பெறுகிறார்.
6. இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரங்களில் ஒருவரான பிரபாஸின் நிகர மதிப்பு ரூ.241 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கும் இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் உலகளவில் பிரபலமானார். கடந்த எட்டு ஆண்டுகளில், அவரது நிகர மதிப்பு 94 சதவீதம் அதிகரித்துள்ளது.
7. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். ரூ.196 கோடி நிகர மதிப்புள்ள அவர், ஒரு படத்திற்கு ரூ.105 கோடி முதல் ரூ.165 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
8, 9- வது இடங்களில் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் உள்ளனர். ரூ.2,900 கோடி நிகர மதிப்புடன், சல்மான் கான் பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் முன்னிலையில் உள்ளார். ஒரு படத்திற்கு ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கும் இவர், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை வழங்குகிறார். அவரது சமீபத்திய வெளியீடான டைகர் 3, உலகளவில் ரூ.466.63 கோடிக்கு மேல் வசூலித்து, உலகளாவிய வெற்றியைப் பெற்றது.
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நபரான கமல்ஹாசன், ஒரு படத்திற்கு ரூ. 100 முதல் ரூ. 150 கோடி வரை அதிக சம்பளம் பெறுகிறார். ரூ.150 கோடி நிகர மதிப்புள்ள அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய துறைகளில் சுமார் 220 படங்களில் நடித்துள்ளார்.
10. ஹேரா பெரி மற்றும் பூல் புலையா போன்ற படங்களில் தனது அசாத்தியமான நகைச்சுவை காட்சிகளுக்கு பெயர் பெற்ற அக்ஷய் குமார், ஒரு படத்திற்கு ரூ.60 கோடி முதல் ரூ.145 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சுமார் ரூ.2,500 கோடி நிகர மதிப்புள்ள இவர், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார்.