வெளியானது பாலாவின் 'வணங்கான்' ட்ரைலர்!

Vanangaan
Vanangaan
Published on

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

முன்னணி இயக்குனராக வளம் வரும் இயக்குனர் பாலாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என முக்கியமான திரைப்படங்களை இயக்கிய பாலா கடைசியாக இயக்கிய வர்மா திரைப்படம் வெளியாகவில்லை. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா, தங்களுக்கு திருப்தியில்லை என வர்மாவை தயாரித்தவர்கள் படத்தை முற்றாக நிராகரித்தனர். பிறகு ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதே கதையை வேறொரு இயக்குநரை வைத்து இயக்கி வெளியிட்டனர்.

இதனால் இந்த படம் பாலாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அவர் மீண்டும் பழைய பாலாவாக திரும்பி வர வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் பாலா, சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தைத் தொடங்கினார். ஒரு ஷெட்யூல்ட் முடிந்த நிலையில், இந்த படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார். இதையடுத்து, வணங்கானில் அருண் விஜய் ஒப்பந்தமானார். ஒரு கையில் பெரியார் சிலையும், மறுகையில் விநாயகர் சிலையுமாக அருண் விஜய் இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதன் பிறகு படம் குறித்த எந்தத் தகவலும் இல்லாமலிருந்தது.

இதையும் படியுங்கள்:
தங்கலான் பட ட்ரைலர் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Vanangaan

அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையின் போது மிஷன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல விபத்தை தாண்டி இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு ஹிட்டாக இருந்தது. தற்போது இவரின் வணங்கான் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. பாலா படம் என்றாலே மிரட்டலாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைலர் எப்படி இருக்கு?

ட்ரைலர் முழுவதும் அருண் விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகள் தான் உள்ளது. போலீசாக சமுத்திரகனியும், நீதிபதியாக மிஸ்கினும் மிரட்டியுள்ளனர். ரத்தம் தெறிக்க தெறிக்க நிறைய சண்டைகாட்சிகள் நிரம்பியுள்ளது. ஜிவி பிரகாஷின் இசையும் படத்திற்கு மெருகேற்றியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் படம் மாஸாக இருக்கும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com