ரஜினிக்கு வில்லன் இவரா? 39 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ!

Vettaiyan poster
Vettaiyan poster
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் ஏற்கனவே நிறைய திரைப் பிரபலங்கள் இணைந்துள்ளனர். அந்தவகையில் தற்போது படத்தின் வில்லன் பற்றிய சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ஹிட்டிற்குப் பிறகு ரஜினிகாந்துடன் இணைந்து படம் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து படத்தின் தலைப்பும் போஸ்டரும் வெளியானது. வேட்டையன் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

அந்தவகையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாண்டி மாஸ்டர், பிரித்விராஜ் சுகுமார், திரிஷா, சோபனா போன்றோர் நடிக்கவுள்ளனர். இந்தப் படம் LCU வில் சேராது என்று அரசல் புரசலாக லோகியே கூறினார். ஆனாலும் இது லோகேஷும் ரஜினியும் இணைந்து உருவாக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

அதேபோல் பல பிரபல நடிகர்களும் படத்தில் இணைந்ததால் அதிக அளவு எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது. அந்தவகையில் இந்தப் படத்திற்கு தற்போது மற்றொரு செய்தியும் வந்து எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. படத்தின் வில்லன் யார் என்று தெரியவந்துள்ளது. இவர் 80s களில் சினிமாவில் தனி ராஜ்யத்தை உருவாக்கி ஆட்சிப் புரிந்தவர். இவர் நடிப்பும் இளையராஜாவின் பாடலும் சேர்ந்தால் அது ஒரு தனி வைப்தான். ரஜினி, கமல் போல் அப்போது அவரும் சினிமாவில் சிறந்து விளங்கினார். ஆனால், நாளடைவில் சிறந்த படங்கள் வராததால் அவர் முழுவதுமாக சினிமாவை விட்டு விலகினார்.

அந்தவகையில், நீண்ட காலத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் The Goat படத்தில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இதனையடுத்து தற்போது ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சாய்பாபா கோவிலில் விஜய் எடுத்த புகைப்படம் நீக்கப்பட்டது ஏன்?
Vettaiyan poster

‘மௌன ராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘உதய கீதம்’, ‘பாடு நிலாவே’ போன்ற படங்களில் நடித்த 80s ஹீரோ மோகன்தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். மோகனின் இந்த கம்பேக் மிகவும் ஸ்டார்ங்காக இருக்கிறது என்றே கூற வேண்டும். ஏனெனில், தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கம்மிட்டாகும் இவர், மீண்டும் சினிமாவில் ஸ்டார்ங்காக வலம் வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியும் மோகனும் இதற்கு முன்னர் ஒருமுறை 1985ல் வெளியான ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் இணைந்து நடித்தனர். அந்தவகையில் தற்போது மீண்டும் 39 வருடங்களுக்குப் பிறகு இணையவுள்ளது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com