மக்களோடு மக்களாக அமர்ந்த விஜய்... அட்லீ வீட்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்து வாழ்த்தினார்... வைரலாகும் புகைப்படம்!

மக்களோடு மக்களாக அமர்ந்த விஜய்... அட்லீ வீட்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்து வாழ்த்தினார்... வைரலாகும் புகைப்படம்!
Published on

தமிழ் திரையுலகின் இளம் இயக்குனரான அட்லீயின் மனைவி பிரியா வளைகாப்பிற்கு தளபதி விஜய் நேரில் சென்று வாழ்த்தியதுடன், அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இளம் இயக்குநர்கள் என்றாலே திரைத்துறையில் மிகவும் சிரமப்பட்டு முன்னேறக்கூடிய சூழ்நிலை தற்போது உள்ளது. அதில் இருந்து சற்று ஒருபடி மேலே சென்று அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்தவர் இளம் இயக்குநர் அட்லீ.

ஆரம்பத்தில் குறும்படம், உதவி இயக்குநர் என மற்றவர்களைப் போல சிரமப்பட்டு முன்னேறி வந்தாலும், அவரது முதல் படமே ஆர்யா, நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்ததும், அந்த படம் வெற்றி பெற்றதும், அட்லீக்கு திரைத்துறையில் ஒரு தனி அந்தஸ்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யை வைத்து 2016ல் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

தளபதியின் 'தெறி' திரைப்படம் வெறித்தனமாக இருக்கவே, அடுத்தடுத்து 'மெர்சல்', 'பிகில்' திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்தார் அட்லீ. தற்போது பாலிவுட்டிற்கு தாவியிருக்கும் அட்லீ நடிகர் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

திரைத்துறையில் ஒரு சில படங்களிலேய உச்ச இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்த அட்லீயின் திருமணம் 2014ல் நடைபெற்றது. இவரது மனைவி பிரியா. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அட்லீ-பிரியா ஜோடி திருமணமாகி 8 வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், தற்போது ப்ரியா கர்ப்பமாக இருக்கும் நிலையில், நேற்று பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தளபதி விஜய், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு நேரில் சென்றுள்ளார். எந்தவொரு பந்தாவும் இல்லாமல், மக்களோடு மக்களாக கலந்துகொண்டு, இருவரையும் வாழ்த்தியுள்ளதோடு, பரிசினையும் வழங்கி உள்ளார். இதுசம்பந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com