தளபதி 68-ல் ராகவா லாரன்ஸ்.. வெளியான போட்டோ.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தளபதி 68-ல் ராகவா லாரன்ஸ்.. வெளியான போட்டோ.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்தும் 'மங்காத்தா' என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். சமீபத்தில் சிம்புவை மாநாடு படத்தில் கம்பேக் கொடுக்க வைத்து ஹிட் அடித்தார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, மைக் மோகன், ஜெயராம், யோகி பாபு என பல கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
தளபதி 68 டைட்டில் இதுதான்? பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!
தளபதி 68-ல் ராகவா லாரன்ஸ்.. வெளியான போட்டோ.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்த நிலையில் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தளபதி 68-ல் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்றும், தளபதி விஜய்க்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான் இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் பணியாற்றுவதை ஆசிர்வாதமாக நினைக்கிறேன் என அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பலரையும் கவர்ந்திருப்பார்.

logo
Kalki Online
kalkionline.com