விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்த ஒரே நடிகர் இவர்தான்!

விஜயகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: 25 ஆகஸ்ட்
vijayakanth
vijayakanth
Published on

விஜயகாந்த் இயற்பெயர் விஜயராஜ். ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி 1952 ல் பிறந்தார். திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிடக் கழக கட்சியின் நிறுவனத் தலைவர். 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். 2011 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்.

திரைவாழ்க்கையில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தன் திரை வாழ்க்கை முழுவதும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்த மிகச் சில தமிழ் திரைத்துறை கதாநாயகர்களுள் விஜயகாந்த் ஒருவர்.

இவரது 100வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் என்பதாலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தலைமை ஏற்றதாலும் 'கேப்டன் ' என்ற பட்டத்தையும், புரட்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்ததால் இவர் 'புரட்சி கலைஞர்' என்ற பட்டத்தையும், மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் காரணமாக இவர் 'கருப்பு எம்ஜிஆர் ' என்ற பட்டத்தையும் பெற்றார்.

தமிழ் சினிமாவின் கருணை வள்ளல், பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஹீரோ, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தாத நடிகர் என அனைவராலும் கொண்டாடப்படும் விஜயகாந்த், திரை உலகில் எதிரியே இல்லாத ஒரே நடிகர். 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்த ஒரே நடிகர் 'கேப்டன்' விஜயகாந்த்.

இதையும் படியுங்கள்:
நம்மைச் சிறக்க வைக்கும் சாக்ரடீஸின் கேள்விகள்... கேட்டுப் பாருங்களேன்!
vijayakanth

வாய்ப்பு அளித்த சில புதுமுக இயக்குனர்கள்:

ஊமை விழிகள் : அரவிந்தராஜ்

பிலிம் இன்ஸ்டியூட் மாணவரான அரவிந்தராஜ் இயக்கிய 'ஊமை விழிகள் ' படத்தில் பலரும் நடிக்க மறுத்த வயதான டிஎஸ்பி தீனதயாளன் கேரக்டரில் தனது இமேஜ் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் நடித்து, படம் மாபெரும் வெற்றியடைந்தது. மற்றும் உழவன் மகன், தாய் நாடு படத்திலும் நடித்து அதுவும் வெற்றியை பெற்றது.

புலன் விசாரணை: ஆர்.கே.செல்வமணி.

மற்றொரு பிலிம் இன்ஸ்டியூட் மாணவர் ஆர் கே செல்வமணி படமான புலன் விசாரணை படத்தில் நடித்து இப்படம் வெற்றி பெற்று, விஜயகாந்த் நண்பரான ராவுத்தர், விஜயகாந்தின் நூறாவது படமான  'கேப்டன் பிரபாகரன்' இயக்கும் வாய்ப்பை செல்வமணிக்கு வழங்கினார். அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது.

தெற்கத்திக் கள்ளன்: கலைமணி.

1988-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தெற்கத்திக் கள்ளன் திரைப்படத்தின் மூலமாக கலைமணி இயக்குனராக அறிமுகமானார். சினிமாவில் எழுத்தாளராக இருந்தவர். பாரதிராஜாவின் திரைப்படம் முதல் அனைத்திற்கும் கதை எழுதியவர் கலைமணி.

இதையும் படியுங்கள்:
பிக் பாஸ் 19: போட்டியாளர்களாக களமிறங்கும் ‘WWE The Undertaker’; ‘மைக் டைசன்’! மறக்கமுடியாத சீசனாக மாறுமா?
vijayakanth

பரதன் - சபாபதி தஷிணாமூர்த்தி

மற்றொரு பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் சபாபதி. 1992-ம் ஆண்டு வெளியான பரதன் திரைப்படம் வெற்றி பெற்று சபாபதி இயக்குனராக அடித்தளம் இட்டது.

தேவன் - அருண்பாண்டியன்.

தமிழ் சினிமாவின் நடிகராக வலம் வந்த அருண்பாண்டியன் இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் தேவன். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்து படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று இருப்பார். அருண்பாண்டியனுக்குள் இருக்கும் இயக்குனருக்கான சாட்சியாக இப்படம் அமைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com