மறைந்த நடிகர் விஜய்காந்த் தவறவிட்ட மூன்று படங்கள் குறித்துப் பார்ப்போம்.
விஜயகாந்த் சினிமாவில் ஒரு மரியாதைக்குரிய நபராக வலம் வந்தவர். பின்னர் அரசியலில் என்ட்ரி கொடுத்து அதிலும் ஏராளமான நன்மைகளை செய்தவர் விஜயகாந்த். இவரின் மறைவிற்கு பின்னரே, இவர் குறித்தான பல நல்ல விஷயங்கள் வெளியே வந்துக்கொண்டிருக்கின்றன. திரைத்துறையில் இவர் செய்த செயல்கள் குறித்து இப்போது பலரும் பேட்டி அளிக்கின்றனர்.
ஒரு வருடத்தில் அதிக படங்கள் நடித்தது, அதிக படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தது, தமிழ் தவிர்த்து வேறு எந்த மொழிகளிலும் நடிக்காத நடிகர் போன்ற பல்வேறு சாதனைகளை செய்திருப்பவர் விஜயகாந்த்.
இவர் நடித்த் அத்தனை படங்களுமே மக்கள் மனதைக் கவர்ந்தது. குறிப்பாக இவரின் நடிப்பும், இளையராஜாவின் இசையும் சேர்ந்தால் சொல்லவே தேவையில்லை.
சினிமா துறையில் பலருக்கு வாய்ப்புத் தந்து வாழ வைத்தவர் விஜயகாந்த். அந்தவகையில் அவர் தவறவிட்ட படங்கள் குறித்துப் பார்ப்போம்.
மறுமலர்ச்சி:
1998ம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான மறுமலர்ச்சி படத்தை கே.பாரதி இயக்கினார். இதில் தேவையானி, மனோரமா, ரஞ்சித் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வரும் நன்றி சொல்ல உனக்கு பாடல் இன்றளவும் பலரால் விரும்பிக் கேட்கப்படும் பாடலாகும். இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கேப்டன்கிட்டதான் பேசப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.
முரட்டுக்காளை:
முரட்டுக்காளை படம் என்று சொன்னால், முதலில் ரஜினிகாந்த் தான் நினைவுக்கு வருவார். இரண்டாவதாக பொதுவாக என் மனசு தங்கம் பாடல்தான். இந்தப் பாடலும் இன்றைய இளைஞர்களுக்கு கூட மிகவும் பிடித்தமானது. எஸ்.பி,முத்துராமன் இயக்கிய இந்த படம் 1980ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜயகாந்துக்கு அழைப்பு வந்தது. ஆனால் கேப்டன் அவர்கள் ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவருக்கு வில்லனாக நடிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார்.
இணைந்த கைகள்:
அருண் பாண்டியன், ராம்கி ஆகியோர் நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியான படம்தான் இணைந்த கைகள். என்.கே.விஷ்வநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிக்க முதலில் விஜயகாந்திடமே பேசப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்த மூன்று படங்களுமே அப்போது செம்ம ஹிட் படங்களாகும். ஒருவேளை விஜயகாந்த் மட்டும் இப்படங்களில் நடித்திருந்தார், சூப்பர் ஸ்டார் பட்டம் இவருடையதுதான் என்பதில் சந்தேகம் என்ன?