கில்லி, போக்கிரி வரிசையில் ஜனநாயகன்.! தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.!

Jananayagan Ticket Booking Open Now
Jananayagan Ticket booking
Published on

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் சென்சார் சான்றிதழ் மற்றும் தியேட்டர் உரிமைப் பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளால் படத்திற்கான டிக்கெட் புக்கிங் தாமதமானது.

இந்நிலையில் தியேட்டர் உரிமைப் பங்கீட்டில் சுமூகமான நிலை எட்டியதால் சென்னை, கோவை மறறும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. மேலும் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக சென்சார் சான்றிதழ் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று அல்லது நாளைக்குள் சென்சார் சான்றிதழ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி விடும் என்ற நம்பிக்கையில், தியேட்டர் உரிமையாளர்கள் முன்பதிவை தொடங்கியுள்ளனர்.

ஜனநாயகன் திரைப்படத்திற்கான முன்பதிவு ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் பட்சத்தில் தான், மற்ற மாவட்டங்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை ஜனநாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் விஜய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமாக இருந்தது. டிரெய்லர் வெளியான 2 நாட்களுக்குள் 3.8 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது ஜனநாயகன் டிரெய்லர்.

டிரெய்லரில் இடம் பெற்ற காட்சிகள், கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரியின் ரீமேக் படம் தான் ஜனநாயகன் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது. மேலும் பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் உரிமையை ரூ.4 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனநாயகன் திரைப்படம் பகவந்த் கேசரியின் ரீமேக் தான் என்றாலும், இப்படத்தில் விஜய்க்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜயின் சினிமா பயணத்தில் அவருடைய வெற்றி படங்களை எடுத்துக் கொண்டால் அதில் பாதிக்கும் மேற்பட்டவை, ரீமேக் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிகராக அறிமுகமான ஆரம்ப கட்டத்தில் அவருடைய படங்கள் பெரிதாக வெற்றியடையவில்லை. அதன் பின் தெலுங்கு ரீமேக் படமான ‘பூவே உனக்காக’ திரைப்படம் தான் அவருக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

ஃபிரண்ட்ஸ், பிரியமானவளே, கில்லி, போக்கிரி மற்றும் நண்பன் உள்ளிட்ட விஜய்யின் வெற்றி படங்கள் பலவும் ரீமேக் படங்கள் தான். ஆகையால் பகவந்த் கேசரியின் ரீமேக் ஆன ஜனநாயகன் திரைப்படம் இளைய தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ரஜினி படத்தை ரீ-மேக் செய்ய ஆசைப்பட்ட தளபதி! எந்தப் படம் தெரியுமா?
Jananayagan Ticket Booking Open Now

ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது ரீமேக் படமாகவே இருந்தாலும் தளபதி படம் என ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்நிலையில் 2023-ல் வெளியான பகவான் கேசரியின் தமிழ் டப்பிங் வெர்ஷன் அமேசான் ஓடிடி தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நடிகர் பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இப்படத்தின் ரீமேக் ஜனநாயகன் என்ற பெயரில் தமிழிலும், ஜனநாயுடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை ஜனநாயகம் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் 60% தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கும் பராசக்தி திரைப்படத்திற்கு 40% தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்கும் இன்று காலை முன்பதிவு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஒரு நல்ல படம் எப்படி இருக்கணும் தெரியுமா?
Jananayagan Ticket Booking Open Now

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com