

01/09/2026 முதல் புதிய தமிழ்ப்படங்கள் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை போட்டிருப்பதால், இந்த வாரம் போட்டி போட்டுக்கொண்டு பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டாக்ஸிக்’ மெகா பிளாப் ஆனதால், தியேட்டர் கிடைக்கும் என்ற தைரியத்தில் கடைசி நேரத்தில் சில படங்கள் கூடுதலாக ரிலீஸ் ஆகலாம்.
எதிர்பார்ப்பில் இருக்கும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள், இரண்டு லோ பட்ஜெட் படங்கள், ஒரு ரீ-ரிலீஸ் படம் என ஆக மொத்தம் 5 படங்கள் வெளியாகின்றன.
ஹாய்
ஒன்ஸ்மோர்
அமரம்
ஆக்குவாய் காப்பாய்
இதயத்தை திருடாதே(1989)
1. ஹாய்
நயன்தாராவின் சொந்தப் படம் இது. கவின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நாயகியாக நடிப்பதை இண்டஸ்ட்ரியில் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
‘ஏஜ் கேப் லவ் ஸ்டோரி’ (Age gap love story) இப்போது பிரபலம் ஆகி வருகிறது. 18 வயது நாயகி + 41 வயது நாயகன் என்ற கதை அமைப்பில் வந்த விஸ்வநாத் & சன்ஸ் ஹிட். 19 வயது நாயகி + 30 வயது நாயகன் என்ற கதை அமைப்பில் வந்த பெத்லேகம் குடும்ப யூனிட் என்ற மலையாளப் படம் மெகா ஹிட்.சச்சின் டெண்டுல்கர் கூட தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத்தான் மணந்திருக்கிறார். அதுபோல வயதில் சீனியரான நயன்தாரா, ஜூனியரான கவின் ஜோடியாக நடிப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ட்ரெய்லரை பார்க்கும்போது நயன்தாராவின் கெட்டப் யாரடி நீ மோகினி படச் சாயலில் இருக்கிறது. கண்ணியமான உடை, கௌரவமான தோற்றத்தில் நடிகை நயன்தாராவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரசித்த வசனங்கள்:
"ஆணின் வாழ்க்கையில் 3 ரகங்கள்:
காதலிச்சுக் கல்யாணம் பண்றது.
கல்யாணம் பண்ணிட்டுக்காதலிக்கிறது.
காதலிக்கவும் முடியாம, கல்யாணம் பண்ணவும் வழியில்லாம வேஸ்ட் லக்கேஜா சுத்திட்டு இருக்கிறது."
"நாட்ல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு? நீ என்னடான்னா ஒரு பொண்ணு உன்னை லவ் பண்ணலைன்னு சாகப்போறேங்கற... உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா?"
"என்னை விட கண்ணாடி மட்டும்தான் உனக்கு சிறுசு, மூத்த சமாச்சாரம் எல்லாம் பெருசு."
"எப்பேர்ப்பட்ட பொண்ணா அவ இருந்தாலும், நீ எடுக்கிற ரிஸ்க் ரொம்பப் பெருசு."
"இதுவரை ஈஸியா தோத்துட்டேன், இனி உசுரைக் குடுத்தாவது ஜெயிப்பேன்."
"அவலை மாதிரி இன்னொருத்தி கிடைக்க மாட்டா."
புது இயக்குநர் விஷ்ணு ஏதவன் இயக்கியிருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இதில் கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா, கே. பாக்யராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
சென்சாரில் 'யு/ஏ' (U/A) சான்றிதழ் தந்திருக்கிறார்கள். ரன்னிங் டைம் 144 நிமிடங்கள்.
2. ஒன்ஸ் மோர்
சிவாஜி கணேசன், விஜய் நடிப்பில் 1997-இல் ரிலீஸ் ஆகி சுமாரான வெற்றி பெற்ற படம். அதே டைட்டிலில் இப்போது அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இசை: ஹிஷாம் அப்துல் வஹாப். இவர் தெலுங்கில் மெகா ஹிட்டான ஹாய் நன்னா, மலையாளத்தில் ஹிட்டான ஹிருதயம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கிறார்.
வழக்கமாக அர்ஜுன் தாஸை ரவுடியாக, வில்லனாக, 'ரஃப் அண்ட் டஃப்' (Rough and Tough) கேரக்டரில் பார்த்துப் பழகிய நமக்கு, ட்ரெய்லரில் லவ்வர் பாயாக, லவ்வபிள் பாயாகப் பார்ப்பது புதுசாக இருக்கிறது.
ரசித்த வசனங்கள்:
"உன் பர்த் டே எப்போ? சொல்லு."
"மூணு மாசத்துக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சு. ட்ரை பண்ணாத."
"என் பர்த் டே எப்போனு சொல்லு?"
"நீ என்ன மதர் தெரேசாவா?"
"ஓஹோ! எங்கே... மதர் தெரேசா பர்த் டே எப்போ? சொல்லு."
"ஹாய்... ரகு... நான் தான் அஞ்சலி..."
"இங்கே என்ன பண்றே?"
"Flirt பண்றேன்."
"நீ தப்பான ஆள் பின்னால சுத்தறே."
"ஓ... நீ அந்த மாதிரி டைப்பா? (Gay)"
"ஒரு வேளை நான் உன்னைத் துரத்தி வர்றதை நிறுத்திட்டா நீ என்ன செய்வே?"
"நீ நிறுத்த மாட்டே."
"ஒரு வேளை நிறுத்திட்டா?"
"நான் உன்னைத் தேடி வருவேன்."
"நீ நல்ல பொண்ணா இருந்தா உன்னைக் கையெடுத்துக் கும்பிடறேன், என்னை சுத்தி வர்றதை நிறுத்து."
"ஆமா, உனக்கு ஏன் என்னைக் கண்டதும் காதல்?"
"நான் ஒரு நல்ல தமிழப் பையன், நீ ஒரு நல்ல கேரளப் பொண்ணு. நீ எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் பார்த்ததில்லையா?"
"நீ ஆட்டோகிராஃப் பார்க்கலையா? விண்ணைத்தாண்டி வருவாயா? இந்த கிராஸ் கல்ச்சர் லவ் (மாநிலம் விட்டு மாநிலம்) எல்லாம் ஃபெயிலியர் தான்."
"டிராஜடின்னு நீயா ஏன் முடிவு பண்றே? இது காதல்."
சென்சாரில் 'யு/ஏ' (U/A) சான்றிதழ் தந்திருக்கிறார்கள். ரன்னிங் டைம் 137 நிமிடங்கள்.
3. அமரம்
நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த அமரன் படத்துக்கும், மம்முட்டி நடிப்பில் 1991-இல் ரிலீஸ் ஆன அமரம் படத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தேஜஸ் கிருஷ்ணன் + ஐரா அகர்வால் ஜோடியாக நடிக்க, திருவருள் கிருஷ்ணன் இயக்கியிருக்கும் ரொமாண்டிக் ஆக்சன் த்ரில்லர் இது.
செம்மரக் கடத்தலை மையப்படுத்தி ஆல்ரெடி தமிழில் முரளி நடித்த அதர்மம், தெலுங்கில் புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்கள் வந்திருக்கின்றன.
இதிலும் அந்த செம்மரக் கடத்தல் பேக்ட்ராப்பில் தான் கதை நகரும் போல் தெரிகிறது.
ட்ரெய்லரைப் பார்த்தால் அடிதடி, வெட்டு, குத்து என்று ரத்தம் தெறிக்கிறது.
ரசித்த வசனங்கள்:
"இங்கே சம்பவம் பண்ணாத்தான் காசு. துணிச்சலுக்குத்தான் முதல் மரியாதை."
"அவன் பார்க்காத வன்மமும் இல்லை, செய்யாத வன்முறையும் இல்லை."
"அவன் தேவையானதை மட்டும் தான் பொறுத்துக்குவான்."
"ஒரு உசுரைப் பார்த்தா மொத்தத் தொழிலும் வேற பக்கம் போயிடும்."
"உன்னை நம்பி யாரை வேணா அனுப்பலாம். கருப்பசாமி மாதிரி நீ."
"தன் தலையைக் குடுக்கறவன்தான் அடுத்த மாவட்டத் தலைவன்."
"நீங்க நினைக்கிற மாதிரி அங்கே இருக்கிறவன் மந்தையில் இருக்கும் ஆடு இல்லை."
மிக்கி ஜே மேயர் தான் இசை.
ஜார்ஜ் மரியான், ஹரீஷ் பெராடி முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள்.
4. ஆக்குவாய் காப்பாய்
கனடாவில் தயாரிக்கப்பட்ட படம் இது. கதை, திரைக்கதை, இயக்கம்: எஸ். மதிவாசன்.
சகாப்தன் எழுதிய அரங்காடல் நாடகத்தைத் தழுவித் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கனடாவில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் போராட்டங்களை மையமாகக் கொண்ட கதை இது.
தொடக்கம், வெண்ணிலவின் அரங்கேற்றம், நோக்க நோக்க ஆகிய படங்களைத் தயாரித்த லூனார் மோஷன் பிக்சர்சாரின் படம் இது.
'அஸ்பெக்ட்ஸ் ஆஃப் அக்செப்டன்ஸ்' (Aspects of Acceptance) என்ற சப்-டைட்டிலுடன் வருகிறது.
ரசித்த வசனங்கள்:
"வாழ்க்கையில் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் என் முதல் சாய்ஸே ராங்."
"நேச்சுரல்ஸை ஷேர் பண்றதுல ஆட்சேபனை இல்லையே?"
"நோ... நோ..."
"இப்போ நேச்சுரல்ஸ்... விட்டா லைஃபையே ஷேர் பண்ணச் சொல்லிக் கேட்பீங்க போலயே?"
"எல்லாத்தையும் வித்தியாசமான கண்ணோட்டத்திலேயே பார்ப்பது எதுக்கு? நான் என்ன கிரிமினல் குற்றமா செஞ்சுட்டேன்?"
5. இதயத்தை திருடாதே (1989)
இயக்குநர் மணிரத்னம் தெலுங்கில் முதன்முதலாக இயக்கிய படம் கீதாஞ்சலி. அதன் தமிழ் டப் வெர்ஷன் தான் இது.
நாகார்ஜுனா, கிரிஜா, அமரர் சவுகார் ஜானகி நடித்த படம்.
இதில் வாலி எழுதி, இளையராஜா இசையமைத்த 7 பாடல்களும் மெகா ஹிட்.
நாயகன், நாயகி இருவருமே விரைவில் இறக்க இருப்பவர்கள் (நோயாளிகள்). இவர்கள் காதலித்தால் என்ன ஆகும்? என்பதுதான் கதையின் ஒன்-லைன். படம் முழுக்க ஜாலி, கலாட்டாவாக இருக்கும்.
இதில் நாயகன் நாகார்ஜுனா ஒரு சீனில் கூட சிரிக்கவே மாட்டார். நாயகி கிரிஜா படம் முழுக்க சிரித்த முகத்துடன் இருப்பார்.
சூப்பர் ஹிட் பாடல்கள்:
விடிய விடிய நடனம் சந்தோஷம் (ஹீரோ ஓப்பனிங் சாங்)
ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான் (ஹீரோயின் ஓப்பனிங் சாங்)
காவியம் பாட வா தென்றலே
ஓ ப்ரியா ப்ரியா (கனவுப் பாட்டு)
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
ஓ பாப்பா லாலி
ஓம் நமஹ உயிரின்...
பி. சி. ஸ்ரீராமின் கேமரா வர்ண ஜாலம் நிகழ்த்தியிருக்கும் படம் இது. தேசிய விருது பெற்ற படம்.