10,000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கும் உலகின் பழமையான நகரங்கள்! ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

The oldest city
The oldest city

பொதுவாக ஒரு நகரம் என்று சொன்னாலே, நமக்கு பெரும்பாலும் உயரமான கட்டிடங்கள், பரபரப்பான சாலைகள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகளை பற்றி தான் கற்பனை செய்து பார்க்கிறோம். ஆனால் அத்தகைய நவீன உள்கட்டமைப்பு இல்லாத காலத்திற்கு முன்பாகவே, பல பழங்கால நகரங்கள் மெது மெதுவாக வர்த்தகம், அரசியல் மற்றும் கலாச்சாரங்களின் மையங்களாக மாறியிருக்கின்றன. இந்த நகரங்களில் உள்ள தெருக்களும், கட்டிட சுவர்களும் மற்றும் சாலைகளும் ஆயிரக்கணக்கான தலைமுறைகளையும் மற்றும் பல்வேறு வெற்றிகளின் உருவகங்களையும் குறிப்பதோடு மட்டுமல்லாமல் மனிதகுலம் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதையும் சுமந்து செல்கின்றன.

உலகின் இந்த பழமையான நகரங்கள் வெறும் தொல்பொருள் தளங்களாகவோ அல்லது இடிந்த கூடங்களாகவோ திகழவில்லை, மாறாக இந்நகரங்களில் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் மரபுகளை பின்பற்றி கொண்டிருக்கிறார்கள். இந்த நகரங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் வாழ்வாதாரத்தைப் பற்றிய கதைகளைக் கொண்டுள்ளன.

உலகின் பழமையான நகரங்கள் நமக்கு எழுத்து முறைகள், மத மரபுகள், பல்வேறு தத்துவங்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை வழங்குகின்றன. மேலும், இன்றளவும் அவைகள் நம் உலகத்தை வடிவமைக்கின்றன.

அப்படிப் பட்ட மிகப் பழமை வாய்ந்த உலகின் 10 நகரங்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்..

1. ஜெரிகோ, மேற்குக் கரை:

Jericho, West Bank
Jericho, West BankImg credit: Wikipedia

உலகின் மிகப் பழமையான நகரமாக ஜெரிகோ பரவலாகக் கருதப்படுகிறது. கி.மு. 9600 முதல் மக்கள் இங்கு வசித்து வருவதைக் குறிக்கும் வகையில் பல்வேறு தொல்பொருள் சான்றுகள் உள்ளன. முதல் நகர்ப்புற குடியிருப்புகளில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரபலமான கண்டுபிடிப்பு ஜெரிகோ சுவர் ஆகும். இது கி.மு. 8000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது மற்றும் உலகின் மிகப் பழமையான நகரச் சுவராகவும் அறியப்படுகிறது. பைபிள், எரிகோவைப் பற்றியும் இந்த நகரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நகரம் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாகரிகங்களால் ஆளப்பட்டு வருகிறது. போர்கள் மற்றும் மோதல்கள் இருந்தபோதிலும், இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் நகரமாக இந்த நகரம் உள்ளது.

2. பைப்லோஸ், லெபனான்:

Byblos, Lebanon
Byblos, LebanonImg credit: Wikipedia

நவீன கால ஜேபீல் என்று அழைக்கப்படும் பைப்லோஸ், புதிய கற்காலம் முதல் மக்கள் வசிக்கும் இடமாக கருதப்படுகிறது. இந்த நகரம் பண்டைய எகிப்துக்கு ஒரு முக்கிய வர்த்தக துறைமுகமாக இருந்தது. மேலும் இது சிடார் மரம் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கியது. பல நவீன எழுத்துக்களின் மூலமாகக் கருதப்படும் ஃபீனீசிய எழுத்துக்களின் பிறப்பிடமாக பைப்லோஸ் அறியப்படுகிறது. கோயில்கள், ரோமானிய எச்சங்கள் மற்றும் இடைக்கால சுவர்கள் போன்ற தொல்பொருள் பொக்கிஷங்களால் இந்த நகரம் நிரம்பியுள்ளது. 1984 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ பைப்லோஸை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

3. ப்ளோவ்டிவ், பல்கேரியா:

Plovdiv, Bulgaria
Plovdiv, BulgariaImg credit: The Guardian

ப்ளோவ்டிவ் பெரும்பாலும் ஐரோப்பாவின் பழமையான நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் திரேசியர்கள், மாசிடோனியர்கள், ரோமானியர்கள் மற்றும் ஒட்டோமான்கள் தங்கள் அடையாளத்தை விட்டுச் சென்றதைக் காணலாம். இந்த நகரம் ஒரு காலத்தில் மாசிடோனின் பிலிப் 11 இன் கீழ் பிலிப்போபோலிஸ் என்ற பெயரில் மிகவும் செழிப்பாக இருந்தது. இன்று, ப்ளோவ்டிவ் மிகவும் நவீன நகரமாக இருந்தாலும், இந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட தொல்பொருள் தளங்கள் உள்ளன. அவற்றில் பண்டைய திரையரங்குகள், ரோமானிய நீர்வழிகள் மற்றும் ஒட்டோமான் மசூதிகள் அடங்கும். இது கி.பி. 815 இல் பல்கேரியர்களால் கைப்பற்றப்பட்டது. ப்ளோவ்டிவ் என்ற பெயர் முதன்முதலில் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

4. அலெப்போ, சிரியா:

Aleppo, Syria
Aleppo, SyriaImg credit: Britannica

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அலெப்போ நாகரிகங்களின் சந்திப்பாக அறியப்படுகிறது. இந்த நகரத்தின் இருப்பிடம் மத்தியதரைக் கடல் மற்றும் மெசபடோமியா இடையே ஒரு முக்கிய வர்த்தக மையமாக செயல்பட்டது. எப்லா பலகைகள் கி.மு. 3000 க்கு முந்தையவை மற்றும் அலெப்போவைப் பற்றிய முதல் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகும். நவீன காலத்தில், சிரிய உள்நாட்டுப் போரின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக அலெப்போ மாறியுள்ளது. இருந்த போதிலும், இது 1986 முதல் உலக பாரம்பரிய தளமாக உள்ளது மற்றும் இந்த நகரம் மீள்தன்மையின் அடையாளமாக செயல்படுகிறது.

5. ஆர்கோஸ், கிரீஸ்:

Argos, Greece
Argos, GreeceImg credit: Global Travel Guide

ஆர்கோஸ் 7,000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்கள் வசித்து வரும் ஒரு நகரமாகும். இது ஐரோப்பாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது மைசீனியன் காலத்தில் முக்கிய பங்கு வகித்தது மற்றும் பெலோபொன்னீஸைக் கட்டுப்படுத்துவதில் ஸ்பார்டாவுடன் போட்டியிட்டது. இந்த நகரம் கிரேக்க புராணங்களால் மூழ்கியுள்ளது. இது ஜீயஸின் மகன் பெர்சியஸின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, ஆர்கோஸ் ரோமானியர்கள் மற்றும் பைசாண்டின்களின் கீழ் செழித்து வளர்ந்தது. இன்றும் இது ஒரு விவசாய மையமாக உள்ளது.

6. சூசா, ஈரான்:

Susa, Iran
Susa, IranImg credit: Tripadvisor

இந்த நகரம் இப்போது இதே பெயரில் இல்லை. ஆனால், ஈரானில் உள்ள சிறிய நகரமான ஷுஷ், பழைய நகரத்தின் அதே இடத்தில் உள்ளது. இது அதன் தொடர்ச்சியைப் பராமரிக்கிறது. இந்த நகரம் கிமு 8000 க்கு முந்தையது. இது அசீரியர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு எலாமைட் பேரரசின் தலைநகராக இருந்தது. இது கிரேக்க சைரஸின் கீழ் அச்செமனிட்ஸ் பேரரசால் கையகப்படுத்தப்பட்டது. ஏஸ்கிலஸின் நாடகம் இங்கு நடைபெறுகிறது. இது நாடக வரலாற்றில் மிகப் பழமையான நாடகம். சுசானில் இப்போது சுமார் 65000 மக்கள் வசிக்கின்றனர்.

7. எர்பில், ஈராக் குர்திஸ்தான்:

Erbil, Iraqi Kurdistan
Erbil, Iraqi KurdistanImg credit: wikipedia

இது ஈராக்கிய குர்திஸ்தானில் உள்ள கிர்குக்கின் வடக்கே அமைந்துள்ளது. இந்த இடம் அசீரியர்கள், பெர்சியர்கள், சசானிட்கள், அரேபியர்கள் மற்றும் ஒட்டோமான்சன் ஆகியோரால் மாறி மாறி வாழ்ந்த இடமாக இருந்தது. நகரத்தின் மையத்தில், ஹவ்லர் கோட்டை என்றும் அழைக்கப்படும் எர்பில் கோட்டை உள்ளது. இது கிமு 2,000 க்கு முந்தைய ஒரு பழங்கால அமைப்பாகும். அதன் பழங்கால கோட்டை இன்னும் அடிவானத்தை நோக்கியே உள்ளது. இந்த நகரம் நவீன மால்கள், பழங்கால தளங்கள் மற்றும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும்.

இதையும் படியுங்கள்:
தஞ்சையின் அடையாளம்: பெரிய கோயிலின் கட்டிடக்கலை ரகசியங்கள்!
The oldest city

8. சீடோன், லெபனான்:

Sidon, Lebanon
Sidon, LebanonImg credit: Britannica

இது 6000 ஆண்டுகளுக்கும் பழமையான நாகரிக நகரமாகும். இதில் இன்னும் மக்கள் வசிக்கின்றனர். பெய்ரூட், சிடோனில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பூமியின் பழமையான ஃபீனீசிய நகரங்களில் ஒன்றாகும். ஃபீனீசியர்கள் கப்பல் கட்டுதல் மற்றும் மத்தியதரைக் கடலில் பயணிப்பதில் பெயர் பெற்றவர்கள். இங்கிருந்துதான் மத்தியதரைக் கடல் பேரரசு வளர்ந்தது. இயேசுவும் புனித பவுலும் இந்த நகரத்திற்கு விஜயம் செய்ததாகவும், கி.மு. 333 இல் அலெக்சாண்டரால் இது கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
லண்டன் நகரின் 'பிக் பென்': பெரிய கோபுரமா? பெரிய மணியா?
The oldest city

9. டமாஸ்கஸ், சிரியா:

Damascus
Damascus

தொடர்ந்து மக்கள் வசிக்கும் பழமையான தலைநகரம் என்று அழைக்கப்படும் டமாஸ்கஸ், உலகின் பழமையான நகரங்களில் பெருமையுடன் இடம் பெறுகிறது.

இதன் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரம் ஒவ்வொரு மூலையிலும் தெளிவாகத் தெரிகிறது; பிரமிக்க வைக்கும் உமையாத் மசூதி, அதன் நேர்த்தியான இஸ்லாமிய வடிவமைப்புபை எடுத்துரைக்கிறது. அஸ்ம் அரண்மனை கடந்த ஒட்டோமான் காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. அதே நேரத்தில் டமாஸ்கஸ் தேசிய அருங்காட்சியகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது. பண்டைய பாரம்பரியம் மற்றும் நவீன துடிப்பு ஆகியவற்றின் கலவையுடன், டமாஸ்கஸ் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

இதையும் படியுங்கள்:
அம்மியில் அரைத்த சுவை, ஆட்டுக்கல்லில் ஆட்டிய மாவு: ஓர் உணர்வுக் குறிப்பு!
The oldest city

10. வாரணாசி, இந்தியா:

Varanasi
Varanasi

இது இந்தியாவின் பழமையான நகரமாகவும், பண்டைய நாகரிகம், மதம் மற்றும் ஆன்மீகத்தின் தாயகமாகவும் உள்ளது. புனித கங்கை நதி இந்த நகரத்தின் வழியாகப் பாய்வதால், இது மிகவும் புனிதமான நகரமாகக் கருதப்படுகிறது. பனாரஸ் என்றும் அழைக்கப்படும். வாரணாசி, உலகின் பழமையான மதமான இந்துமதத்தின்பிறப்பிடமாகும். இது உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது மற்றும் கி.மு. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com