Aristology: உணவின் உணர்வுகளை ஒருங்கிணைக்கும் அழகிய கலை!

அரிஸ்டோலஜி என்பது உணவின் கலை, சுவை, ஆரோக்கியம், அலங்காரம், மரியாதை, கலாச்சாரம் என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு அழகிய துறை.
food serving
Aristology
Published on

மனிதன் வாழ்வில் உணவு என்பது வெறும் பசியை தீர்க்கும் பொருளாக மட்டுமல்ல; அது ஒரு கலை, ஒரு அனுபவம், ஒரு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. உணவை நுணுக்கமாகச் சமைத்து, சுவைத்து, அதை உணர்வுடன் அனுபவிப்பதே அரிஸ்டோலஜி எனப்படும். இந்தத் துறை, உணவை வெறும் உணவாக அல்லாமல் கலைநயத்துடன் கூடிய ஒரு அழகியல் அனுபவமாக உயர்த்துகிறது.

அரிஸ்டோலஜியின் பொருள் மற்றும் அதன் மூலங்கள்

'Aristology' என்ற சொல் கிரேக்க மொழியின் 'Ariston' (உயர்தர உணவு) மற்றும் 'Logos' (அறிவு / ஆய்வு) என்ற சொற்களிலிருந்து உருவானது. அதனால், அரிஸ்டோலஜி என்பது உணவை சமைத்து, பரிமாறி, சுவைத்து, அதன் கலைநயத்தையும் தரத்தையும் அறிந்து அனுபவிக்கும் அறிவியலாகும். இது உணவின் சுவை, வாசனை, வடிவமைப்பு, சமையலின் துல்லியம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விரிவான அறிவு.

உணவை சமைக்கும் கலை

அரிஸ்டோலஜியின் முதல் அம்சம் சமையல் கலை. உணவை வாடகை முறையில் சமைப்பது அல்ல; சுவைக்கு ஏற்ப பொருட்களைத் தேர்வு செய்தல் சரியான அளவு, நேரம், சூடு ஆகியவற்றை பின்பற்றுதல். ஆரோக்கியம் மற்றும் சுவையின் சமநிலையைப் பேணுதல். இவை அனைத்தும் அரிஸ்டோலஜியின் மையக்கருத்துகள்.

இதையும் படியுங்கள்:
உண்ணும் உணவு மற்றும் சாப்பிடும் முறை குறித்து சாஸ்திரங்கள் கூறுவதென்ன?
food serving

உணவின் வடிவமைப்பு மற்றும் பரிமாறுதல்

அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு உணவு தட்டைக் கண்டவுடன் மனம் மகிழும். அரிஸ்டோலஜி உணவை, கண்களுக்கு கவர்ச்சியாக, நிறங்களின் சரியான இணைப்புடன், சீரான அமைப்பில், தட்டின் அளவின்படி சம பங்கிட்டு, பரிமாறுவதைக் கற்றுத் தருகிறது. உணவை அழகாகச் சேகரிக்கும் திறமை, உணவு அனுபவத்தை பலமடங்கு உயர்த்தும்.

சுவைத்தல் மற்றும் உணவு அனுபவம்

அரிஸ்டோலஜி உணவை ஐந்து உணர்வுகளாலும் அனுபவிப்பதை வலியுறுத்துகிறது. உணவு எப்படி கண்களுக்கு காட்சி அளிக்கிறது, தேனாமிர்தம் போன்ற வாசனை, உணவை தொடுவதற்கு மென்மையான தன்மை, இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என பல தரப்பட்ட சுவையின் சமநிலை. சில உணவுகளின் நொறுமொறு தன்மை. ஒவ்வொரு உணவிலுமே இந்த உணர்வுகளின் இணைவு முக்கியம்.

உணவு மற்றும் கலாச்சாரம்

ஒவ்வொரு நாட்டின் உணவிலும் அதன் வரலாறு, மண்ணின் தன்மை, மக்களின் பழக்கவழக்கங்கள் ஆகியவை ஒளிந்திருக்கின்றன. அரிஸ்டோலஜி இந்த கலாச்சாரப் பின்னணியைக் கற்றுக்கொடுத்து, உணவை ஒரு பாரம்பரிய வரலாற்றாகக் காண உதவுகிறது.

உணவு மரியாதை மற்றும் உணவு சூழல்

உணவை எப்படி சாப்பிட வேண்டும், எப்படி மேசை ஒழுங்கை பேண வேண்டும், எந்த உணவுக்கு எந்த கருவிகள் பயன்படுத்தலாம் என்பது போன்ற உணவு மரியாதையும் அரிஸ்டோலஜி கற்பிக்கும். உணவு சாப்பிடும் சூழலும் (Ambience) அனுபவத்தை மாற்றும். ஒளி, இசை, மேசை அலங்காரம், இட அமைப்பு இவை அனைத்தும் அரிஸ்டோலஜியில் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தென்னிந்தியாவின் பிரிய உணவு: இட்லியை கொண்டாடும் இன்றைய கூகுள் டூடுள்!
food serving

அரிஸ்டோலஜி என்பது உணவின் கலை, சுவை, ஆரோக்கியம், அலங்காரம், மரியாதை, கலாச்சாரம் என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு அழகிய துறை. நாம் உணவை வெறும் பசியைத் தீர்க்கும் பொருளாக மட்டும் பார்க்காமல், அதனை உணர்ச்சியையும் அனுபவத்தையும் இணைக்கும் ஒரு கலை வடிவமாகக் காண உதவுகிறது. அரிஸ்டோலஜி மூலம் உணவின் மகத்துவத்தை உணர்ந்து, வாழ்க்கையையும் அழகாக அனுபவிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com