Kashmir Walnut Wood Carving - காஷ்மீர் அக்கரோட்டு மரச்செதுக்கல் சிறியது முதல் பெரியது வரை அழகியப் பொருட்கள்!

Kashmir Walnut Wood Carving
Kashmir Walnut Wood Carving
Published on

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகம் வளரும் அக்கரோட்டு மரத்திலிருந்து, கைகளால் செய்யப்படும் மரச்செதுக்கல் சிற்ப வேலைப்பாடுகளைக் காஷ்மீர் அக்கரோட்டு மரச் செதுக்கல் (Kashmir Walnut Wood Carving) என்கின்றனர்.

மரபு வழியாக, நாகஸ் என அறியப்படும் மரச்செதுக்கல் சிற்ப வேலைப்பாட்டுக் கைவினைஞர்கள் இதில் ஈடுபடுகின்றனர். அக்கரோட்டு மரம் அதிகம் பாரம் அற்ற எடையையும், கயிறு போன்ற வடிவமைப்பையும், சிறப்பு வண்ண முறைகளுடன் கூடிய அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. இந்த மரச்செதுக்கல் உற்பத்தியானது, சிறியது முதல் பெரியது வரை ஆபரணப் பெட்டிகள், மேசைகள், தட்டங்கள் எனப் பல வகைகளிலும் காணப்படுகின்றது.

இந்த உற்பத்தி, அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தின் புவியியல் சார்ந்த குறியீடு பாதுகாப்பின் கீழாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் புவியியல் சார்ந்த குறியீடு சட்டம் 1999 வழியாக, 'காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல்' (Kashmir Walnut Wood Carving) என 182-வது பொருளாக 2011-2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பாரசீகர்களால் காஷ்மீர் மக்களுக்கு, ‘ஈரான் மரச்செதுக்கல் வேலைப்பாடு’ அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது ‘காஷ்மீர் அக்கரோட்டு மரச்செதுக்கல்’ எனப் பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

பாரசீக மரச்செதுக்கல் கைவினைஞர்கள் ஆர்மீனியா அரசன் காலம் தொட்டு மரச்செதுக்கலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நூக்க மரங்களுக்கு (Dalbergia Sissoo) அவர்கள் நாட்டிலும், பலுச்சிசுத்தானத்திலும் தட்டுப்பாடு நிலவியதும், பாரசீகத்தை விட்டுப் புலம் பெயர்ந்தனர். காஷ்மீருக்குப் புலம் பெயர்ந்த அக்கைவினைஞர்கள் இந்திய நூக்க மரத்திற்குப் பதிலாக அக்கரோட்டு மரங்களைப் பயன்படுத்தினர். 

1817 ஆம் ஆண்டில் முகலாய ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியதும், சில மரச்செதுக்கல் கைவினைஞர்களின் குடும்பங்கள் பள்ளத்தாக்கினை விட்டு வேறு இடங்களில் வாழத் தொடங்கினர். மற்றவர்கள் பாக்கிஸ்தானின் முல்தான் என்ற இடத்திற்கும், வேறு சிலர் சகாரன்பூர் மற்றும் வேறு சில இடங்களான ஆக்ரா போன்ற இடங்களுக்கும் குடியேறினர். அக்கரோட்டு மரத்தில் மரச்செதுக்கல் செய்வதில் சிக்கலை எதிர் கொண்டவர்கள் நேரடியாக சகாரன்பூர் பகுதிக்குச் சென்றனர் எனவும் கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
அமெரிக்க பாலைவனத்தில் நடைபெறும் எரியும் மனிதன் திருவிழா தெரியுமா?
Kashmir Walnut Wood Carving

ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஐந்தாம் ஜார்ஜின் புது தில்லிப் பேரவையின் வாயிலிலுள்ள முகப்பு காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல் வேலைப்பாட்டினால் அலங்கரிக்கப்பட்டது. மகாராசா பிரதாப் சிங், மரச்செதுக்கல் வேலைப்பாட்டினை முக்கியமானவர்களுக்கும் அரசக் குடுப்பத்தினருக்கும் அறிமுகப்படுத்துவதில் பங்காற்றினார். அக்கரோட்டு மரங்கள் கிடைப்பது கடினமானதாகும். இதன் நெருங்கிய இழையமைப்பு, குறிப்பாக நூலிழையமைப்பு நன்கு நுட்பமான வேலைக்கும், மேற்பரப்பை இலகுவாக பளபளப்பாக்குவதற்கும் ஏற்றதுமாகும். 

அக்கரோட்டு மரத்தின் வேர், அடிமரம் (தண்டு), கிளை என்று மூன்று பகுதிகள் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வேரிலிருந்து பெறப்படும் பகுதி மூலம், விலை கூடிய பொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. கிளைகள் மங்கலான நிறத்தைக் கொண்டு காணப்படும். இவற்றின் மூலம் சிறு பெட்டிகள், பெரிய அணிகலகலன்களுக்கான பெட்டிகள் செய்யப்படுகின்றன. மரத்தின் தண்டுப் பகுதியை நிறம் கூடியதாகவும், பலமுள்ளதாகவும் இருப்பதால், ஒளிப்படச் சட்டங்கள், தானிய விதைக் கிண்ணம், பழக்கலவைக் கிண்ணம், தட்டுகள், மரத்தளவாடங்கள் போன்றவை செய்யப்படுகின்றன. 

மரச்செதுக்கலில் உயர்ந்தவை, செதுக்கப்பட்டவை, உள் வெட்டப்பட்டவை, சமமானவை என்று நான்கு விதமான நடைமுறைகள் காணப்படுகின்றன. உள் வெட்டப்பட்ட முறைக்கு அதிக நுட்பம் தேவையாயினும், செதுக்கப்பட்டவை அதிகப் புகழ் பெற்றவை.

இதையும் படியுங்கள்:
சீனாவில் இல்லாத சீனா கொட்டாரம்! பின் எங்குள்ளது?
Kashmir Walnut Wood Carving

தற்கால பொருட்களான தட்டுகள், மேசைகள், கிண்ணங்கள், கோப்பைகள் போன்றவற்றில் சமமான மேற்பரப்பு விரும்பப்படுகிறது. காசுமீர் மரச்செதுக்கல் கைவினைஞர்கள், பொதுவாக ரோஜா, தாமரை, ஐரிஸ் போன்ற பூக்கள் போன்ற இயற்கையான வடிவங்களையே மரச்செதுக்கல்களில் அமைக்கின்றனர். கிளைகளில் பழங்களும், பொதுவான வடிவ முறையாகக் காணபப்டுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com