மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக அல்வாவா? இது தெரியுமா?

பட்ஜெட் தாக்கலுக்கு முன் நடத்தப்படும் அல்வா கிண்டும் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
budgetsignificance of halwa ceremo ny
budgetsignificance of halwa ceremo nyimage credit - Free Press Journal
Published on

யூனியன் பட்ஜெட் என்பது அந்த ஆண்டுக்கான இந்திய அரசின் மதிப்பிடப்பட்ட செலவுகள் மற்றும் வரவுகளை உள்ளடக்கிய வருடாந்திர நிதிநிலை அறிக்கை (AFS) ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம்தேதி மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இது ஒவ்வொரு ஆண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

இது மோடி அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியின் 2வது பட்ஜெட்டாகும். இந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம்தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். ஒரு இடைக்கால பட்ஜெட் உட்பட இது நிர்மலா சீதாராமனின் 8வது பட்ஜெட் தாக்கல் ஆகும்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் சாப்பிட சத்தான கருப்பு கொள்ளு சுண்டல்; சூப் !
budgetsignificance of halwa ceremo ny

ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டுக்கு முன் நிதியமைச்சர் ஒரு பெரிய சட்டியில் அல்வா கிண்டுவார். அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த பாரம்பரியம் எப்போது முதல் கடைபிடிக்கப்படுகிறது? என்று பார்க்கலாம்.

இந்திய பாரம்பரியத்தில், எந்த ஒரு புதிய செயலும் அல்லது தொடக்கமும் இனிப்புடன் தொடங்குவது வழக்கம். பொதுவாக, வடமாநிலங்களில் புதிய கொண்டாட்டங்களில் மக்கள் தயிர் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடுகிறார்கள். இது செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா கிண்டும் விழாவில் பங்கேற்று அல்வா செய்து அனைவருக்கும் வழங்குகிறார். அல்வா கிண்டும் நடைமுறை சுதந்திரத்திற்கு முன்பே இருந்துவருகிறது.

பட்ஜெட் தாக்கலுக்கு முன் நடத்தப்படும் அல்வா கிண்டும் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பில் பணி செய்த நபர்களின் கடின உழைப்பை அல்வா கிண்டும் நிகழ்வு குறிப்பதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் ஊழியர்கள், வரவு செலவுத் திட்ட அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். மத்திய நிதியமைச்சர் சிறிது நேரம் அல்வா சமைத்து, பின்னர் மத்திய பட்ஜெட்டைத் தயாரிக்க உதவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அல்வாவை வழங்குவார்.

இதையும் படியுங்கள்:
இன்று ஓடிடியில் வெளியாகும் 'புஷ்பா 2' ரீலோடட் வெர்ஷன்! வீகெண்ட் விருந்து டோய்!
budgetsignificance of halwa ceremo ny

அல்வா பகிர்வது ஒரு முக்கியமான பணிக்கான இனிமையான தொடக்கத்தைக் குறிப்பது மட்டுமில்லாமல் இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இந்திய நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வடிவமைப்பதில் அவர்களின் பங்கை அங்கீகரித்து, மூத்த அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பட்ஜெட் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரின் கடின உழைப்பையும் இந்த விழா கௌரவிப்பதாக கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 9 -10 நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் அல்வா விழாவை நடத்தும் பாரம்பரியம், இந்த விழா மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விழா முடிந்ததும், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குழு அமைச்சகத்திற்குள் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டும். பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை வெளியில் கசிந்துவிடாது இருக்கவும் மற்றும் ஆவணங்கள் மீதான ரகசியம் காக்கவும், அடுத்த 9-10 நாட்களுக்கு, நார்த் பிளாக் அடித்தளம் ஒரு கோட்டையாக மாற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் இணைந்த பிரபல நடிகை
budgetsignificance of halwa ceremo ny

மேலும் பட்ஜெட் தயாரிக்கும் மற்றும் அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ள நிதி அமைச்சக அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது குடும்பத்தினர் மற்றும் வெளியுலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்படுவார்கள். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணில் ஒரு செய்தியை அனுப்ப வசதி உள்ளது. ஆனால், நேரடி தொடர்பு அனுமதிக்கப்படாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com