பெண்கள் சாப்பிட சத்தான கருப்பு கொள்ளு சுண்டல்; சூப் !

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட சத்தான கருப்பு கொள்ளு சுண்டல் மற்றும் சூப் செய்முறையை பார்க்கலாம்.
black horse gram recipes
black horse gram recipesimage credit - Yummy Tummy Aarthi, IndiaMART
Published on

கருப்பு கொள்ளு - இரும்பு, கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவாகும். உடல் எடையைக் குறைக்க கருப்பு கொள்ளு உகந்தது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இது நல்லது என்று கருதப்படுகிறது. கீல்வாதம் மற்றும் மூட்டு வலியை குணமாக்க உதவுகிறது.

கருப்பு கொள்ளு பயறை பயன்படுத்தி 2 சத்தான உணவுகளை செய்முறையை பார்க்கலாம்.

கருப்பு கொள்ளு சுண்டல்:

தேவையான பொருட்கள்:

கருப்பு கொள்ளு - 1 கப்

சுவைக்கு - உப்பு

தேங்காய் துண்டுகள் - கால் கப்

இதையும் படியுங்கள்:
ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் இணைந்த பிரபல நடிகை
black horse gram recipes

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கருப்பு கொள்ளு பயறை முதல் நாள் இரவே நன்றாக ஊறவைக்கவும்.

* காய்ந்த மிளகாயை எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

* வறுத்த காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு பொடித்த பின்னர் அதில் தேங்காய் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* ஊறவைத்த கொள்ளுவை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து 3- 4 விசில், 10 நிமிடம் வேகவைக்கவும். விசில் போனதும் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும். இந்த தண்ணீரை ரசம் அல்லது சூப் செய்து அருந்தலாம்.

இதையும் படியுங்கள்:
கடும் எதிர்ப்பு எதிரொலி - நடிகை ராஷ்மிகாவின் நடன காட்சி நீக்கம்
black horse gram recipes

* ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் வேக வைத்த கருப்பு கொள்ளுவை சேர்த்து நிமிடம் கிளறவும்.

* கடைசியாக பொடித்த தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறிய பின்னர் இறக்கி பரிமாறவும்.

கருப்பு கொள்ளு சூப்:

தேவையான பொருட்கள்:

கருப்பு கொள்ளு - 1 கப்

பூண்டு - 5 பல்

ப.மிளகாய் - 2

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

வெண்ணெய் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

இதையும் படியுங்கள்:
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு இருக்கிறதா? அப்போ இந்த வைரஸ் தாக்கலாக இருக்கலாம்... அலட்சியம் வேண்டாம்!
black horse gram recipes

செய்முறை:

* கருப்பு கொள்ளுவை நன்றாக கழுவி முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காலையில் பிரஷர் குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

* வேக வைத்த கொள்ளு பயறை 2 டீஸ்பூன் எடுத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். இப்படி அரைத்து சேர்த்தால் சூப் திக்கான பதம் வரும்.

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த கொள்ளு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* கொள்ளு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்த கொள்ளு விழுதை சேர்க்கவும்.

* சூப் திக்கான பதம் வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு கலந்து, சூப்பரான கருப்பு கொள்ளு சூப் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com