மங்களப் பொருளா? வரலாற்றுச் சின்னமா? - தேங்காயின் இரு பரிமாணங்கள்!

தமிழகக் கல்வெட்டுகள் தேங்காயை வெறும் உணவாகப் பார்க்காமல், ஒரு தெய்வீகச் சீராகவும், பண்பாட்டு அடையாளமாகவும் பதிவு செய்துள்ளன.
Coconut in tamil culture
CoconutAI Image
Updated on

கல்வெட்டுகளில் தேங்காய் பற்றிய குறிப்புகள், பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு மற்றும் இறை வழிபாட்டில் தேங்காய் வகித்த முக்கிய இடத்தைப் புலப்படுத்துகின்றன.

பழங்காலக் கல்வெட்டுகளில், இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களில் தேங்காய் ஒரு முக்கியப் பொருளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாகச் சோழர் காலக் கோவில்களில், அரிசி மற்றும் பிற உணவுகளுடன் தேங்காயும் சேர்த்தே நைவேத்தியம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் விசேஷம், பண்டிகை, திருமணம், சடங்கு போன்ற எந்த நல்ல நாட்கள் என்றாலும் வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி பூக்களால் அலங்கரித்து பழங்களை படைத்து இறைவனை வழிபாடு செய்வோம். அந்த படையல் தட்டில் மங்களப்பொருள் என அழைக்கப்படும் தேங்காய் இல்லாமல் போனால் அந்த வழிபாடே நிறைவடையாது. ஆனால் இந்த தேங்காய் வெறும் சாமி கும்பிடும் பொருள் மட்டுமல்ல, அது தமிழரின் வரலாற்று சான்று..

தமிழருடைய வாழ்க்கை பயணத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை தேங்காயும், அது தொடர்பான பொருட்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாக தேங்காய் திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
கோவில்களில் உடைக்கும் தேங்காய் அழுகி போயிருந்தால் கெட்ட சகுணமா?
Coconut in tamil culture

இந்த தேங்காய் எப்போது தமிழரின் வாழ்வில் ஒன்றாக இணைந்தது? இதன் வரலாற்று பின்னணி என்ன? இதன் இலக்கிய சான்றுகள் என்ன? என்பனவற்றை இந்த கட்டுரையில் அறிந்துகொள்ளலாம்.

மனசு சரியில்லையா குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு தேங்காய் உடைச்சிட்டு வாங்க. தட்டில் தேங்காய் வைத்து அது மேல குங்குமம் வைத்து தாலிய எல்லோரிடமும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்க..

திருமணம் முடிந்ததும் கோவிலுக்கு போய் தேங்காய் உடைச்சிட்டு வாங்க. குழந்தை பிறந்ததும் தேங்காய் உடைத்து விட்டு வீட்டுக்கு போங்க. சந்தியில் தேங்காய் உடையுங்க. பிள்ளையார் கோவிலில் தேங்காய் விடலை போடுங்க. தேங்காய் அரைச்சு ஊற்றி குழம்பு வைத்தா நல்லா இருக்கும், தேங்காய் பால் வயிற்று புண் ஆற்றும். தேங்காய் தண்ணீரை ஆப்ப மாவில் ஊற்றினால் ஆப்பம் நல்லா வரும். இளநீர் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும் என்று தேங்காய் குறித்த உரையாடல்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டிருப்போம்... சொல்லி இருப்போம்...

அந்த வகையில் வெறும் உடையாடலாய் மட்டும் அல்லாமல் உணர்வு தளத்திலும் நம்மை ஆற்றுப்படுத்தும் பொருளாகவும், உடல் நோய்களை குணப்படுத்தும் பொருளாகவும் தேங்காய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் பழுப்பதிலை. ஆனால் முற்றி விடும். அவ்வாறு முற்றும் தேங்காயை நெற்று என்றும், தெங்கம் பழம் என்றும் அழைப்பர். இதற்கு ‘நாய் உருட்டிய தெங்கம் பழம் போல’ என்ற பழமொழி சான்றாக உள்ளது.

பயிரியல் ஆராய்ச்சியாளர்கள் தேங்காய் வங்கத் தீவுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்தது என்று கருதுகின்றனர். தென் தமிழகத்தில் யாழ்பாணம் தேங்காய் மிக சிறப்பாக பேசப்பட்டுள்ளது. யாழ்பாணம் தேங்காய் ஓடுகளை யாசகர்கள் திருவோடுகளாக பயன்படுத்தி உள்ளனர்.

கிபி 10-ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே வழிபாட்டு பொருட்களில் ஒன்றாக கருதப்பட்டது. விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்திற்கு பின்னரே தேங்காய் வழிபாட்டு பொருட்களில் ஒன்றாக கருதப்பட்டுள்ளது. இந்த செய்தியை பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் தனது பண்பாட்டு அசைவுகள் என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.

எனவே, கல்வெட்டுகள் தேங்காயை வெறும் பழமாகப் பார்க்காமல், தெய்வீகச் சீர் மற்றும் பண்பாட்டு அடையாளமாகப் பதிவு செய்துள்ளன.

இதையும் படியுங்கள்:
நினைத்தது நிறைவேறும்… சிதறு தேங்காய் ஏன்?
Coconut in tamil culture

இவ்வாறு தமிழரின் வாழ்வியலில் முக்கிய இடம் பெறும் தேங்காய் பற்றி வரலாற்றை அறிந்த நாம் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வோம். நமது தமிழ் வரலாற்றை பாதுகாப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com