இந்தி மொழியின் அவசியம் - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!

இந்திய அலுவல் மொழிகள் சட்டமும், இந்தி மொழியின் அவசியமும்..!
Hindi Language
இந்தி மொழிImage credit: AI Image
Updated on

மது நாடு இந்தியா நம் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இந்தியர்கள். இது ஒரு மதசார்பற்ற நாடு இங்கு இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற பல மதங்களைச் சார்ந்த மக்களும் சாதி மதபேதமின்றி வாழ்கின்றனர். இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 3372 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி விளங்குகிறது. இந்த மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 41% பேர். இந்தி மொழி 48% விதமாக பேசப்படுகிறது. இப்படி பேசுபவர்கள் அனைவரையும் கணக்கில் கொண்டு இந்தி பேசுபவர்களின் மொத்த எண்ணிக்கை கணக்கிடப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட இந்தி மொழியின் அவசியத்தைப் பற்றி இக்கட்டுரையில் இனி விரிவாய் காண்போம்.

இந்தி மொழி வரலாறும் இந்திய அலுவல் மொழிச் சட்டமும்:

இந்தி மொழியானது இஸ்லாம் மதத்தவரான முகலாய அரசர்கள் வடநாட்டின் மீது படை எடுத்து தில்லியை கைப்பற்றினார்கள். அப்போது அவர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகும். 'முகமது கோரி' என்னும் மன்னர் இந்திய மன்னர்களை கிபி 1175-ம் ஆண்டில் வென்றார்.

முகமது துக்ளக் என்னும் மன்னனின் ஆட்சியானது தில்லியில் நிலைபெற்று நின்றது. அக்காலத்தில் தில்லி நகரிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பிராகிருத சிதைவான ஒரு மொழி வழங்கிக் கொண்டு இருந்தது. அப்போது இஸ்லாம் மதத்தவரால் மிகுதியாய் பேசப்படும் பாரசீக அரபு மொழியானது முற்றிலும் நீக்கப்பட்டு சமஸ்கிருத வார்த்தைகள் அதிகமாக சேர்க்கப்பட்டு இந்தி மொழியானது புதிதாக உருவாக்கப்பட்டது.                     

இதையும் படியுங்கள்:
கடற்கரை சிப்பிகளுக்குள் மறைந்திருக்கும் பழங்கால மனிதனின் வியக்கவைக்கும் அழகுணர்வு!
Hindi Language

ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஆங்கில மொழியை ஏற்கும் இந்திய மக்கள் இந்தி மொழியையும் ஏற்று இந்தி மொழி அறிவினையும் வளர்த்துக்கொள்ளலாம்.

நியூயார்க்கில் உள்ள ஐநாவின் தகவல்கள் மற்றும் செய்திகளை பல மொழிகளில் வெளியிடும் இந்தியாவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. முதல் முறையாக இதில் இந்தியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்திய அலுவல் மொழிகள் சட்டம் 1963 ஆண்டு இயற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பிறகு 1976, 1987, 2007ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்த சட்ட விதிகள் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியை அலுவல் மொழியாக ஆக்கிக் கொள்ள உரிமை உண்டு என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டது.    

Hindi Language
இந்தி மொழிImage credit: AI Image

கலாச்சார பரிமாற்றத்திற்கு இந்தி மொழி வழங்கும் நன்மைகள்:

இந்தி மொழியை கற்பதினால் நாம் பிற மாநிலங்களுக்குச் செல்லும்பொழுது மொழிப்பிரச்னை ஏற்படாது. வணிகங்கள் சிறப்பாக நடக்கும். வடமாநிலத்தவருக்கும், தென்மாநிலத்தவருக்கும் ஒற்றுமை ஏற்படும். இப்பொழுது மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. ஆகவே இந்தி மொழியைப் படிப்பதினால் நன்மை மட்டுமே. 

இதையும் படியுங்கள்:
தன் தாயின் முகத்தைக்கூட பார்த்ததில்லை! வரலாற்றில் இப்படியும் ஒரு விசித்திர மனிதரா?
Hindi Language

நம் நாட்டில் பல பேர் இந்தி மொழியை படித்தால் தமது தாய் மொழி அழிவிற்கு சென்றுவிடும் என்று கருதுகின்றனர். இது ஒரு பொது மொழியாகும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

நம் நாட்டில் பல இளைஞர்கள் ராணுவம், ரயில்வே, துறைமுகம் போன்ற பல துறைகளில் பணிபுரிய செல்கின்றனர். அங்கு அதிகமாக இந்தி மொழியை பேசப்படுகிறது. இந்தி கற்றால் அவர்கள் பல மாநிலங்களுக்குச் சென்று வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம், வியாபாரம், மருத்துவம், போன்ற துறைகளில் அவர்கள் சேர்ந்து அங்குள்ள மக்களிடம் பேசுவதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் நன்மை மட்டுமே உண்டாகும்.

இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்தி மொழி என்பது எட்டாக்கனியாக உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் இந்தி மொழியை ஒரு பாடமாக வைக்கலாம். அவர்களுக்கு அதை படிக்க விரும்பினால் அவர்கள் படித்து பல துறைகளுக்குச் செல்லும்போது மொழிப் பிரச்னை ஏற்படாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திஜி, ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்து ஆங்கில மொழியை விட்டு சென்றுவிட்டனர். அதை நாம் இன்றும் படித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அதைப் போலவே நமது இந்திய மக்களுக்கு எல்லோருக்கும் பொதுவான ஒரு மொழி இருக்க வேண்டும் என்று விரும்பினார். அத்தகைய மொழியே இந்தியாகும். 

ஆகையால், தமிழ்நாட்டில் தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபா என்ற சபையை 1918 ஆம் ஆண்டு சென்னையில் தோற்றுவித்தார். இந்த நிறுவனமானது தென் மாநிலங்களில் இந்தியை கற்பிக்கும் ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் முதன்முதலில் கற்பித்த ஆசிரியர் மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தங்க புதையலை காக்கும் நாகப்பாம்பு… உண்மை தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!
Hindi Language

1927 ஆம் ஆண்டு தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபா ஒரு தன்னிச்சையான அமைப்பாக உருவானது. இதற்கு காந்தி தனது இறுதி மூச்சு இருக்கும் வரை தலைவராக இருந்தார். 1964ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் இந்திய அரசாங்கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த நிறுவனமானது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கிளைகளை நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்தில் இந்தி மொழிக்கான அடிப்படை பயிற்சியில் இருந்து பலவிதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இவற்றில் எட்டு நிலைகளில் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. பரீட்சையா, பிராத்மிக், மத்யமா, ராஷ்டிர பாஷா, பிரவேசிக்கா, விசாரத் பூர்வாத், விசாரத் உத்ராத், பிரவீன் பூர்வாத், பிரவீன் உத்ராத் ஆகும். இந்த எட்டு நிலை தேர்வுகளையும் முடித்த பிறகு (பி.ஏ.ஹிந்தி) என்ற பட்டம் வழங்கப்படுகிறது. 

நாம் 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்பதை போல கற்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. ஆகையால் நாம் நிறைய கற்க இயலவில்லை என்றாலும் முடிந்த அளவிற்கு முன்னேற்றம் அடைய இந்தி மொழியை கற்கலாம்.

ஒரு மொழியை கற்பதினால் அறிவு வளருமே தவிர மற்ற மொழிக்கு அழிவு இல்லை என்பது உறுதி. ஆகவே இந்தி மொழியைப் படிக்கலாம். பல மாநிலங்களிலும், பல துறைகளிலும் பணிபுரிந்து பார் போற்றும் வகையில் வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com