போர்க்களத்திலிருந்து தேர்தல் வரை: வெற்றியின் சின்னமாக உயர்ந்த வாகை மலரின் வரலாறும் சிறப்பும்!

பாலை நிலத்தின் மரமாகப் போற்றப்படும் வாகை, வீரர்களின் கழுத்தில் மாலையாகவும், வெற்றிக் கொண்டாட்டங்களில் ஆட்டம் பாட்டுடன் சூடப்படும் மலராகவும் உருவெடுத்த வரலாற்றுப் பயணம்
symbol-of-victory
symbol-of-victory
Updated on

ற்போது தேர்தல் வெற்றி ஆகட்டும், விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்று வரும் போதும் சரி மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது இன்று தொடங்கியது அல்ல, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்திலேயே தொடங்கியது. அந்த வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் வாகை மலரை சூடி கொண்டாடினர்.

வாகை மலர் (vaagai )ஒரு மலர் மட்டும் அல்ல, அது ஒரு வெற்றியின் அடையாளம். பன்டைய காலத்தில் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு மலரை தேர்வு செய்து பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக அந்நாளில் ஒரு நாட்டின் போர் காலத்தில் அந்த நகரின் கோட்டை தாக்குதலில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் "உமிஞை கொடி ( uzhinai ballonvine flower) மலரை ' சூடி  வீரமாக போரிட்டுள்ளனர். அதன்படி வறட்சியான பகுதிகளில் மலரும் வாகை மலரை (Albizia) வெற்றியின் சின்னமாக அணிந்து வந்தனர்.

தமிழ் இலக்கியத்தில் வாகை மரம் சிறப்பிடம் பெற்றுள்ளது. பாலை நிலத்துக்குரிய மரமாக வாகை கருதப்படுகிறது. தொல்காப்பியம் பாலை நிலத்துக்குரிய திணையை வாகைத் திணை என்றே குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களில் வாகை மிகப் பெரிய மரமாக, வறண்ட நிலத்தில் வளரக்கூடியதாக, கவட்டு இலைகளைக் கொண்டதாக, கொத்தாகப் பூக்கும் தன்மை கொண்டதாக வாகை விவரிக்கப்படுகிறது.

மென்மையான, வெண்மையான பூக்களைக் கொண்டிருப்பதாகவும், காற்றில் அசையும்போது அதன் நெற்றுக்களில் உள்ள விதைகள் ‘கலகல’ என ஒலிப்பதாகவும் கூறப்படுகிறது. சில வகை வாகை மரங்களின் மலர்கள் செந்நீல நிறத்தில், திரண்ட காம்புடன் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கடம்பன் சூடும் கடம்ப மலர்: பழனி மலையின் 'அக்னி நட்சத்திர' அதிசயம்!
symbol-of-victory

வெற்றி வாகை சூடினான்” என்னும் வழக்கு இன்றளவும் நம் பேச்சு வழக்கில் உயிர்ப்புடன் உலவுகிறது. வெற்றி பெற்றவரைப் பாராட்டும் போது இச்சொற்றொடரைப் பயன்படுத்துகிறோம். இது வாகைப் பூவின் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது. செல்லும் காரியத்தில்' வெற்றி பெற்று வா 'என்பதை தமிழ் மரபில் 'வாகை சூடி வா' என்று வாழ்த்தி அனுப்பி வைத்தனர்‌ .இதன் அர்த்தம் செல்லும் காரியத்தில் வெற்றி பெற்று வாகை மலரை சூடி வா என்பதுதான்.

பண்டைய தமிழகத்தில், போர்க்களம் சென்று வெற்றி வாகை சூடி வரும் வீரர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் மலர் மாலையைக்கொண்டே போரின் முடிவை ஊகித்தனர். வாகைப் பூ மாலை அணிந்து வந்தால், அவர் வெற்றி பெற்றவர் என்பது உறுதி. இவ்வாறு, வாகைப் பூ வெற்றியின் அடையாளமாக உயர்ந்து நின்றது.

சிலப்பதிகாரத்தில் சேர மன்னர் செங்குட்டுவன் கண்ணகி கோயில் சிலைக்கு கல் எடுக்க இமயமலை சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று கல்லை எடுத்து வந்தார். அப்படி வெற்றியுடன் திரும்பியபோது வாகை மலரை சூடி தனது தலைநகர் 'வாஞ்சி' வந்தாக சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்போது அவனுடைய பட்டத்து யானை கூட வாகை மலரை சூடியதாக வரலாறு கூறுகிறது‌.

கண்ணகி சிலைக்கு கல் எடுத்து வந்த சேரன் செங்குட்டுவனுக்கு வாஞ்சி நகரில் அப்பகுதியில் வாழ்ந்த 'குருதை' எனும் நாடோடி குழு  மக்கள் குறிஞ்சி பாடல்களை வாகை மலரை சூடி  இசைக்கருவிகள் கொண்டு வாசித்து ஆட்டம் பாட்டத்துடன் பாராட்டி மகிழ்ந்தனர். இதிலிருந்து பிரபலமானதுதான் வெற்றியை ஆட்டம் பாட்டத்துடன் வாகை மலரை சூடி கொண்டாடும் வழக்கம்.

இதையும் படியுங்கள்:
இதிகாச கால பொருட்கள் இன்றும் உபயோகத்தில்...
symbol-of-victory

இதன் பின்னர் சேரன் செங்குட்டுவன் தன் வெற்றியை கொண்டாட தனது படைவீரர்கள் அனைவருக்கும் வெற்றியின் அடையாளமாக வாகை மலரை வழங்கி மகிழ்ந்தான். இதுவே நாளடைவில் வாகை மலரை வெற்றியின் சின்னமாக அறிய காரணமாகியது. வாகை மலர் 'கொற்றவை' எனும் போர்க்கடவுளுடன் தொடர்புடையது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

பழங்கால தமிழர்கள் வித விதமான மலர்களை விருந்தினர்களுக்கு பரிசாக வழங்கி மகிழ்வர். அதில் வெற்றியின் சின்னமாக வாகை மலரை வழங்கி மகிழ்ந்தனர்.

logo
Kalki Online
kalkionline.com