

ஒரு எழுத்தாளரின் டைரியில் இருந்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, கதைகள் எப்படி உருவாகின்றன என்ற வாசகர்களின் நீண்டநாள் சந்தேகத்துக்கு பதிலளிக்கிறது. தனிப்பட்ட உழைப்பு, தொடர்ந்து படித்தல், எழுதுதல், பயணங்களில் மனதை சீண்டும் காட்சிகள் ஆகியவை ‘ஆத்ம ராகங்கள்’ ஆக எழுத்தாக மாறும் விதத்தை, நுணுக்கமாக விளக்குகிறது.
ஒரு எழுத்தாளரின் டைரியில் இருந்து...
'அவர் ஒரு பிரபல எழுத்தாளர்; அவருக்குத் தினமும் நிறைய கடிதங்கள் வரும். அவற்றில் பெரும்பாலானவை கதைகள் எப்படி எழுதுவது? என்பதை பற்றித்தான் இருக்கும். இதைப்பற்றி விளக்கங்களைத் தன் எழுத்துகள் மூலமும், பேச்சுகள் மூலமும் பலமுறை கூறியிருந்தாலும் வாசகர்கள் அவரிடம் இந்தக் கேள்வியே கேட்டது என்பது ஒரு வாடிக்கையாகத்தான் இருந்தது. அந்த அளவுக்கு அதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே வாசிப்பவர் களுக்குத் தெரிந்தது.'
ஆனால், எதற்கும் சலித்துக்கொள்ளாமல்; சொன்னதையே திரும்பவும் சொல்லாமல் எழுதுபவரின் மனநிலையை எழுத்தில் இருந்து புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப அவர்களை உற்சாகப்படுத்துவது அவருடைய வழக்கம்.
அவருடைய மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது!
ஒருமுறை கேட்டே விட்டார்.
"என்னங்க... நமக்குக் கல்யாணம் ஆகி 33 வருடம் ஆகிறது; நானும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன்; நீங்களும் மற்றவர்கள் மாதிரி அலுவலகம் செல்வதற்கு 10 மணிக்கு எல்லாம் கிளம்பிடறீங்க! சாயந்திரம் அஞ்சு மணி அளவில் வீட்டுக்கு வந்துடுறீங்க! கேட்டால் லைப்ரரிக்கு போனேன் அப்படின்னு சொல்றீங்க! சில நேரத்துல மாலையில் அஞ்சு மணிக்கு கிளம்பி நைட் 11 மணிக்கு வறீங்க! எங்க போறீங்கன்னு கேட்டா வாசகர் வட்டம், வாசகர் சாலை, வாசகர்கள் சந்திப்பு என்று பல்வேறு காரணங்களைச் சொல்றீங்க! நான் இதை ஏன் கேட்கிறேன் என்றால் என்னை எல்லா நிகழ்வுகளுக்கும் கல்யாணம் ஆகி 5 வருடங்களாக அழைத்துக்கொண்டுதான் சென்றீர்கள். குழந்தைகள் படிப்பு என்று வந்துவிட்ட பிறகு நான்தான் உங்களோடு வரவில்லை.
ஆனாலும் என்னால் உங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை? காரணம் கதைக்காக நீங்கள் ஒன்றும் யோசிப்பதாகவும் தெரியவில்லை; அதற்காக நேரம் எடுத்துக்கொண்டு தனிமையாக தனிமையில் இருப்பதற்கும் நீங்கள் விரும்புவதில்லை..."
எனக்கே இதைப்பற்றி ஒரு கட்டுரையாக எழுதி வாசகர்களுடைய சந்தேகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
சிந்திப்பதற்கு என்று நம்முடைய மனம் நேரத்தை ஒதுக்குவதில்லை.
நாம் பயணப்படும்போது நம்முடைய பார்வைகள் விரிகின்றன.
காணும் காட்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன.
எல்லா வகையான நிகழ்வுகளும் நம்மை கடந்துதான் செல்கின்றன.
ஆனால் எல்லாம் சில காலம்தான்.
அந்த சில காலத்திற்குள் சில நிகழ்வுகள் நம் ஆன்மாவைச் சீண்டுகின்றன.
நம் ஆன்மா நம்மை அறியாமல் நம் சிந்தனையில் ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது.
இந்த உந்துதல்தான் என்னுடைய கதையில் பல பாத்திரங்களாக, பல படிமங்களாக, பல சமயங்களில் வெளிப்படுகிறது.
நீங்கள் கொண்டாடுகிறீர்கள். அதனால்நான் கொண்டாடப்படுகிறேன். நான் என் ஆன்மாவைத் தரிசிக்கிறேன்.
ஆன்மா என்று நான் சொல்லும்போது அது நம்மைவிட்டு வெளியில் உள்ள ஒரு பூதமோ அல்லது ஒரு கடவுளோ கிடையாது
அது நம் அகத்திலேயே உள்ள ஒரு அகண்ட சக்தி. அது ஒரு பிரபஞ்ச சக்தி.
அந்தச் சக்தியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்
இப்படியாக ஒரு எழுத்தாளனுக்கு தேவை உழைப்பு. அந்த எழுத்தாளரின் உழைப்பு என்பது தொடர்ந்து படிப்பதில்தான் வரும். தொடர்ந்து எழுதுவதில்தான் வரும். இதுதான் அந்தச் சூத்திரம்.
அவன், தன் கதை வெளிவர வேண்டும் என்று எழுதக்கூடாது! தினமும் படிக்க வேண்டும்! தினமும் எழுத வேண்டும்!
எப்போது அவனுடைய எழுத்து ஆத்மாவிற்கு இணக்கமாக மாறி ராகமாக அவனுடைய காதுகளில் ரீங்காரமிடுகிறதோ அந்த ஒன்றை அவன் பிரசுரம் ஆவதற்கு அனுப்ப வேண்டும்.
ஆக ஒரு மனிதனுடைய creative ability பல வகையில் வெளிப்படும். அதில் ஒன்று எழுத்து.
ஒரு முன்னோடி எழுத்தாளர் "உன்னுடைய எழுத்து நன்றாகவே இருக்கிறது. நீ தனித்தனியாக உன்னுடையக் கதைகளை அனுப்புவதற்குப் பதிலாக ஒரு ஐந்து முக்கிய கதைகளை ஒருசேர அனுப்பி அந்த ஆசிரியரிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்" என்று எனக்கு ஆலோசனை கூறினார்.
அவர் கூறியதற்கு ஏற்ப ஒரு மாதம் கழித்து அந்த வார இதழ் ஆசிரியர் என்னிடம் தொடர்புகொண்டு அதில் இரண்டு கதைகள் தொடர்ந்து வரும் என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார்.
வாசகர்களுக்காக...
ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.
காலத்திற்கு ஏற்ப நம்முடைய தொழில்நுட்பம் பல வசதிகளை செய்து கொடுத்தாலும், சிந்திப்பதும், செயல்படுவதும் நம்முடைய ‘ஆத்மாவை’ பொறுத்து அமையும் என்பதை என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும்.
நான் ஏன் எழுதுகிறேன்?
எழுதுவதால் என்ன பயன்?
எழுதுவதால் எதை சாதித்தேன்?
எழுதுவது என்பது சடங்கா?
எழுதுவது என்பது கொண்டாட்டமா?
யாருக்காக எழுதுகிறோம்?
இதில் என்னால் ஒன்று மட்டும் உண்மையாக கூறமுடியும்.
நான் விரும்புகிறேன்; அதனால் எழுதுகிறேன்!
பயன்கள் வந்தடையும்போது என்னை வந்து அடைகின்றன.
நான் சாதித்தது என்பது வாசகர்களுடைய அன்பையும், ஆதரவையும்தான் .
என் எழுத்தை நான் வழிபடுகிறேன்.
அதன்படி நடக்கிறேன்.
என் பார்வை ஆனது விரிந்துகொண்டே போகிறது.
அதற்கு காரணம் என்னுடைய வாசகர்கள். அவர்களுடைய உணர்வுகளையும், உள்ளங்களையும் மதித்து நான் செயல்படுவதாக நினைக்கிறேன்.
(ஒரு எழுத்தாளனின் டைரியில் இருந்து கிடைத்த தகவல்கள்)
இந்த உன்னதமான பதிவை வாசிப்பதன் மூலம், கற்பனைத் திறனை ஒரு கதையாக மாற்றுவதற்கான நிஜமான உழைப்பையும், உங்கள் அக உணர்வுகளை எழுத்தாக்கும் உந்துதலையும் நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள். வெற்றிகரமான எழுத்தாளராக மாறுவதற்கான ஆத்மார்த்தமான சூத்திரம் உங்களுக்குக் கைக்கூடும்.