10 நிமிடத்தில் மன அமைதி தருமா 'இகேபனா'? அப்படி என்னதான் இருக்கு இதுல?

மன அழுத்தத்தைப் போக்கி வீட்டிற்குள் அமைதியைக் கொண்டுவரும் ஜப்பானிய மலர் அலங்காரக் கலையின் ரகசியங்கள்.
இகேபனா கலை - Japanese Flower Arrangement
இகேபனா கலை - Japanese Flower Arrangement
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

இகேபனா என்பது பழங்கால ஜப்பானில் தோன்றிய உலகப் புகழ்பெற்ற மலர் அலங்காரக் கலையாகும். ஜப்பானிய மொழியில் இதற்கு "உயிருள்ள மலர்கள்" என்று பொருள். இக்கலைக்கு 'கடோ' (Kado) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இக்கலை பூக்களை வெறும் கொள்கலனில் அழகாக அடுக்குவது மட்டுமல்லாமல், இயற்கை, ஆன்மீகம் மற்றும் மனித மனதின் அமைதியை ஒன்றிணைக்கும் ஒரு தத்துவப் பூர்வமான கலையாக பார்க்கப்படுகிறது. ஜப்பானிய கலாச்சாரத்தில் தேநீர் விழா (Chado) மற்றும் நறுமணக் கலை (Kodo) ஆகியவற்றுடன் இணையாக இந்த இகேபனா கலையும் மிகவும் மதிக்கப்படுகிறது.

1) இதன் முக்கிய சிறப்பம்சங்கள்:

*மன அமைதியைத் தருகிறது:

இகேபனா என்பது வெறும் பூக்களை அழகாக அடுக்குவது மட்டுமல்ல. பூக்கள், இலைகள் மற்றும் கிளைகளைக் கொண்டு இயற்கையின் நல்லிணக்கம், அமைதி மற்றும் அழகை வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். இதனை செய்பவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து ஒரு தியானம் போன்ற மன அமைதியைத் தருகிறது. தற்காலத்தில் இகேபனா செய்வது யோகா அல்லது தியானம் செய்வதற்கு இணையாகக் கருதப்படுகிறது.

*குறைந்தபட்ச வடிவமைப்பு (Minimalism):

மேற்கத்திய மலர் அலங்காரங்கள்போல் அதிக பூக்களைக் குவிக்காமல், இதில் மிகக்குறைவான மலர்கள், இலைகள் மற்றும் காய்ந்த கிளைகளே பயன்படுத்தப்படும். வெற்று இடங்களுக்கும் (Space) இதில் முக்கியத்துவம் உண்டு. பாரம்பரிய இகேபனாவில் முதன்மை மலர் (நடுவில்), துணை மலர் (அருகில்) மற்றும் அலங்கார மலர் (கீழே) என மூன்று முக்கிய கூறுகள் ஒரு முக்கோண வடிவில் அமைக்கப்படுகின்றன.

இந்தக் கலையை கற்பிப்பதற்கு ஜப்பானில் பல பாரம்பரியப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் இகெனோபோ (Ikenobo) என்பது 560 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான முதல் பள்ளியாகும். இது தவிர ஒஹாரா (Ohara) மற்றும் சோகெட்சு (Sogetsu) ஆகியவையும் புகழ்பெற்ற பள்ளிகளாகும்.

இகேபனா கலை - Japanese Flower Arrangement
இகேபனா கலை - Japanese Flower Arrangement

*முப்பரிமாண தத்துவம்:

பொதுவாக இகேபனா அமைப்பில் மூன்று முக்கிய கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை வானம் (Shin), பூமி (Tai/Hikae) மற்றும் மனிதன் (Soe) ஆகியவற்றைக் குறிக்கின்றன.

இக்கலையில் பூக்களின் அழகு மட்டும் இன்றி, அவை வைக்கப்படும் பாத்திரம், வடிவங்களின் நல்லிணக்கம், அமைதி மற்றும் பூக்களைச் சுற்றியுள்ள வெற்று இடம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

2) வரலாறு:

இக்கலை 6ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து ஜப்பானுக்கு பௌத்த மதம் பரவியபொழுது, புத்தரின் பலிபீடங்களுக்கு மலர்களைக் காணிக்கையாக வழங்கும் சடங்கில் இருந்து உருவானது. 15ஆம் நூற்றாண்டில் இது ஒரு முறையான கலை வடிவமாக வளர்ந்து, இகெனோபோ போன்ற பாரம்பரியப் பள்ளிகள் தோன்றின. ஜப்பானிய கலாச்சாரத்தில் தேநீர் விழா (Tea Ceremony) மற்றும் கையெழுத்துக்கலை (Calligraphy) ஆகியவற்றுடன் இகேபனாவும் மிக முக்கியக் கலையாகக் கருதப்படுகிறது.

3) பல நூற்றாண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள இகேபனா கலையில் பல்வேறு பாணிகள் உருவாகியுள்ளன.

*ரிக்கா (Rikka):

இதன் பொருள் "நிமிர்த்தி வைக்கப்பட்ட மலர்கள்". இது இகேபனாவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பாணியாகும். 15ஆம் நூற்றாண்டில் பௌத்த துறவிகளால் பிரபஞ்சத்தின் அழகையும், சொர்க்கத்தின் அமைப்பையும் குறிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மண்ணுக்குள் பூக்கும் விசித்திர மலர்: தாய்லாந்து காட்டில் கண்டறியப்பட்ட 'டெவில் ஃப்ளவர்'!
இகேபனா கலை - Japanese Flower Arrangement

*ஷோகா/செய்கா (Shoka/Seika):

இது ரிக்கா பாணியைவிட சற்று எளிமையான ஆனால் முறையான வடிவத்தைக்கொண்ட பாணியாகும். "புதிய மற்றும் வாழும் மலர்கள்" என்பது இதன் பொருள். இப்பாணி மூன்று முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. ஷின்(Shin), சோயே (Soe) மற்றும் ஹிகே (Tai/Hikae). இவை மூன்றும் சேர்ந்து ஒரு சீரற்ற முக்கோண வடிவத்தை உருவாக்கி, அவற்றுக்கிடையே உள்ள வெற்று இடத்தை அழகாகக் காட்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
மணலுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள்: எகிப்து பிரமிடுகள் சொல்லும் வியக்க வைக்கும் கதை!
இகேபனா கலை - Japanese Flower Arrangement

*மொரிபானா (Moribana):

இதற்கு "குவித்து வைக்கப்படும் மலர்கள்" என்று பொருள். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கத்திய மலர்களின் வருகைக்குப் பின்பு உருவான நவீன பாணி இது. ஆழமில்லாத தட்டையான பாத்திரங்கள் அல்லது தட்டுகளில் 'கென்சான்' (Kenzan - ஊசிகள் கொண்ட சிறிய தட்டு) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி மலர்கள் குத்தப்படும். இந்த அமைப்பைச் சுற்றிலும் உள்ள அனைத்து கோணங்களில் இருந்தும் (3D முறையில்) பார்த்து ரசிக்கும்படி வடிவமைக்கப்படும்.

*ஹெய்கா / நாகேரே (Heika / Nageire):

இதன் பொருள் "தூக்கி எறியப்படும் அல்லது இயற்கையாக இடப்படும் மலர்கள்". இது மலர்களின் இயல்பான மற்றும் தன்னிச்சையான அழகை வெளிப்படுத்தும் ஒரு பாணியாகும். உயரமான மலர் குடுவைகள் அல்லது ஜாடிகளில் மலர்கள் மற்றும் கிளைகளின் இயற்கையான வளைவுகளைப் பயன்படுத்தி நேர்த்தியாக அடுக்கப்படும்.

*சமகால பாணி:

இது எந்தவிதமான பாரம்பரிய விதிகளுக்கும் உட்படாத தற்கால இகேபனா பாணியாகும். இதில் கலைஞர்கள் தங்களின் சொந்த கற்பனை மற்றும் உணர்வுகளுக்கு ஏற்ப வடிவமைக்கலாம். பூக்கள் மற்றும் கிளைகள் மட்டுமின்றி, காய்ந்த இலைகள், பிளாஸ்டிக், கண்ணாடி அல்லது உலோகக் கம்பிகள் போன்ற பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி இது ஒரு வாழும் சிற்பம்போல உருவாக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் அரிய பூக்கும் மரங்களின் ராணி: ஊர்வசி மரம் பற்றி தெரியாத உண்மைகள்!
இகேபனா கலை - Japanese Flower Arrangement