ஆச்சரியப்படுத்தும் இந்திய பழங்குடியினரின் வினோத பழக்கவழக்கங்கள்!

நவீன உலகை வியப்பில் ஆழ்த்தும் இந்திய பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் அதிர்ச்சி தரும் சடங்குகள்.
பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் - Indian Tribes
பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் - Indian Tribes
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவில் வாழும் குறிப்பிட்ட பழங்குடியினர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்வதையே பெருமையாக கருதி வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் சில சடங்குகள் அர்த்தமுள்ளவை என்றாலும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட பழங்குடியினர்களின் வினோத பழக்கவழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஜராவா பழங்குடியினர் இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் பழமையான ஜராவா பழங்குடியினர் மானைத் தவிர மற்ற விலங்குகளை உணவாக உட்கொள்ளும் வினோத பழக்கத்தை வைத்திருக் கின்றனர். தீவுகள் முழுவதும் மான்கள் நிறைந்து இருந்தாலும் இந்த பழக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. தனிமையை விரும்பி நவீன நாகரிகத்தை வெறுப்பதில்லை என்றாலும் மெல்ல மெல்ல அழிவின் விளிம்பை நோக்கி ஜராவா பழங்குடியினர் இனம் சென்று கொண்டிருப்பது துரதிஷ்டவசமானது.

சென்டினல்ஸ் பழங்குடியினர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

நவீன சமூகத்துடன் தொடர்புகொள்ள விரும்பாத அந்தமான் நிக்கோபார் தீவில் வசிக்கும் சென்டினல்ஸ் பழங்குடியினருக்கு வாளி மிகவும் பிடிக்கும் என்ற ஒரு விஷயம் மட்டுமே உலகிற்கு தெரியவருகிறது. இந்த பழங்குடியினரை ஆய்வாளர்கள் சந்தித்தபோது சிவப்பு மற்றும் பச்சை நிற வாளிகளையும் பன்றிகளை பரிசாக வழங்கினர். சென்டினல்ஸ் பழங்குடியினர் கடுமையான விரோத போக்கை வெளியுலகில் உள்ளவர்களுடன் கடைபிடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானின் பில் பழங்குடியினர்

ராஜஸ்தான் மாநிலத்தின் மக்கள் தொகையில் பழங்குடியினர் மட்டும் 39% பேர் வசிக்கின்றனர். இந்தியாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் மிகப்பெரிய குழுக்களாக வசிக்கும் இந்த பழங்குடியினர் திருமணங்களில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக மணமகன் வரதட்சணை கொடுக்கும் சடங்கு உள்ளது.

இது இந்திய திருமணங்களில் இருந்து வேறுபட்டு உள்ளது.மேலும் ஆண்களுடன் இணைந்து பெண்களும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் - Indian Tribes
Sentinelese tribe - பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள்

மேகாலயாவின் காசி பழங்குடியினர்

மேகாலயா மாநிலத்தில் வசிக்கும் காசி பழங்குடியினர் தாய் வழி சமூக முறையை பின்பற்றுவதோடு தாயின் பெயரையும் பாரம்பரியத்தையும் பின்பற்றி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறார்கள். சொத்துரிமையும் முடிவெடுக்கும் அதிகாரமும் ஆண்களுக்கு பதிலாக பெண்களே பெறுகிறார்கள்.

இந்தியாவிலேயே காசி பழங்குடியினர் நிதானமான மற்றும் கவலையற்ற பழங்குடியினர் என்று கூறும் அளவிற்கு சிறப்பு பெற்றுள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமண முறையை விரும்பாத காசி பழங்குடியினர் விவாகரத்து ஏற்பட்ட பின் மறுமணம் செய்து கொள்ள முழு உரிமையும், சொத்து மற்றும் குழந்தைகளின் பொறுப்பும் பெண்ணிடமே இருக்கும். தாய் இறந்தால் அவரின் சொத்துக்கள் அனைத்தும் இளைய மகளுக்கு சென்றடையும்.

இதையும் படியுங்கள்:
ஒரு நிமிடம் நின்றாலும் பேராபத்து: பூமி முழுவதையும் இயக்கும் 'சூப்பர்' இயந்திரங்கள்!
பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் - Indian Tribes

கிழக்கு இந்தியாவின் சந்தால் பழங்குடியினர்

மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் மாநிலங்களின் சில பகுதிகளில் வசிக்கும் சந்தால் பழங்குடியினர் `சந்தாலி `என்ற அவர்களது பழங்குடி மொழியுடன் மற்ற மொழியையும் பேசுகிறார்கள். இவர்கள் வழக்கத்திற்கு மாறாக இறைவனை வழிபடாமல் ஆவிகளைக் கண்டு பயப்படுகிறார்கள்.

மேலும் ஆவிகளை திருப்திப்படுத்த விலங்குகளை பலியிடுகிறார்கள். இவர்கள் நாத்திகர்கள் இல்லை என்றாலும் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக தெரிந்தாலும் சில பழக்க வழக்கங்கள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உள்ளடக்கியது என்பதை மேற்கூறிய கட்டுரையின் மூலம் தெளிவாக அறியமுடிகிறது.

நவீன நாகரிக ஓட்டத்திற்கு மத்தியில், தொன்மை மாறாமல் இயற்கையோடு இயைந்து வாழும் இந்தியப் பழங்குடி மக்களின் அரிய வாழ்க்கை நெறிகளையும், அவர்களின் தனித்துவமான சமூக அமைப்பையும் துல்லியமாகப் புரிந்து கொண்டு நமது கலாச்சாரப் பார்வையை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வாயில் வைத்து இசைக்கப்படும் மர்மக் கருவி! இதுதான் மோர்சிங்!
பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் - Indian Tribes
logo
Kalki Online
kalkionline.com