jallikattu
jallikattuAI Image

ஜல்லிக்கட்டு: 'காளையின் கொம்புக்கு அஞ்சினால், பெண் கிடைக்காது!'

Published on

ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் கொண்டாடப்படும் ஒரு வீர விளையாட்டுப்போட்டி மட்டுமல்ல; தமிழகத்தின் ஒரு அடையாளம் என்றுகூட சொல்லலாம். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், தமிழர்களின் வீரத்தை உலகளவில் பறை சாற்றுகின்றன.

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு என்பது தமிழ் மண்ணின், பண்பாட்டின் அடையாளமாக கருதப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகும். அது தமிழர்களின் பாரம்பரிய வேர்களைப் பிரதிபலிக்கும், வீரத்தையும், விலங்குகளின் மீதான அன்பையும் இணைக்கும் ஒரு கலாச்சார நிகழ்வாகும்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும், உழைக்கும் காளைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மாட்டு பொங்கலுக்கு விளையாடும் இந்த வீர விளையாட்டு போட்டிக்கு நெடுங்கால பாரம்பரியம் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஜல்லிக்கட்டு வீரனுக்கு ஒரு கோயில் - இங்கு வழிபட்டால் ஜல்லிக்கட்டில் வெற்றி நிச்சயம்!
jallikattu

ஜல்லிக்கட்டு சிந்து சமவெளி காலத்திலிருந்தே, அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கத்தில் உள்ள ஒரு பாரம்பரிய விளையாட்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சிந்துவெளி நாகரீக அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட முத்திரை ஒன்றில், சினமுற்ற காளை, ஒரு வீரனை கொம்பால் குத்தியெறியும் சித்திரம் இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் கி.மு. 2500 வாக்கிலேயே காளையைக் கொண்ட வீர விளையாட்டுகள் நம் வாழ்வோடு கலந்திருந்தததை உணர முடியும்.

2500 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்களிலும் இந்த வீர விளையாட்டு குறித்த சான்றுகள் உள்ளன. இவை அனைத்தும் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம், வீரம், பண்பாடு ஆகியவற்றின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது என்பதை இலக்கியங்கள் மூலம் உணர்த்துகின்றன.

ஜல்லிக்கட்டு என்பதற்கு சல்லிக்கட்டு என்றும் ஒரு பெயர் உண்டு, பழங்காலத்தில் இதை ஏறு தழுவுதல் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஜல்லிக்கட்டு என பெயர் மாறியது.

இதற்கு காரணம் மாட்டில் கொம்பில் சல்லி காசுகளை வைத்து கட்டி விடுவார்கள் மாடு பிடிக்கும் வீரனுக்கு அந்த காசு சொந்தம் என்பது இந்த விளையாட்டு என்பதால் அதை சல்லிகட்டு என்றும் அழைத்தார்கள். இதுவே மறுவி ஜல்லிகட்டு என வந்தது.

இதையும் படியுங்கள்:
'சல்லி காசு'க்கும் 'ஜல்லிக்கட்டு'க்கும் என்ன தொடர்பு?
jallikattu

"ஏறு" என்பது காளையைக் குறிக்கும், அதை அடக்குவதால் "ஏறுதழுவுதல்". ஏறு தழுவுதல் என்ற தூய தமிழ்ச்சொல்லால் அழைக்கப்பட்ட இந்த விளையாட்டு, அக்காலத்தில் ஆயர்களுடைய வாழ்வியல் பண்புகளில் ஒன்றாக இருந்தது.

வரலாறு, புராணம், இதிகாசம், ஆன்மிகத்துடன் இணைந்தது தான் ஜல்லிக்கட்டு. சங்க இலக்கியத்தின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கலித்தொகை, மலைபடுகடாம் போன்ற இலக்கியப் படைப்புகளிலும் மக்கள் ஜல்லிக்கட்டைப் பார்த்து மகிழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன.

வீர விளையாட்டான இது, முந்தைய காலங்களில் திருமணத்திற்குப் பொருத்தமான ஆண்களைக் கண்டுபிடிப்பதற்காகவும் நடத்தப்பட்டது. பெண்களும் காணும்படி தன் வீரத்தை பறைசாற்ற வீர ஆண் மகனுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைத்ததாக வரலாறு கூறுகிறது.

பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமெனில் காளையை அடக்க வேண்டும். பண்டைய காலத்தில் தன் வீட்டில் பெண் குழந்தை பிறக்கும் போதே காளை கன்றை வாங்கி வளர்ப்பர். பெண் பருவம் அடைந்ததும் காளையை அடக்குபவருக்கு தன்பெண்ணை திருமணம் செய்து தருவர்.

பத்துப்பாட்டில் ஒன்று கலித்தொகை. அதில் முலலைக்கலியில்,

jallikattu
jallikattu

‘கொல்லேற்று கோடஞ்சுவானை...

மறுமையிலும் புல்லாளே ஆயன் மகள்’

என வரும். 'காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை மறு ஜென்மத்தில் கூட அந்த பெண் திருமணம் செய்ய மாட்டாள்' என்று அர்த்தம்.

பழங்காலம் தொடங்கி வீரபாண்டிய கட்டபொம்மன் காலம் வரையிலும் காளைகளை அடக்கிய ஆண்களை பெண்கள் விரும்பி மணந்துள்ளதை முல்லைக்கலி குறிப்பிடுகிறது.

வாடிவாசல் வழியாக கம்பீரமாக சீறிப்பாய்ந்தோடி வரும் காளைகளின் ஆக்ரோஷத்தை அடக்க தயாராக நிற்கும் தமிழர்களின் வீரத்துக்கும், ஆர்வத்திற்கும் வேறு எதுவும் ஈடாக முடியாது. கொம்பை ஆயுதமாக கொண்டு தன்னை குத்தவரும் காளையை ஆயுதம் இன்றி வெறும் கைகளால் அடக்குவது என்பது வீரத்தின் உச்சம் தான்.

ஐவகை நிலங்களில் ஒன்றான முல்லை நிலத்தில் தான் முதலில் ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடந்திருக்கிறது. அந்த காலத்தில் காளைகளோடு போராடி உயிர் துறப்பது, வீரமாக கருதப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
"இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது..!" - ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த உத்தரவு..!
jallikattu

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை தான் பொங்கலும், ஜல்லிக்கட்டும். கால மாற்றத்தால், பல்வேறு மாற்றங்களுடன் சமூக நிலைகளுக்கு ஏற்பவும், இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. எனினும் இது பழமையான வீர விளையாட்டு என்பதும், தமிழ் மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும், சிறிதளவும் ஐயமில்லை.

logo
Kalki Online
kalkionline.com