இடுப்பில் பற்றி எரியும் தீப்பந்தங்களுடன் கடவுளராகி ஆடப்படும் தெய்யம் ஆட்டம்!

Theyyam-Festival-Dance
Theyyam Festival Dance
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

கேரளாவில் உயர் வகுப்பினர் வழிபடும் கோயில்களில் மற்ற வகுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தையும், அதற்காகத் தனி வழிபாட்டையும் கடைப்பிடித்து வந்தனர். இந்த வழிபாட்டில் ஒன்றாகத் தெய்யம் ஆட்டமும் இடம் பெற்றது. தெய்வம் எனும் சொல்லே தெய்யம் என்று மருவி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

தெய்வமே ஆடும் ஆட்டமாகக் கருதப்படும் இந்த ஆட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களைத் தெய்வம் போல் போல் வேடமிட்டுக் கொண்டு ஆடுகின்றனர். இந்தத் தெய்யம் ஆட்டம் 39 வகையான ஆட்டங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டத்தில் பொதுவாகப் பெண்கள் பங்கேற்பதில்லை. ஆண்களே பெண் வேடமிட்டும் ஆடுகின்றனர். ‘தேவக்கூத்து தெய்யம்’ எனும் ஒரு வகையான ஆட்டத்தில் மட்டும் பெண் வேடத்தில் பெண்ணே ஆடுவார்.

தெய்யம் ஆட்டமாடுபவருக்குச் சிறப்பான ஒப்பனை செய்யப்படுகிறது. இந்த ஆட்டம் ஆடுபவர்களுக்கு பலமான உடல், முறையான பயிற்சி போன்றவை தேவையாக இருக்கிறது. இந்த ஒப்பனையில் சிவப்பு நிறத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிவப்பு நிறம்தான் வீரத்தையும், கோபத்தையும் வெளிக்காட்டும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

உடலுக்கு மேலுடை, கீழுடை எல்லாமே மூங்கில் நார், தென்னம்பாளைக் கீற்று, தென்னங்குருத்தோலை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. கிரீடம் மூங்கில் பட்டையில் சிவப்பு நிறத் துணி அல்லது காகிதம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அத்துடன் மணிகள், மாலைகள், குமிழ்கள், கத்தி, கேடயம் என்று பல பொருட்களையும் சேர்த்து அதிக எடையைச் சுமந்து கொண்டு இவர்கள் பல மணி நேரம் ஆட வேண்டியிருக்கிறது. தெய்யம் ஆட்டத்திற்கான ஒப்பனைக்குக் குறைந்தது 5 முதல் 10 மணி நேரம் வரை தேவைப்படுகிறது என்கின்றனர்.

‘செண்ட மேளம், இலத்தாளம், குழல்வாத்தியம் கொண்டு இசைக்கப்படும் இசை முழக்கத்திற்கேற்ப, தெய்யம் ஆட்டமாடுபவர்கள் அடியெடுத்து வைக்கும் ‘கலாசம்’ என்கிற அசைவுதான் தெய்யம் ஆட்டம் எனப்படுகிறது. இந்த ஆட்டத்தில் உணர்வுகளைத் தொட்டு எழுப்பும் வாத்தியங்களின் இசை, கலைஞர்களின் ஒப்பனை, அதிசயிக்க வைக்கும் ஆடை அலங்காரங்கள், அவர்களது முகபாவங்கள், உணர்வுகளை

வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக இருக்கும். சில வகையான தெய்யம் ஆட்டத்தில், கிரீடத்திலும் இடுப்பிலும் பற்றி எரியும் தீப்பந்தங்கள், தீ வளர்த்து அதைத் தீண்டுவது, கைகளால் வாருவது, தீக்கங்குகளில் அமர்வது, படுப்பது போன்ற காட்சிகளும் இடம் பெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'
Theyyam-Festival-Dance

தெய்யம் ஒப்பனை செய்த ஆட்டக்காரர் சாதாரண மனிதனாக இருந்தாலும், அவர் வேடமிட்டிருக்கும் உருவத்திற்கேற்பக் கடவுளாகி விடுகிறார். தெய்யம் ஆட்டம் முடியும் வரை அவர் கடவுளாகவே மதிக்கப்படுகிறார். சில கோயில்களில் தெய்யம் ஆட்டம் ஆடுபவர்கள் பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கான துன்பங்களுக்குக் தீர்வுகளைக் கடவுளாக இருந்து சொல்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com