மந்திர சக்திகள் கொண்ட கிறிஸ் கத்திகள்!

Kris knife
Kris knife
Published on

கிறிஸ் அல்லது கெரிஸ் (Kris) என்பது இந்தோனேசியப் பயன்பாட்டிலிருந்து வரும் ஒரு தனித்துவமான, சமச்சீரற்ற கத்தியாகும். இக்கத்தியானது ஆயுதம் மட்டுமின்றி, ஒரு ஆன்மீகப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ் கத்தி மந்திர சக்திகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

'கிரிசு' என்கின்ற சொல் பண்டைய சாவக மொழியில், கத்தியால் குத்துவதைக் குறிக்கும் சொல்லான ‘ஙிரிசு’ எனும் சொல்லிலிருந்து தோன்றியதாகும். கிரிசுக் கத்தி முதலில் ஜாவா தீவில் தோன்றியது என்றும், பின்னர் அது மலாய்த் தீவு கூட்டம் எனப்படும் தற்போதைய தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, புருணை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திற்கும் பரவியது என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறனர். இருப்பினும், கிறிஸ் கத்திகள் தற்போது மலாயாவில் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கிரிஸ் கத்திகள் பொதுவாக அகலமான, சமச்சீரற்ற அடித்தளத்துடன் குறுகலாக இருக்கும். இக்கத்திக்கான கைப்பிடியானது பெரும்பாலும் மரத்தினால் ஆனது. தந்தம், தங்கம் போன்றவற்றிலான கைப்பிடிகளுடன் இக்கத்திகள் இருந்திருக்கின்றன.

கிரிசுக் கத்தியை மற்ற கத்திகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, அது வடிவத்தில் அதிகளவில் வேறுபட்டு இருக்கும். நெளிவு நெளிவாக முறுக்கிய படியான அமைப்பைக் கொண்டிருக்கும். இக்கத்தி இரும்பினால் செய்யப்படுகிறது. கிரிசுக் கத்தியை நுனிப்பகுதி, நடுப்பகுதி மற்றும் பிடிப்பகுதி என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இக்கத்தி அளவில் சிறியதாக இருப்பினும், எடை சற்று அதிகமாகவே இருக்கும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கிரிசுக் கத்தியை மலாய் மக்கள் போர்ச் சமயங்களில் பயன்படுத்தியதற்கான எந்தவொரு சான்றுமில்லை. மாறாக, கூர் வாள்கள், அரிவாள் மற்றும் ஈட்டிகள் போன்றவை மலாய் மக்களால் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் காலங்களில் கிரிசுக் கத்தியை மலாய் மக்கள் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தினாலும், பின்னாளில் சிலாட் எனும் தற்காப்புக் கலைக்குரிய கருவியாக மாறிப் போய்விட்டது.

கிரிசுக் கத்தி ஆண்களின் அலங்காரப் பொருளாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மலாய் மன்னர்கள் கூடக் கிரிசுக் கத்தியை செங்கோலுக்குப் பதிலாகவும், தங்களின் ஆட்சியின் அடையாளமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

சாவக மக்கள் தம் பண்பாட்டின் ஒரு சிறப்பான பகுதியாகவே இக்கத்தியையும் கருதுகின்றனர். திருமண நிகழ்வுகளின் போது, தம் பண்டைய மரபைக் காட்டும் அணிமணிகளைக் கொண்டும், கிரிசுக் கத்தி போன்றவற்றை அணிந்தும் காட்சி தருவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். கிரிசுக் கத்தியை பயன்படுத்தும் ஆண்கள் அதைத் தங்களின் இடுப்பின் ஓரமாக செருகி வைப்பார்கள். அரசர்களைச் சந்திக்கும் பொழுது அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக பக்கவாட்டில் செருகியிருக்கும் கிரிசுக் கத்தியைப் பின்புறமாகச் செருகி வைப்பார்கள்.

கிறிஸ் கத்தியானது சிறப்பு விழாக்களில் அணியப்படுவதன் வாயிலாக, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அவற்றை அணிகிறார்கள். இந்தக் கத்தியைச் சுற்றி ஒரு வளமான ஆன்மீகம் மற்றும் புராணம் வளர்ந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நவநாகரிகம் என்ற பெயரில் நாம் இழந்துவிட்ட பெருமைமிகு பொக்கிஷங்கள்!
Kris knife

கிறிஸ், மந்திர சக்திகள், ஆயுதங்கள், புனிதப்படுத்தப்பட்ட பாரம்பரியப் பொருட்கள், நீதிமன்ற வீரர்களுக்கான துணை உபகரணங்கள், சடங்கு உடைகளுக்கான அணிகலன்கள், சமூக அந்தஸ்தின் குறிகாட்டி, வீரத்தின் சின்னம் போன்றவற்றுடன் தாயத்துகளாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.

இருப்பினும், கடந்த முப்பது ஆண்டுகளாக, கிரிஸ் கத்திகள் சமூகத்தில், தனக்கான சமூக மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. பாரம்பரிய முறையில் உயர்தர கிரிஸை உற்பத்தி செய்யும் சுறுசுறுப்பான மற்றும் மரியாதைக்குரிய நிலைகள் போன்றவை இன்னும் பல தீவுகளில் காணப்பட்டாலும், அவற்றின் எண்ணிக்கை வியத்தகு முறையில் குறைந்து கொண்டேயிருக்கிறது. மேலும், இக்கத்திகளைக் கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய நபர்களைக் கண்டுபிடிப்பதும் மிகவும் கடினமாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்:
தன்மையை தர நிர்ணயம் செய்யுங்கள்!
Kris knife

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com