பிக்காசோவின் ஓவியங்களுடன் ஒப்பிடத்தக்க மதுபானி ஓவியப் பாணி!

Picasso and Madhubani
Picasso and Madhubani
Published on

பீகார் மாநிலத்தின் நேபாள எல்லைப் பகுதியிலிருக்கும் மதுபானி மாவட்டத்தில் தோன்றிய ஓவியங்களை மதுபானி ஓவியப் பாணி (Madhubani Art) அல்லது மிதிலா ஓவியப் பாணி என்கின்றனர்.

மதுபானி ஓவியப் பாணி மிகவும் பழமையானது. இதன் தோற்றம் பற்றி முழுமையான தகவல்கள் தெரியவில்லை. மரபுவழிக் கதைகள் இதை, இராமாயண காலத்துடன் தொடர்பு படுத்துகின்றன. ஜனகரின் மகளான சீதையின், திருமணத்துக்காக, ஒவியர்களை ஜனகர் அமர்த்தியதாக அவை கூறுகின்றன.

மதுபானி ஓவியங்கள், மிதிலாவில் உள்ள மதுபானி என்னும் தற்கால நகரை அண்டி அமைந்துள்ள ஊர்களில் பெண்களாலேயே வரையப்பட்டு வந்தது. மரபு முறையில், இவ்வோவியங்கள் புதிதாக மெழுகப்பட்ட மண் சுவர்களிலேயே வரையப்பட்டன. தற்காலத்தில், துணி, கேன்வாஸ் போன்றவற்றிலும் வரையப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
40 ஆண்டுகளாக மெளனமாக இருந்து UPSC மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சாமியார் பற்றி தெரியுமா?
Picasso and Madhubani

இந்த ஓவியப்பாணி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் அடங்கி இருப்பதனாலும், இதன் நுணுக்கங்கள், தலைமுறைகள் ஊடாகக் குடும்பங்களுக்கு உள்ளேயே இருந்து வருவதனாலும், இப்பாணி அதிகம் மாற்றம் அடையாமலேயே உள்ளது. மதுபானி ஓவியங்களில் தாவரங்களில் இருந்து பெறப்படும் நிறங்களையேப் பயன்படுத்துகின்றனர்.

இந்த மதுபானி ஓவியக்கலை மற்ற நாட்டுப்பற்று ஓவியக் கலைகளைப் போன்றே முழுக்க முழுக்கப் பெண்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கலையாகும். மதுபனி பகுதியில் வாழும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் கூடித் தங்கள் வீட்டுச் சுவர்களில் மதச் சடங்குகள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு ஓவியங்களை வரைந்துள்ளனர்.

மதுபானி ஓவியங்கள் இயற்கை மற்றும் தொன்மங்கள் சார்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன. ஓவியங்களுக்குரிய கருப்பொருள்கள் பெரும்பாலும், இந்துக் கடவுளரான, கண்ணன், இராமன், சிவன், துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி போன்றவர்களைக் குறிப்பதாகவே பெரிதும் காணப்படுகின்றன. இயற்கைப் பொருட்களான ஞாயிறு, மதி போன்றவையும், துளசிச் செடி போன்ற மதத் தொடர்பு கொண்ட செடிகளும் இவ்வகை ஓவியங்களில் கருப்பொருளாக அமைந்திருப்பதைக் காண முடியும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: வணங்கான் - 'நந்தாவும், பிதாமகனும் சேர்ந்த கலவை இவன்'
Picasso and Madhubani

இவற்றை விட, அரசவைக் காட்சிகள், திருமணம் போன்ற சமூக நிகழ்வுகள் என்பனவும் மதுபானி ஓவியங்களில் இடம் பெறுகின்றன. மேலும், ஓவிய உருவங்களுக்கு இடையில் வெறுமனே இடைவெளி விடாமல் முழுவதும் பூ உருவங்களை வரைகிறார்கள். இதுவே இந்த ஓவியங்களுக்குத் தனி அழகைத் தருகிறன.

1934 ஆம் ஆண்டில் ஆண்டு மதுபானி மாவட்டப் பகுதியில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கச் சேதத்தைப் பார்வையிட அப்போதைய பிரித்தானிய அரசில் ஆட்சியராக இருந்த வில்லியம் ஜி.ஆர்ச்சர் என்பவர் வந்தார். அப்போது இடிபாடுகளுக்கு உள்ளான வீடுகளின் சுவர்களிலிருந்த மதுபனி ஓவியங்களைப் பார்த்து வியந்து அக்கலை பற்றி விசாரித்து அறிந்து கொண்டு, இந்த மதுபனி ஓவியங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதி அனைவரும் அறியும்படிச் செய்தார். மேலும் இந்த ஓவியங்கள் மேற்குலக ஓவியரான பிக்காசோவின் ஓவியங்களுடன் ஒப்பிடத்தக்க ஆற்றல் கொண்டவை என்றும் குறிப்பிட்டார். இவரின் இந்த முயற்சிக்குப் பிறகு இந்தக் கலை புத்தாக்கம் பெற்றது என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com