உலகின் மிக உயரமான தீவு: பனிப்பாறைகளும் 850 மொழிகளும் சங்கமிக்கும் நியூகினியா அதிசய உலகம்!

New Guinea island - நியூகினியா தீவு
New Guinea island - நியூகினியா தீவு
Updated on

நான்கு பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டு நடுவில் மனற்பாங்கான இடம் இருப்பதை தீவு என அழைக்கிறோம். அழகான அமைதியான கடற்கரைகள், பனை மரங்கள், கடல் அலைகளின் சத்தம் போன்றவை சுற்றுலா பயணிகளுக்கு தீவுகளை நினைவு கூறுகின்றன.

ஆனால் நெடிதுயர்ந்த பிரம்மாண்டமான மலைகளை இயற்கை அரணாக கொண்டு கடல் மட்டத்திலிருந்து உயரமான தீவாக நியூகினியா தீவு (New Guinea) உள்ளது. அந்த தீவைப்பற்றியும் தீவின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.

தனித்தன்மை பெற்ற சிகரம் 'புன்காக் ஜெயா'

கிரீன்லாந்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவாக நியூகினியா உள்ளது. சாகச பயணிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தும் நியூ கினியா தீவு ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.

இரண்டு நாடுகளாக நியூகினியா தீவின் நிலப்பரப்பு பிரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கட்டுப்பாட்டில் மேற்கு பகுதியும்,சுதந்திர நாடான பப்புவா நியூ கினியா (Papua New Guinea). கிழக்குப் பகுதியாகவும் உள்ளது.

இங்குள்ள 'கார்ஸ்டென்ஸ் பிரமிட்' என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான'புன்சாக் ஜெயா' (Puncak Jaya) சிகரம் கடல் மட்டத்திலிருந்து 16,024 அடி உயரத்தில் உள்ளதால் நியூகினியா தீவை உலகின் உயரமான தீவாக மாற்றிக் காட்டுகிறது.

அதிசயப் பனிப்பாறைகள்

நியூ கினியா தீவு பூமத்திய ரேகைக்கு (Equator) மிக அருகில் அமைந்துள்ளது. ஆனாலும் உயரமான இடத்தில் அமைந்துள்ள சிகரத்தின் உச்சியில் இயற்கை அதிசயமாக பனிப்பாறைகள் உறைந்து காணப்படுகின்றன. இது நியூகினியா தீவின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

New Guinea island - நியூகினியா தீவு
New Guinea island - நியூகினியா தீவுAI Image

அடர்ந்த காடுகளும் பல்லுயிர் பெருக்கமும் அமேசானுக்கு இணையானது. உலகிலேயே மிகக்குறைவான மனித நடமாட்டத்தை கொண்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய தீவான நியூகினியா பூமியின் மிக முக்கியமான பல்லுயிர் பெருக்க காடுகளாக கருதப்படுகின்றன. அமேசான் காடுகளுக்கு அடுத்தபடியாக பல்லுயிர் பெருக்க காடுகளாக இருக்கும் நியூகினியா அடர்ந்த வெப்பமண்டல காடுகளுக்கும் புகழ்பெற்றது.

உலகில் வேறு எந்த பகுதியில் இல்லாத விசித்திரமான உயிரினங்களும் ஒட்டுமொத்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வகைகளில் 5 முதல் 10 சதவிகிதம் வரை நியூகினியா தீவில் மட்டுமே காணப்படுகிறது.

850 மொழிகள் பேசும் பழங்குடியினரின் புகலிடமான நியூகினியா தீவு:

நியூ கினியா தீவில் இயற்கை வளம் மட்டும் கொட்டிக் கிடக்கவில்லை. இங்குள்ள பப்புவா நியூகினியா தீவில் உள்ள பழங்குடியினர் 850 க்கும் மேற்பட்ட பழங்குடியின மொழிகள் பேசுவது கலாச்சாரத்தின் உச்சகட்டமாக உள்ளது. இத்தீவில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் நவீன உலகத் தொடர்பு இல்லாமலும், பாரம்பரியம் மாறாமலும் வாழ்ந்து வருவதால் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே ஊர்... ஒரே மொழி... ஆனா ஆண்கள் ஒரு விதம், பெண்கள் ஒரு விதம்! நைஜீரியாவின் ‘உபங்’ விசித்திரம்!
New Guinea island - நியூகினியா தீவு

சாகசப் பயணிகளுக்கு சவால் விடும் தீவு

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக மட்டுமல்லாமல் சாகசப் பயணிகளுக்கு சவால் விடும் தீவாகவும் நியூகினியா உள்ளது. உலகில் கடினமான மலையேற்றங்களில் ஒன்றாக இங்குள்ள புன்சாக் ஜெயா சிகரத்தை அடைவதை கூறுகின்றனர். தொழில்நுட்ப ரீதியாக அசாத்திய திறமை உள்ளவர்கள் மட்டுமே இச்சிகரத்தை அடையமுடியும். அதற்கு பிரத்தியேக அனுமதிகளும் தேவை.

பறவைகள் மற்றும் இயற்கை ஆய்வு

உலகின் பல்லுயிர் பெருக்க காடுகளாக இருக்கும் நியூகினியா தீவில் விசித்திரமான சொர்க்கப் பறவைகள், மரக் கங்காருகள், ராட்சச பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன அதனால் ஆராய்ச்சியாளர்களும் சுற்றுலா பயணிகளும் வருகை புரிகின்றனர். மனித கலாச்சாரம், உயரமான மலைகள், உறைந்த பனிப்பாறைகள் அமேசான் காடுகளுக்கு அடுத்தபடியாக பல்லுயிர் பெருக காடுகள் என அதிசயங்களும் ஆச்சரியங்களும் கொட்டி கிடக்கும் நியூகினியா தீவு பூமியின் விசித்திர எல்லையாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
பீரங்கிகளுக்கே சவால் விட்ட கோட்டை அகழிகள்: இந்திய வரலாற்றின் பிரம்மாண்ட ரகசியங்கள்!
New Guinea island - நியூகினியா தீவு

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் பூமியின் மிக விசித்திரமான மற்றும் மனித நடமாட்டம் இல்லாத அடர்ந்த காடுகளின் சூழலியல் தன்மையைப் புரிந்துகொள்ளலாம். உலகின் மிகக்கடினமான சாகசப் பயணங்களின் சவால்களையும், பன்முகத்தன்மை கொண்ட பழங்குடியின கலாச்சாரங்களின் வாழ்க்கை முறையையும் அறிந்துகொண்டு உங்கள் உலகளாவிய புவியியல் பொது அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com