9000 மற்றும் 9001 எண்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் என்ன சம்பந்தம்?

Indian President special train
Presidential Saloon India
Published on

குடியரசுத் தலைவரின் சிறப்புத் தொடருந்துப் பயணத்திற்கான இரட்டைப் பெட்டிகள் பற்றித் தெரியுமா?

குடியரசுத் தலைவரின் சிறப்புத் தொடருந்துப் பயணத்திற்கென்று பயன்படுத்தப்படும் இரட்டை பெட்டிகள் (9000 மற்றும் 9001 எண்கள்) குடியரசுத் தலைவரின் சிறப்புப் பெட்டிகள் (The Presidential Saloon) என்று அழைக்கப்படுகின்றன. இது தொடருந்து என்று அழைக்கப்படுவதில்லை.

இந்தச் சிறப்புப் பெட்டிகள் 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்டன. இந்தச் சிறப்புப் பெட்டிகள் வழக்கமாக புது தில்லித் தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். இப்பெட்டிகளில் ஒரு சாப்பாட்டு அறை உள்ளது, இது வருகை அறை, ஒரு இளைப்பாறும் அறை அல்லது மாநாட்டு அறை மற்றும் குடியரசுத் தலைவரின் படுக்கையறை என இரட்டிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. குடியரசுத் தலைவரின் செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள், குடியரசுத் தலைருடன் பயணிக்கும் தொடருந்து ஊழியர்களுக்கான சமையலறை மற்றும் அறைகளும் இடம் பெற்றிருக்கும். பெட்டிகள் முழுவதும் தேக்கு மரச்சாமான்கள் மற்றும் பட்டுத் திரைச்சீலைகள் மற்றும் மெத்தை உறைகளுடன் ஆடம்பரமாக இருக்கும்.

1960 ஆம் ஆண்டுகள் மற்றும் 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பல குடியரசுத் தலைவர்களால், குடியரசுத் தலைவரின் சிறப்புப் பெட்டிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

குடியரசுத் தலைவரது பதவிக்காலம் முடிந்ததும் புது தில்லியில் இருந்து நாட்டின் பிற இடங்களில் உள்ள தங்களது இல்லத்திற்கு செல்லும் பயணத்திற்கு இந்த தொடருந்துச் சிறப்புப் பெட்டிகளைப் பயன்படுத்தும் வழக்கமும் வளர்ந்தது. இருப்பினும் அது எப்போது தொடங்கியது? என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த வழியில், நீலம் சஞ்சீவ ரெட்டி இந்தச் சிறப்புத் தொடருந்துப் பெட்டிகளை 1977 ஆம் ஆண்டில் பயன்படுத்தினார்.

இதையும் படியுங்கள்:
சுதந்திரப் போராட்ட வீராங்கனை உதாதேவியின் தைரியமும் தியாகமும் பற்றி தெரியுமா?
Indian President special train

அதன் பிறகு, பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்தத் தொடருந்துப் பெட்டிகள் பயன்படுத்தப்படாமல் போனது. இருப்பினும், அவை புதுதில்லியில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர்களால் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. நீலம் சஞ்சீவ ரெட்டிக்குப் பிறகும் சுமார் 26 வருட இடைவெளிக்குப் பிறகு, 2003 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாளன்று குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் ஹர்னாட்டில் இருந்து பாட்னா வரை 60 கி.மீ தொலைவிலான பயணத்திற்கு இதைப் பயன்படுத்தினார். அவரது பயன்பாட்டிற்காக, இந்தச் சிறப்புப் பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டு, செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்புகள் போன்ற நவீனக் கருவிகளும் இணைக்கப்பட்டிருந்தன.

குடியரசுத் தலைவர்களின் சிறப்புப் பெட்டிகள் (The Presidential Saloon) முன்னோடியாக, இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியக் கவர்னர் ஜெனரால் பயன்படுத்தப்பட்ட வைஸ் ரீகல் தொடருந்துப் பெட்டியாகும். இந்தத் தொடருந்துப் பெட்டியானது 1927 ஆம் ஆண்டு வரை கல்கத்தாவில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், அது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரான புது தில்லிக்குக் கொண்டு வரப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பொருளாதார சுதந்திரத்தை ( financial freedom) அடைய வழிகள்!
Indian President special train

வைஸ் ரீகல் தொடருந்துப் பெட்டியில் பாரசீகக் கம்பளங்கள், 'மூழ்கும் சோபா' மற்றும் அப்போதைய இந்தியத் தொடருந்துகளில் ஒரு புதுமை சூடான மற்றும் குளிர்ந்த ஓடும் நீர் ஆகியவை பொருத்தப்பட்டன. இந்தப் பெட்டிகள் அப்போது குளிரூட்டப்படவில்லை. ஆனால், காற்று குளிரூட்டலுக்கு காஸ் பாய்களைப் பயன்படுத்தியது. முதல் இந்தியக் குடியரசுத்தலைவர் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொடருந்துச் சிறபுப் பெட்டியைப் பயன்படுத்தினார், மேலும் புது தில்லியில் இருந்து குருசேத்ராவுக்குச் செல்லவும் இதைப் பயன்படுத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com