தேங்காய்க்கு எதுக்கு குடுமி? தாத்தா சொன்ன அறிவியலும் வரலாற்று உண்மைகளும்!

தேங்காயின் குடுமி பற்றியும் அதன் கலாச்சார, அறிவியல் பின்னணி பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள்.
தேங்காய் குடுமி - coconut tuft significance
தேங்காய் குடுமி - coconut tuft significanceImage credit: Gemini
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on: 

குழந்தைகளுக்கு எப்போதும் கேள்வி கேட்டு பதில் தேடுவது மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்குத் தெரியாததை தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் போலித் தன்மை கிடையாது. மேலும், குழந்தைகளுக்கு ஸ்பெகுலேட் செய்யத் தெரியாது; பிடிக்கவும் பிடிக்காது. சமீபத்தில் தேங்காயை உடைப்பதற்கு நான் தயாரானபோது என் பேத்தி கேட்டாள்... தேங்காய்க்கு எதற்கு குடுமி தாத்தா? மூளையைக் கசக்கி எனக்கு என் தாத்தா அன்றென்றோ கொடுத்த விளக்கத்தை என் பேத்திக்குச் சொன்னேன்.

தேங்காய் குடுமி:

குடுமிதான் தேங்காய் என்ற சிரத்திற்கு ஒரு முழுமை தருகிறது. அந்தக் காலத்தில் தேங்காய் நாம் இறைவனுக்குப் படைக்கும் பொருளில் மிகவும் முக்கியமானது. அதன் குடுமியை நீக்கிவிட்டால் அதன் முழுமைக்குப் பங்கம் ஏற்பட்டு விடுகிறது. மேலும் ஹோமங்களில் குடுமி கூடிய தேங்காயை வைப்பதுதான் முறையாகவும் சுந்தரமாகவும் இருக்கும். இவற்றைவிட இன்னொரு நடைமுறை காரணம் ஒன்று உள்ளது.

இந்தக் குடுமிதான் தேங்காயின் மூன்று கண்களை இமைபோல பாதுகாக்கிறது. குடுமி இல்லையேல் இந்த மூன்று கண்கள் வழியே உள்ளே நுழையும் காற்று தேங்காயை விரைவாக அழுக வைத்துவிடும்.

உடைக்க கை பிடிபோல உதவும் இந்தக் குடுமி தேங்காயை உடைத்தப் பின்தான் எடுக்கப்பட வேண்டும். குடுமியை எடுத்துப் பாருங்கள் தேங்காய் ஒரு நான்கு நாட்கள்கூட தாங்காது.

தேங்காய் குடுமி - coconut tuft significance
தேங்காய் குடுமி - coconut tuft significanceImage credit: Gemini

நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது தாத்தாவென்றால் குடுமி வைத்திருக்கவேண்டும் . குடுமி இல்லை என்றால் அவர்களுக்குத் தாத்தா என்ற பட்டம் கிடைக்காது. மாமா பட்டம்தான். இது எல்லா வகுப்பினருக்கும் பொருந்தும். இப்போது பலர் டை அடிக்கிறார்கள். விக் கூட வைக்கிறார்கள். வேட்டி அணியாமல் முக்க ட்ரவுசர் போட்டு கோயில்களுக்கும் வராங்க தாத்தாமார்கள். நீங்கள் பார்த்து இருப்பீர்கள் கோயில் குருக்கள்கூட தலை மொத்தம் முடி வளர்த்து முடிகளை ஒன்றாக பின்னோக்கி வாரி கொண்டாய் போட்டு அதை குடுமி என்று சொல்கிறார்கள்

இதெல்லாம் இருக்கட்டும் குடுமியைப் பற்றி சொல்ல ஒரு விஷயம் இருக்கு. கூர் வாள் புத்திமான் சாணக்கியர் தன்னை அரசவையில் வைத்து அவமதித்த தன நந்தா என்ற திமிர் படைத்த அரசன் முன்பு சொன்னார்.

'ஆணவம் பிடித்த மன்னா உன்னை அரியணையிலிருந்து இறக்கி வேறொரு நல்ல மனிதனை அதில் அமர வைக்கும் வரையில் இப்போது அவிழ்க்கும் என் குடுமியைக் கட்டமாட்டேன்.' சொன்னபடி செய்யவும் செய்தார் சந்திர குப்த மௌரியருக்கு முடி சூட்டினார். இந்த சந்திர குப்தர் ஆண்ட காலத்தைத்தான் குப்தர்களின் பொற்காலம் என்று பெயர் வாங்கியது.

தமிழ் நாட்டிலேயே பலவித குடிமிகள் இருந்தன...

முன்குடுமி (சோழியக் குடுமி): தலையின் முன்பகுதியில் அல்லது நெற்றிக்கு மேல் வைக்கப்படும் குடுமி. ‘பொன்னியின் செல்வன்’ என்ற ஒரு பாத்திரம் கல்கி நாவலில் முன் குடுமியுடன் இருப்பார். அவர்தான் ஆழ்வார்க்கு அடியான். இது சோழிய பிராமணர்கள் மற்றும் கேரளா பகுதியில் முற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

பின் குடுமி: தலையின் பின்புறத்தில் மகுடம் போலவோ அல்லது சாதாரணமாகவோ கட்டப்படும் குடுமி. இந்த வகை குடுமிதான் பிராமணர்கள் வைத்துக் கொள்கிறார்கள்

உச்சிக் குடுமி: தலையின் நடுப்பகுதியில் (உச்சந்தலையில்) வைக்கப்படும் குடுமி முறை.

இதையும் படியுங்கள்:
அண்ணன் - தம்பி இடையே சண்டையா? 'விட்டுக்கொடு' எனச் சொல்லாதீர்கள்... இதோ சிறந்த தீர்வு!
தேங்காய் குடுமி - coconut tuft significance

சடாமுடி: துறவிகள் மற்றும் ஆன்மிகவாதிகள் தலைமுடியைக் கத்தரிக்காமல் வளர்த்து முடிந்துகொள்ளும் முறை. ஒன்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பிராமணர்கள் மட்டும் குடுமி வைக்கவில்லை. மற்ற வகுப்பிலும் ஆண்கள் குடுமி வைத்தனர்.

குடுமி பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பல ஹாலிவுட் படங்களில் வில்லன்கள் குடுமியுடன் தோன்றி உள்ளனர். பழைய சீன குங்ஃபூ மாஸ்டர்கள் நீண்ட பின்னப்பட்ட குடுமியுடன் சண்டை இடுவதைப் பார்த்திருக்கலாம். அப்போதெல்லாம் எல்லா ஆண்களும் குடுமி வைத்திருந்தனர். அதற்கு சாட்சி குடுமி பிடி சண்டை என்ற வாக்கியம். இது இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நீங்க நினைச்சது அப்படியே நடக்கும்! வேதாத்திரி மகரிஷி கொடுத்த 10 சீக்ரெட் மந்திரங்கள்!
தேங்காய் குடுமி - coconut tuft significance
logo
Kalki Online
kalkionline.com