மீம்ஸை தாண்டி தமிழ் நெட்டிசன்கள் உருவாக்கும் புதிய டிஜிட்டல் கலாச்சாரம்!

டிஜிட்டல் கலாச்சாரம் மூலம் தமிழரின் வாழ்க்கை முறையில் மாற்றங்களா?... வாங்க பார்க்கலாம்!
village woman capture the daily vlog - டிஜிட்டல் கலாச்சாரம்
village woman - டிஜிட்டல் கலாச்சாரம்
Updated on

மிழ் மொழியைக் கொண்டு டிஜிட்டல் கலாச்சாரம் மிகவும் தனித்துவமாகவும், சுவாரசியமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மீம்ஸ் முதல் சமூகச் செயல்பாடுகள் வரை, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டின் கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் சமூக உரையாடல்களை புதிய  வடிவத்தில் மாற்றி வருகின்றன.

மீம்ஸ் மற்றும் ட்ரோல் கலாச்சாரம்:

தமிழ் டிஜிட்டல் உலகின் முக்கிய தூணாக மீம்ஸ் கலாச்சாரம் விளங்குகிறது. இதில் நாட்டுநடப்பு செய்திகளான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதைத் தமிழ் சினிமா காட்சிகளோடும், வசனங்களோடும் இணைத்து, ஒரு சில நொடிகளில் மிம்ஸாக மாற்றப்பட்டு, ட்ரெண்ட் ஆகிவிடும். இக்கலாச்சாரம் இன்றளவும் சுவாரசியம் குறையாமல் செயல்பட்டு வருகிறது. டெம்ப்ளட்ஸ் மாறாமல் கன்டென்ட் மட்டும் சூழ்நிலைக்கேற்ப மாறுகிறது.

அரசியல் சார்ந்த கட்டுரைகள், சமூகப் பிரச்னைகள் முதல் கிரிக்கெட் வரை அனைத்தையும் நையாண்டி (sarcasm) மற்றும் நகைச்சுவையுடன் அணுகுவது தமிழ் டிஜிட்டல் கலாச்சாரத்தின் தனிச் சிறப்பு.

கவுண்டமணி-செந்தில், வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியோரின் காமெடி காட்சிகள் இன்று வரை மீம்ஸ் உருவாக்கத்திற்கு பெயர் போனதாகும்.

'யூடியூப் வ்லோக்' (vlog) மற்றும் கிராமிய கலவை:

முன்பெல்லாம் டிஜிட்டல் கன்டென்ட் என்றாலே சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களே அதிகமாக 'க்ரியேட்' செய்தார்கள். ஆனால் இன்று கிராமங்களிலும் இதன் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. (Rural vloggers)

நகரங்களின் ஆடம்பரமான வாழ்க்கையை விட கிராமத்து எளிமை மற்றும் எதார்த்தமான பேச்சை உலகமெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அதிகமாக ரசிக்க தொடங்கியுள்ளார்கள்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் தமிழ் 'பாப்-கலாச்சாரம்:

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற இணைய தளங்களில், தமிழ் சினிமா பாடல்களும், சுயாதீன (Independent Music) தமிழ் பாடல்களும் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய ரூபாய் நோட்டுகள் எங்கே, எப்படி அச்சடிக்கப்படுகின்றன? உங்களுக்குத் தெரியாத ரகசியங்கள்!
village woman capture the daily vlog - டிஜிட்டல் கலாச்சாரம்

அல்கரிதம் (algorithm):

இணைய தளங்கள் மூலம் சிறிய நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் கூட தங்களின் நடனம் மற்றும் நடிப்பு திறமையால் ஒரே நாளில் வைரலாக முடியும் என்பதை டிஜிட்டல் கலாச்சாரம் நிரூபித்துக் காட்டியுள்ளது.

பெரிய இசையமைப்பாளர்களின் பாடல்களும், மற்றும் சுயாதீன இசைக்கலைஞர்களின் பாடல்களும், உலகமெங்கும் உள்ள பிற மொழி மக்களை ரீல்ஸ் செய்வதற்கு தூண்டும் அளவிற்கு மாற்றியுள்ளது.

தமிழ் போட்காஸ்ட் (Tamil podcasts) மற்றும் ஆழ்ந்த உரையாடல்கள் (long form content) :

குறுகிய நேர வீடியோக்கள் ஒருபுறம் ஆதிக்கம் செலுத்தினாலும், மற்றோருப் புறம் நீண்ட நேர பேச்சுகள் (long form content ) பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

YouTube மற்றும் Spotify போன்ற இணைய தளங்கள் மிகபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன.

அறிவியல், மனநலம், வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா விமர்சனங்கள் 1அல்லது 2 மணிநேரம் வரை இருந்து கவனிக்கும் அறிவுசார் டிஜிட்டல் பார்வை யாளர்கள் (Intellectual Audience) எண்ணிக்கையும் பெருகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜெர்மன் சமையலறையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் 'வெங்காயம்': 4 முக்கிய காரணங்கள்!
village woman capture the daily vlog - டிஜிட்டல் கலாச்சாரம்

டிஜிட்டல் கதைசொல்லல் மற்றும் பிராண்டிங்:
தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் (Entrepreneurs) தங்கள் தொழில்களை வளர்க்க டிஜிட்டல் தளங்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

வெறும் வியாபாரமாக இல்லாமல், தங்களின் உழைப்பு, பின்னணி மற்றும் கலாச்சாரத்தோடு இணைந்து ஒரு கதை வடிவில் வாடிக்கையாளரின் உணர்வுகளோடு பிணைந்து சொல்கிறார்கள். இதன் மூலம் பாரம்பரியமான தொழில்கள் இன்று நவீனமயமானது.

டிஜிட்டல் அரசியல் மற்றும் விவாதங்கள்: (Digital Activism)

எக்ஸ் (X/Twitter), ஃபேஸ்புக் (face book) போன்ற தளங்களில் #Hashtag போராட்டங்கள் மூலம் சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கான குரல்கள் எழுப்படுகின்றன.

சாமானிய மக்களின் கருத்துக்களை தயக்கமின்றி பகிர்வு செய்யும் தளமாக மாறிவிட்டது இன்றைய டிஜிட்டல் கலாச்சாரம். தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமல்லாமல், தமிழர்களின் மொழி , நகைச்சுவை, கலை மற்றும் வாழ்க்கை முறையை ஒரு புதிய வடிவில் உலகிற்கு எடுத்துச்செல்லும் ஒரு பாலமாக மாறியுள்ளது.

மொழி, மரபு, நகைச்சுவை, சமூக அக்கறை என அனைத்தையும் இணையத்தின் வழியாக உலகம் முழுவதும் கொண்டு செல்கிறது தமிழ் டிஜிட்டல் கலாச்சாரம்!

logo
Kalki Online
kalkionline.com