வாங்க 'டீ' சாப்பிடலாம்!

Tea shop
Tea shopImg credit: AI Image
ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA , 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக சிறுகதைகள், தத்துவங்கள், ஆன்மீக புரிதல்கள் ஆகியவற்றை எழுதி, பகிர்ந்து வருகிறார். இவரது கதை கட்டுரைகளை கல்கி ஆன்லைன் இதழ்களிலும் Motivation, பசுமை/ சுற்றுச்சூழல், மற்றும் கலை கலாச்சாரம், ஆன்மீகம், தத்துவம் ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

Updated on: 

‘டீ’ சாப்பிடும்போது ஏற்படும் ஒரு சில சாகசங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

'டீ' என்பது ஒரு ‘குடிநீர்’ என்பதைத்தாண்டி, அது ஒரு ஊக்க சத்தியாக, உந்து சக்தியாக, சிந்தனைப் பெருக்காக, சிறகடிக்கும் எண்ணங்களை சீர் செய்யும் ஒரு யாகமாக, சமூக உரையாடல்களின் ஒரு அங்கமாக, மேலும் சொல்லப்போனால் ஏழைகளின் பங்காளியாக, ஒரு விருந்துக்கு ஒப்பான மனநிறைவை ஏற்படுத்தித் தரும் ஆன்ம பலமாக... (அறிமுகம் ஏற்பட்டு ஒரு சில நொடிப்பொழுதில் நாம் அழைப்பது – வாங்க ‘டீ’ சாப்பிட்டுக் கொண்டே பேசலாம். ஆக இங்கே பணம் பெரிது இல்லை; பெரிதினும் பெரிது அகம்!)

நம்மிடையே குடிகொண்டு இருக்கும் இந்த ‘டீ’ அதிக செலவு இல்லாமல், நம்மை பலரிடம் அறிமுகம் செய்கிறது.

இந்த ‘உளவியலை’ ஆராய்ச்சி செய்பவரிடம் விட்டு விடுகிறேன்.

என்னுடைய வாதம்; ஏழை, பணக்காரன் பேதம் இன்றி ஒரு சில நேரங்கள் நம்மை இணைக்கின்றன. (உதாரணமாக ரயில் பயணங்கள்).

‘டீ’ ... ஆம்! இதை தமிழில் 'தேநீர்' என்று சொல்கிறோம். தேனும், பாலும் ஒருசேரக் கலந்து அதில் சிறிது சர்க்கரை இட்டு நன்றாக ஆற்றி, இளஞ்சூட்டுடன் பருகும்போது ஏற்படும் ஒரு 'தனிமை' முதல் தன்னை மறந்து பிறரிடம் உலாவும்போது ஏற்படும் 'அலப்பறை' வரை நம்மை கொண்டு செல்லும் சக்தி இந்த 'தேநீருக்கு' உண்டு.

பல ரகசியங்கள் ‘டீ’ கடையில் உடைக்கப்படலாம்.

உதாரணமாக: வங்கியில் கிளை மேலாளரின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய புரிதல் 'off the record' - வங்கி ஊழியர்களின் உரையாடல்கள், மாலைப் பொழுதில் தேநீர் கடைகளில் நடக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைக்குப் பெயர் வைக்கப் போறீங்களா? இந்த 'சிக்கல்களை' ஒருமுறை படிச்சிடுங்க!
Tea shop

ஆகவே, நமக்கு முதலில் தோழனாய், சகோதரனாய், நண்பனானாய், உற்ற உறவினனாய், ஏன் எதிரியை கூட சமாளிக்கும் உத்தியினை கற்றுக்கொடுக்கவல்ல திறன் வாய்ந்தது அந்த 'டீ' என்றால் மிகையாகாது. சமாளிக்கும் திறன் என்ற கற்பனை 'டீ'யினால்தான் எனக்கு வந்தது. 'டீ' என் வந்தனம்.

ஆகவே! ஒன்று மட்டும் உறுதியாய் சொல்வேன்.

நீங்கள் செலவு செய்யவேண்டாம்.

ஏதாவது சந்தர்ப்பத்தில், உங்களுக்கு வேலை செய்த பணியாளர்களிடம் சேர்ந்து 'டீ' அருந்திப் பாருங்கள்.

ஜப்பானியர்கள் 'டீயை' சொட்டு சொட்டாக அருந்துவார்கள் என்றும், அது அவர்களின் கலாச்சார, பண்பாட்டு குறியீடு என்றும் படித்து இருக்கிறேன்.

சரி, நம்ப விஷயத்துக்கு வருவோம்.

ஒரு பஸ் பிரயாணம் அல்லது ரயில் பிரயாணம் நாம் ஒரு 5 அல்லது 6 மணி நேர அளவலாவிய பிறகு, பிரியும் நேரத்தில் 'நம் சுயபுராணத்தையும் அவரது பெரிய புராணத்தையும்' மீண்டும் அசைபோட்டு புதுப்பிக்க வல்ல வல்லமை 'டீக்கு' உண்டு என்பதை அறிவேன்.

'டீக்கடை' என்றால் ‘நாயர் கடை’ என்ற நிலைமை மாறி இன்று - ‘எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஒரு இனம்’ - என்று பாகுபாடு தெரியாமல் நம்மை இணைக்கும் ஒரு இனிய நாதமாய் எந்த பிரச்சாரமும் இன்றி மத நல் இலக்கணத்தை தெருக்கோடி மக்களும் ஒன்று சேர்ந்து இசைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வெனிசுலாவை அமெரிக்கா குறி வைப்பது ஏன்? திடுக்கிடும் தகவல்...
Tea shop

அதனால்தான் என்னவோ 'தலைவர்கள் டீ அருந்தும் புகைப்படம்' அதிக அளவில் Troll ஆகிறது.

'மீளும்' நம் Tea Time. ஒரு அசாதாரண கேள்வி.

நேர்காணல் செய்பவர் வேட்பாளருக்கு ஒரு கப் காபி ஆர்டர் செய்தார். வந்ததும், அது அவருக்கு முன்னால் வைக்கப்பட்டது. பின்னர் அவரிடம் கேட்கப்பட்டது.

உங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது?

வேட்பாளர்: உடனடியாக TEA என்று பதிலளித்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஏன் TEA என்றார் தெரியுமா?

அது காபி என்று அவருக்கு தெரியும்?

logo
Kalki Online
kalkionline.com