தமிழகத்தில் பொதுத்தேர்வு எப்படி உருவானது? சுவாரஸ்யமான வரலாறு இதோ!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரலாறு: 100 ஆண்டு கால சுவாரஸ்ய பயணம்!
பொதுத்தேர்வு - TN Public Exam History
பொதுத்தேர்வு - TN Public Exam HistoryImage credit: Gemini
ம.வசந்தி

ம.வசந்தி, மங்கையர் மலரின் நீண்டகால வாசகி. கல்கி ஆன்லைன் வாசக எழுத்தாளர். புதிய விஷயங்களைத் தேடி அறிவதில் ஆர்வம் கொண்ட இவர், வாசகர்களை ஊக்கப்படுத்தும் நேர்மறைச் சிந்தனை கொண்ட மோட்டிவேஷன் கட்டுரைகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

என்னப்பா! கொஞ்ச நாளா ஆளையே காணோம்… பொண்ணு பன்னிரண்டாவது படிக்குதுப்பா. கூடவே இருந்து தேவையானதை செஞ்சு கொடுக்கிறேன். அதனாலதான் வெளியில வரமுடியல. இப்படி பேசிக்கொள்வதை நாம் அதிகம் கேட்டிருப்போம். வீட்டில் இருக்கும் குழந்தைகள் பத்தாவது மற்றும் 12வது பொது தேர்வு எழுதப் போகிறார்கள் என்றால் பெற்றோருக்கும் சேர்த்தே அந்த தேர்வு பயம் வந்துவிடுகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு உருவான வரலாறு குறித்து இப்பதிவில் காண்போம்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட நெடிய பரிணாம வளர்ச்சியை கொண்டதுதான் தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறை (Board Exams). அரசு பணிகளில் வேலை செய்ய தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கவும், கல்வியின் தரத்தை மதிப்பிடவும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் முதல் முதலாக இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுத்தேர்வு தொடக்க காலம் (1910 - 1911)

மாநில மேல்நிலைக் கல்வித்துறை உருவாக்கம்

1910 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பொதுவான பள்ளி அளவிலான கல்வியை முறைப்படுத்த மாநில மேல்நிலைக் கல்வித்துறை (State Secondary Education Department) முதல் முதலாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1911 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல் முதலாக முதல் எஸ்.எஸ்.எல்.சி (SSLC - Secondary School Leaving Certificate) பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் மாற்றம்: முன்னாள் மாணவர்களை களமிறக்கிய தமிழக அரசு.!
பொதுத்தேர்வு - TN Public Exam History

தேர்வு வாரியம் மற்றும் தனி இயக்குநரகம் (1975)

பொது தேர்வுகளை பள்ளி கல்வித்துறையின் கீழ் தனித்தனி பிரிவுகள் ஆரம்பகால கட்டத்தில் கையாண்டு வந்தன.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE)

1975 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் "அரசுத் தேர்வுகள் இயக்ககம்" (Directorate of Government Examinations) என்ற தனி இயக்குநரகம் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு அனைத்து பள்ளி பொதுத்தேர்வுகளையும் ஒரே நிர்வாக அமைப்பின் கீழ் கொண்டுவந்து பொது தேர்வுகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இன்று வரை இந்த அரசு தேர்வுகள் இயக்ககம் பொது தேர்வுகளை நடத்தி வரும் முதன்மை அமைப்பாக உள்ளது.

10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் அறிமுகம் (1978 - 1980)

* பழைய கல்வி முறைகள் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு (SSLC) பொது தேர்வுகள் 1978 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டது.

* 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10,12 ஆம் வகுப்பு (+2 / HSC) கல்வி முறை அமுல்படுத்தப்பட்ட பிறகு முதலாவது மேல்நிலை முதலாமாண்டு (+2 அல்லது 12 ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.

பொதுத்தேர்வு - TN Public Exam History
பொதுத்தேர்வு - TN Public Exam HistoryImage credit: Gemini

ஒருங்கிணைந்த தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியம் (2002 - 2011)

* 2002 ம் ஆண்டு மேல்நிலை கல்வி வாரியமும் இடைநிலை கல்வி வாரியமும் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழ்நாடு பள்ளித் தேர்வுகள் வாரியம் (Tamil Nadu Board of Secondary Education) என மாற்றப்பட்டது. அதுவரை இரண்டும் தனித்தனியாக இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

சமச்சீர் கல்வி மற்றும் பொது வடிவம் (2011 - 2012)

2011 ம் ஆண்டு சமச்சீர் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி நான்கு வெவ்வேறு கல்வி முறைகளான மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், மாநில வாரியம், ஓரியண்டல் ஆகியவை ஒன்றிணைக்கப் பட்டது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான பொது தேர்வு முறை (Uniform SSLC Pattern) 2012 ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (2018)

10,12 பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவதால் பதினொன்றாம் வகுப்பு பாடங்களை புறக்கணிப்பதால் 2018 ஆண்டில் பதினொன்றாம் வகுப்பிற்கும் பொது தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் போட்டி தேர்வு திறனை வளர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2025–2026 கல்வி ஆண்டில் ரத்து செய்யப்பட்டது.

மாணவர்களின் திறனை சோதிக்க கொண்டுவரப்பட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்திருக்கும். முதியவர்கள் ஆன பிறகும் தங்களது நினைவுகளை அவர்களது பேரன் பேத்திகளிடம் நினைவு கூறுவது இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் சர்ப்ரைஸ் பரிசு: இலவச கல்வி உபகரணங்கள் பெறுவது எப்படி?
பொதுத்தேர்வு - TN Public Exam History
logo
Kalki Online
kalkionline.com