பேச்சில்லாக் கிராமங்களும் தாமாகவே நகரும் கற்களும்... ஆச்சரியமோ ஆச்சரியம்!

பேச்சில்லாக் கிராமம் & நகரும் கல்
பேச்சில்லாக் கிராமம் & நகரும் கல்
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

1. மக்கள் வசிக்காத பேச்சில்லாக் கிராமங்கள்!

இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் வறட்சி, பஞ்சம், வெள்ளம் மற்றும் போர் உள்ளிட்ட காரணங்களினால் குடியிருப்புகள் அழிந்து, அங்கிருந்த மக்கள் வேறிடம் சென்று விட்ட காரணத்தினால் அந்த ஊர்கள் அழிந்து விடுவதுண்டு. ஆனால், அந்த ஊரைச் சார்ந்த விளை நிலங்கள் மட்டும் ஒரு கால கட்டம் வரை உலக வழக்கிலும், அந்த ஊரின் பெயரிலேயேப் பயன்பாட்டில் இருந்து வருவதுண்டு. இது போன்ற ஊர்களை, ‘பேச்சில்லா கிராமம்' என்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், பேச்சில்லா கிராமம் என்பது மக்கள் வசிக்காத, ஆவணங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ள ஊர்களைக் குறிக்கிறது.

தமிழில், ‘பேச்சில்லா கிராமம்’ என்று சொல்லப்படுவதைப் போன்று இந்தியாவின் பிற பகுதிகளில் ஆட்கள் வசிக்காத, இத்தகைய கைவிடப்பட்ட ஊர்களை, இந்தி மொழியில் ‘பே-சிராக்’ கிராமங்கள் என்கின்றனர். இதற்கு, ’விளக்கேற்றப்படாத ஒளியிழந்த ஊர்கள்’ என்று பொருள்.

உதாரணமாக, மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே விருதுநகர் செல்லும் வழியில் உள்ளது வேலாம்பூர் எனும் கிராமம். வேலாம்பூரை தலைமையாகக் கொண்டு வருவாய்த்துறையின் கீழ் சில கிராமங்கள் இயங்குகின்றன. உள்ளாட்சி அமைப்பிலும், இந்த ஊராட்சிக்கு வேலாம்பூர் என்ற பெயர் இருக்கிறது. ஆனால், இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கு சாட்சியாக, கட்டட இடிபாடுகள், கோயில்கள் உள்ளன. இங்கிருந்த குடும்பங்கள் அனைத்தும் இடம் பெயர்ந்து சென்றதால், இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. ஆகையால், இந்த ஊர் ‘பேச்சில்லா கிராமம்’ என்று ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் வேலாம்பூரைப் போன்று பல பேச்சில்லாக் கிராமங்கள் இருக்கின்றன. மன்னர்கள் படையெடுப்பு, இயற்கைப் பேரழிவு, பஞ்சம், கொடிய நோய்கள் போன்ற பல காரணங்களால் ஊர்களின் பெயர்கள் மட்டும் ஆவணங்களில் இருக்கின்றன. ஆனால், அக்கிராமங்களில் வசிப்பதற்குத்தான் ஆட்களில்லை. இது போன்ற பேச்சில்லாக் கிராமங்களில் இருந்து வெளியேறிச் சென்றவர்கள், ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, தங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்த கோயில்களுக்கு வந்து விழா எடுத்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இதுபோன்ற பேச்சில்லாக் கிராமங்களில் அல்லது அவற்றின் அருகில் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டால், பேச்சில்லாக் கிராமங்கள் உயிர்த்தெழும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள பல பேச்சில்லாக் கிராமங்களுக்குப் புத்துயிரூட்ட இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

2. நகரும் கற்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மனிதன் அல்லது எந்தவொரு விலங்கின் தலையீடின்றி, கற்கள் அல்லது பாறைகள் ஒரு நீண்ட நேரான பாதைத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாட்டை நகரும் கற்கள் அல்லது அலையும் கற்கள் அல்லது நகரும் பாறைகள் (Sailing Stones) என்கின்றனர்.

இத்தகைய நிகழ்வுகள் ரேஸ்ட்ராக் பிளாயா, சாவுப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. இத்தகைய இடங்களில் கற்கள் நகர்ந்ததற்குரிய சுவடுகளும், நகர்ந்த கற்களும் நிழற்படமாகப் பிடிக்கப்பட்டுள்ளன. கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக உள்ளது. எனினும், இதனைப் பற்றிய ஊகங்களும் கோட்பாடுகளும் பல்வேறாக உலா வருகின்றன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள் - முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா?
பேச்சில்லாக் கிராமம் & நகரும் கல்

பொதுவாக, கற்கள் அசைவதற்கு;

  • ஈரப்பதமான ஆனால் நீரால் நிரம்பாத மேற்பரப்பு,

  • மெல்லிய களிமண் படலம்,

  • தொடக்க நிலை அசைவிற்கான விசையாக மிக்க வன்மையான காற்று,

  • கற்களைத் தொடர்ச்சியாக அசைப்பதற்கு வலிமை கொண்ட நிலையாக உள்ள தொடர்ச்சியான காற்று போன்றவைகளேக் காரணமாக இருக்கின்றன.

ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை மேற்காணும் பகுதிகளில் கற்கள் நகர்கின்றன. கரடுமுரடான அடிப்பகுதியைக் கொண்ட கற்கள் வரிகள் கொண்ட சுவட்டை உருவாக்குகின்றன. சில வேளைகளில் கற்கள் கவிழ்ந்து, அதன் வேறொரு முனை நிலத்தைத் தொட்டு அதன் தடப்பாதை திசை மாறுகின்றது. கற்களைப் பொறுத்து, சுவடுகள் திசையிலும் நீளத்திலும் வேறுபாடு கொண்டவையாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
இந்த உண்மை தெரிந்தால் நீங்க ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தவே மாட்டீங்க! 
பேச்சில்லாக் கிராமம் & நகரும் கல்

ஒன்றாகப் புறப்படும் இரு கற்கள் சில குறிப்பிட்ட தூரம் வரை ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் இடம், வலம் எனத் திசை மாறுகின்றன. சில வேளைகளில் வந்த வழியேத் திரும்பவும் நகர்தலும் உண்டு. ஒரே அளவிலான இரண்டு கற்கள் வெவ்வேறு தூரத்தை அடைவதுமுண்டு.

logo
Kalki Online
kalkionline.com