உலகின் விசித்திரமான 9 தேசியக் கொடிகள்: AK-47 துப்பாக்கி இடம் பெரும் கொடியும் அதன் தத்துவமும்!

The  studies of flags
The study of flags unusual national flagsImg credit: AI Image

ஒரு நாட்டின் கொடி என்பது அந்த நாட்டின் அடையாளம், இறையாண்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மிக முக்கியமான சின்னமாகும். தனித்துவமாகவும் ஆச்சரியமாகவும் அமைந்த கொடிகளே 'உலகின் விசித்திரமான கொடிகள்' என அழைக்கப்படுகின்றன. விசித்திரமான கொடிகளை ஆய்வு செய்யும் துறை வெக்ஸிகோலஜி.

கொடிகளின் முக்கியத்துவம்: நாட்டின் வரலாற்றுச் சின்னம்; மக்களின் தியாகத்தின் நினைவுச் சின்னம்; எதிர்கால இலட்சியங்களின் பிரதிபலிப்பு ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும். அதனால் தான் கொடிகள் வடிவமைக்கும்போது ஒவ்வொரு நிறமும், ஒவ்வொரு சின்னமும் மிகுந்த அர்த்தத்துடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

1. நேபாள நாட்டின் கொடி:

Nepal's National  flag
Nepal's National flagImg credit: Berger paints

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் செவ்வக வடிவமில்லாத ஒரே தேசிய கொடி நேபாளத்திற்கே சொந்தமானது. இதன் தனித்துவம் இரண்டு முக்கோணங்கள் இணைந்த வடிவம். மேல் முக்கோணத்தில் சந்திரன், கீழ் முக்கோணத்தில் சூரியன். இந்த சின்னங்கள், 'சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை நேபாள நாடு நிலைத்திருக்கும்' என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

2. மோசாம்பிக் நாட்டின் கொடி:

Mozambique's national flag
Mozambique's national flagImg credit: Wikipedia

துப்பாக்கி சின்னத்தை கொண்ட ஒரே கொடி மோசாம்பிக் கொடி. உலகின் மிக விவாதத்திற்குரிய கொடிகளில் ஒன்றாகும். காரணம்: AK-47 துப்பாக்கி, புத்தகம், உழவுக்கருவி இந்த மூன்றும் சேர்ந்து 'பாதுகாப்பு, கல்வி மற்றும் உழைப்பு' ஆகியவற்றை குறிக்கின்றன.

3. சுவிட்சர்லாந்து நாட்டின் கொடி:

Switzerland's national flag
Switzerland's national flag

பெரும்பாலான கொடிகள் செவ்வகமாக இருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்தின் கொடி சதுர வடிவில் அமைந்துள்ளது. சிவப்பு பின்னணி, நடுவில் வெள்ளை குறுக்கு (+) சின்னம். இந்த குறுக்கு சின்னம் அமைதியையும் மனித நேயத்தையும் குறிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி 30 ஆம் தேதி... இது என்ன புதுசா இருக்கே!
The  studies of flags

4. வாடிகன் நகரத்தின் கொடி:

Vatican City's national flag
Vatican City's national flagImg credit: Walks in Rome

உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன் நகரத்தின் கொடி மத அடையாளங்களால் நிரம்பியது. இதன் அம்சங்கள் இரண்டு சாவிகள் (பரலோக சாவிகள்), போப்பின் கிரீடம், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்கள். இந்த கொடி கத்தோலிக்க மதத்தின் அதிகாரத்தையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது.

5. பிரேசில் நாட்டின் கொடி:

The Flag of Brazil
The Flag of BrazilImg credit: Wikipedia

பல நாடுகளின் கொடிகளில் எந்த எழுத்தும் இல்லை. ஆனால் பிரேசில் கொடியில் ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது. “Ordem e Progresso” (ஒழுக்கமும் முன்னேற்றமும்). வானியல் அடிப்படையில் அமைந்த நட்சத்திரங்கள். இது அறிவியல், ஒழுக்கம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றின் இணைப்பை காட்டும் தனித்துவமான கொடியாகும்.

6. கம்போடியா நாட்டின் கொடி:

The Flag of Cambodia
The Flag of CambodiaImg credit: Wikipedia

கம்போடியா கொடியில் உலகப் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோவில் இடம்பெற்றுள்ளது. உண்மையான கட்டடம் நேரடியாக வரையப்பட்ட ஒரே தேசிய கொடி. நாட்டின் பண்பாட்டு பெருமையை வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
ஏழு நூற்றாண்டுகளாக பழிவாங்கும் ஒரு வைரத்தின் கதை: பல சாம்ராஜ்ஜியங்களை வேரோடு அழித்த சாபம்!
The  studies of flags

7. பெலிஸ் நாட்டின் கொடி:

The Flag of Belize
The Flag of BelizeImg credit: Wikipedia

பெலிஸ் கொடி மிகுந்த விவரங்களுடன் அமைந்துள்ளது. இரண்டு மனிதர்கள், மரம் வெட்டும் கருவிகள், தேசிய சின்னம். மனிதர்கள் இடம்பெற்றிருப்பது இந்த கொடியை மற்ற கொடிகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

8. கிரிபட்டி நாட்டின் கொடி:

The Flag of Kiribati
The Flag of KiribatiImg credit: Wikipedia

பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபட்டி தீவின் கொடி இயற்கை அழகை பிரதிபலிக்கிறது. கடலில் உதிக்கும் சூரியன், பறக்கும் பறவை, அலைகள். இது மனிதன் மற்றும் இயற்கை இணைப்பை அழகாக காட்டுகிறது.

9. மால்டா நாட்டின் கொடி:

The Flag of Malta
The Flag of MaltaImg credit: Wikipedia

மால்டா கொடியில் ஜார்ஜ் கிராஸ் என்ற சின்னம் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரில் மக்கள் காட்டிய வீரத்திற்காக வழங்கப்பட்டது. ஒரு போர்க் கௌரவம் கொடியில் இடம் பெற்றிருப்பது அரிது.

இதையும் படியுங்கள்:
சாதாரண மனிதன் to சரித்திர நாயகன்! 'அண்ணா' தமிழகத்தின் 'இதயக்கனி' ஆன கதை!
The  studies of flags

விசித்திர கொடிகள் ஏன் உருவாகின்றன?

நாட்டின் தனித்துவத்தை வெளிப்படுத்த, வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்த, மதம், கலாசாரம், போராட்டம், இயற்கை ஆகியவற்றை காட்ட, உலக நாடுகளிடையே வேறுபட்டு நிற்க உலகின் விசித்திரமான கொடிகள் ஒவ்வொன்றும் ஒரு நாட்டின் வரலாற்றுப் புத்தகமாக விளங்குகின்றன.

கொடிகளை ஆய்வு செய்யும் வெக்ஸிகோலஜி என்ற துறை, இத்தகைய வேறுபாடுகளை நமக்கு புரியச் செய்கிறது. எனவே, ஒரு கொடி வெறும் துணி அல்ல; அது ஒரு நாட்டின் ஆன்மா, தியாகம் மற்றும் கனவுகளின் சின்னம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com